அடுத்த நாள் காலைல.
ரஞ்சித் தாத்தா கிட்ட பேசுறான்
ரஞ்சித் : தாத்தா டெய்லி காலைல நீ கஞ்சி தான் குடிக்குற.
தாத்தா : ஆமா இது தான் ஆரோக்கியம், உங்கள மாதிரி, pizza, பர்கர் லாமா சாப்பிடுவாங்க.
ரஞ்சித் : ஆமா நாங்க லாம் டெய்லி காலைல pizza தான் சாப்புடுறோம், போவியா. நான் சென்னைல தான இருக்கேன், foriegn ல இருக்க மாரி பேசிட்டு இருக்க.
தாத்தா : ஆமா டா கிராமத்துக்கு ஒரு ஒழுக்கம் இருக்கு டா. இங்க உங்கள மாதிரி நிறைய பொண்ணுங்க கூட பசங்க சுத்த மாட்டாங்க.
ரஞ்சித் : நான் நிறைய பொண்ணுங்க கூட சுத்துறத நீ பாத்த, நானே எந்த பொண்ணும் என்ன பாக்காம, இங்க ஒரு அழகான பொண்ணு புண்ணியத்தால லவ் பண்ணிட்டு இருக்கேன்.
தாத்தா : நீ லவ் பண்றியா, நம்ம ஊரு பொண்ண.
ரஞ்சித் : இந்நேரத்துக்கு உனக்கு தெரிஞ்சு இருக்கணுமே, குயிலி இருக்கால, அன்னைக்கு கோயில்ல பாத்தியே, நம்ம வீட்ல வேலை செய்யுறானே கமலோட தங்கச்சி.
தாத்தா : சரி சரி, சீக்கிரத்துல கல்யாணம் பண்ணு, கல்யாணத்துக்கு என்னையும் கூப்டு.
ரஞ்சித் : நீ இல்லாம என் கல்யாணமா, உன் கழுத்துல தான் தாலியே கட்ட போறேன்.
தாத்தா : என்னது.
ரஞ்சித் : சாரி தாத்தா, நீ தாலி உன் கையால எடுத்து குடுத்தா தான் தாலி கட்டுவேன்னு சொன்னேன்.
ரகு வரான், ரஞ்சித் கிட்ட. கால்ல அடிபட்டதுனால தாங்கி தாங்கி நடந்து வரான்.
ரஞ்சித் : டேய் இப்போ கால் பரவா இல்லையா.
ரகு : நேத்தோட பரவால்ல டா.
ரஞ்சித் : ஆமா டா MLA ஆளுங்க இன்னைக்கு வருவாங்கல.
ரகு : பின்ன MLA விட்ருவானா.
ரஞ்சித் : கோவிந்தன் இருக்க தைரியத்துல தான் இருக்கேன்.
திடிர்னு ரஞ்சித் உடும்புல எதோ பூந்த மாதிரி உடம்ப பண்ணுறான். ஒரே இடத்தை மொறைச்சு பாக்குறான்.
ரகு : ரஞ்சித் மச்சான், என்னாச்சு.
ரஞ்சித் : நான் கோவிந்தன் வந்து இருக்கேன்.
ரகு : ஐயா சொல்லுங்க.
ரஞ்சித் : MLA ஆளுங்க வந்துட்டு இருக்காங்க, என்னால உனக்கு இந்த வாட்டி உதவ முடியாது.
ரகு : ஏன் யா.
ரஞ்சித் : அவங்க கூட ஒரு பேய் ஒற்ற சாமியார் வரான். அவன் நல்லா பேய் ஓட்டுவான், அவன் கிட்ட நான் சிக்குனா, என்னய இந்த உலகத்த விட்டு அனுப்பிடுவான்.
ரகு : சரி ஐயா. நாங்க என்ன பண்றதுனு பாக்குறேன்.
ரஞ்சித் உடம்ப விட்டு பேய் போயிடுது, ரஞ்சித் அங்கேயே மயங்கி விழுந்துடுறான்.
MLA ஆளுங்க கதவ தொறந்துட்டு உள்ள வராங்க.
பிரவீன் பேசுறான்.
பிரவீன் : டேய் நேத்து ஒரு பேய் வந்து எங்கள அடிச்சிட்டீங்க, இன்னைக்கு பெரிய பேய் ஒற்றவர் கூட வந்து இருக்கேன். நிறைய ஆளுங்கல கூட்டுனு வந்து இருக்கேன்.
குடும்பத்துல இருக்கு எல்லாரும் ஒண்ணா இருக்காங்க.
பிரவீன் : டேய் எல்லாரையும் கட்டி போடுங்க, அந்த சேது, அவனோட சித்தப்பாவ தூக்கினு வாங்க, அவங்க மேல தான் வருண், வர்ஷினி வருவாங்க.
சேதுவையும், சித்தப்பாவையும் தூக்கினு போறாங்க.
பிரவீன் : டேய் இருங்க இருங்க, நேத்து ஒருத்தனுக்கு, பேய் பிடிச்சுதே, அவனையும் தூக்கினு வாங்க. அங்க ஒருத்தன் தூங்கினு இருக்கான் பாரு அவன தான் தூக்கிட்டு வாங்க.
வந்த அடியால் ஒருத்தன், ரஞ்சித்த எழுப்பி தூக்கி இடுப்புல வச்சுட்டு போறான்.
ரஞ்சித் : நான் எங்க இருக்கேன்.
அந்த ஆள் : என் மடியில.
சேது, சித்தப்பா, ரஞ்சித் மூணு பேரையும் MLA வீட்டுக்கு கூட்டினு போய்ட்டாங்க.
MLA பேசுறாரு,பிரவீன் கிட்ட.
MLA : டேய் இங்க ஏன் வந்தீங்க நம்ம வீட்ல வச்சு பேய் ஓட்டுனா,வெளிய தெரிஞ்சுடும் டா. நீ என் தங்கச்சி இருக்க பங்களாக்கு வந்துடு, அங்க gate க்குள்ள போன உடனே ஒரு சின்ன ரூம் இருக்கும், அங்கு வச்சு பேய் ஓட்டுங்க. நீங்க போயிட்டே இருங்க நானும் உங்க அண்ணியும் வேற வண்டில வந்துடுறோம். நீங்க போன உடனே பேய் ஓட்ட ஆரமிச்சுடுங்க.
பிரவீன் : சரி னா.
சேது வீட்ல, எல்லாரையும் கட்டி போட்டு இருக்காங்க.
ரகு கண்ணுல தண்ணி.
கீர்த்தி : டேய் ரகு ஏன் அழுவுற.
ரகு : வருண், வர்ஷினி, ரெண்டு பேரும் புனிதமான ஆத்மா, அவங்க ஆசை நிறைவேறாம இந்த உலகத்த விட்டு போக போறாங்க. இப்போ பேய் ஓட்டிட்டு இருப்பாங்க.
கீர்த்தி உடம்புல எதோ பூந்த மாரி இருக்கு, அவ பேசுறா, ரகு கிட்ட.
கீர்த்தி : என்ன தம்பி வேணும்.
ரகு : தம்பியா.
கீர்த்தி : நான் கோவிந்தன், உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, நான் இந்த உலகத்த விட்டு போனாலும் பரவா இல்ல , உங்களுக்கு வேண்டியத செஞ்சிட்டு தான் போவேன்.
ரகு : எனக்கு வருண், வர்ஷினி ஆசை நிறை வேறனும்.
கீர்த்தி : MLA வ கொன்னுடுறேன், வருண் ஆசை படி.
ரகு : ஸ்ரீதேவியும் கொன்னுடு வர்ஷினி ஆசை படி.
கீர்த்தி : ஆனா அதுக்கு வருண் வருத்த படுவானே.
ரகு : நியாயம்னு ஒன்னு இருக்கு,ஸ்ரீதேவி சாகனும்.
கீர்த்தி : நான் இப்போ போகலாமா.
ரகு : இரு, யாரு உடும்புல போய் , நீ அவங்கள கொல்ல போற.
கீர்த்தி : நீங்களே சொல்லுங்க.
ரகு : MLA எதிரி கிரினு ஒருத்தன் இருக்கான், அவன் உடும்புல போய் கொன்னா, யாருக்கும் பிரச்னை வராது.
கீர்த்தி : சரி நான் போறேன் தம்பி.
கோவிந்தன், கீர்த்திய விட்டு போயிடுறாரு.
கீர்த்தி மயங்கிடுறா.
MLA வீட்ல, வெளிய ஒரு ரூம் வச்சுட்டு பேய் ஓட்டிட்டு இருக்காங்க. பேய் ஒற்றவர் பேரு குரு.
குரு, ரஞ்சித் மேல மந்த்ரம் சொல்லி தண்ணி தெளிக்குறாரு.
ரஞ்சித் : ஐயா நீங்க என் மேல எவளோ தண்ணி தெளிச்சாலும் என் மேல பேய் வராது யா.
குரு : நேத்து உன் மேல பேய் வந்துச்சுல.
ரஞ்சித் : ஐயா, அது ரகுவோட friend யா. ஏன் தீயணைப்பு வண்டி வந்து தண்ணி அடிச்சாலும், நீங்க மந்திரம் சொன்னாலும் பேய் வராது.
MLA, ஸ்ரீதேவியோட, அவர் தங்கச்சி இருக்க பங்களாக்கு வந்துடுறாரு. MLA பேய் ஒற்ற ரூம் குள்ள போறாரு.
MLA,குரு கிட்ட பேசுறாரு.
MLA : என்ன சாமி, பேய் வந்துச்சா.
குரு : எங்க வந்துச்சு.
MLA : நீங்க என்ன பண்ணுங்க, சேதுவ அடிங்க, வருணும் வர்ஷினியும் பதறிட்டு வருவாங்க. உங்களுக்கு அவங்க கதை முழுசா தெரியாதுனு நினைக்கிறன்.நான் வீட்டுக்குள்ள போறேன்.நீங்க பேய் ஒட்டிட்டு தான் என்ன வந்து பாக்கணும்.
MLA ரூம் விட்டு வெளிய வந்து. பிரவீன் கிட்ட பேசுறாரு.
MLA : டேய் பிரவீன், நம்ம ஆளுங்க எல்லாரையும் கூட்டுனு நீ கிளம்பு, இன்னைக்கு உங்களுக்கு லீவ்.
பிரவீன் : அண்ணா உங்கள தனியா விட்டுட்டு எப்படி போறது.
MLA : டேய் நமக்கு பேய்யே பாதுகாப்பு டா.
பிரவீன் : சரி னா.
MLA வீட்டுக்குள்ள போறாரு.
ஸ்ரீதேவி : ரூம் குள்ள யாரு பேய் ஒற்றாங்க.
MLA : வருண், வர்ஷினி பேய்ய,கொலை பண்ணா, இது மாதிரி லாம் வரது சகஜம் தான்.அப்பறம் என் தங்கச்சி கீழ் ரூம்ல இருப்பா, நீ பயப்பட வேணாம் நம்ம மேல் ரூம்ல இருப்போம்.
MLA வும் ஸ்ரீதேவியும் மேல போய்ட்டாங்க.
வெளிய பிரவீன், அவன் ஆளுங்க கிட்ட பேசுறான்.
பிரவீன் : நம்ம MLA நம்மள போ சொல்டார்னு நம்ம போய்ட கூடாது. நம்ம அண்ணன் அப்படி தான் சொல்வாரு, நம்ம ஆளுங்க ஒரு அஞ்சு பேரு வீட்டு வாசல்ல கார் வச்சிட்டு இருங்க. நான் போறேன். அண்ணன் safety தான் டா first, உஷாரா இருக்கணும்.
பிரவீன் கிளம்பி போய்ட்டான்.
பேய் ஒற்ற ரூம்ல. குரு, சேதுவோட உள்ளங்கைய கத்தி வச்சு அறுக்குறான்.
வருண், சித்தப்பா மேலயும், வர்ஷினி, சேது மேலயும் வந்துடுறாங்க. குரு அவங்க மேல தண்ணிய தெளிச்சு மந்திரம் சொல்லிட்டு இருக்காரு.
MLA வோட எதிரி கிரி அவன் வீட்ல இருக்கான். கிரி கிட்ட ஒருத்தன், ஒரு பொண்ண விட்டுட்டு போறான், அந்த பொண்ணு கிட்ட, கிரி சார் உன் காலேஜ் படிப்புக்கு காசு தருவாருன்னு சொல்லிட்டு போறான். கிரி அந்த பொண்ண கூட்டிட்டு வீட்டு குள்ள போறான். அந்த பொண்ண, அவன் bed ரூம் கூட்டிட்டு போறான்.அந்த பொண்ண தொடுறான்.
அந்த பொண்ணு : சார், என்ன இப்படிலாம் பண்றிங்க, படிப்புக்கு காசு தந்து உதவி பண்றேன்னு சொன்னிங்க.
கிரி : இப்பவும் தரேன்னு தான் மா சொல்றேன்.
அந்த பொண்ணு : சார் நீங்க நினைக்குறது எல்லாம் என்னால பண்ண முடியாது. நான் போறேன்.
கிரி : என்னமா புரியாத பொண்ணா இருக்க, நீ ஒத்துழைச்சாலும் உனக்கு காசு உண்டு, நீ முரண்டு புடிச்சாலும் காசு உண்டு. ஏன்னா நான் என்ன பண்ண நினைக்கிறேனோ, அத பண்ணிடுவேன்ல.
அந்த பொண்ணு : சரி நான் தண்ணி குடிச்சுட்டு வரேன்.
கிரி : சரி போ, ஆனா நீ இங்க இருந்து தப்ப முடியாது.
அந்த பொண்ணு தண்ணி குடிக்கிற மாதிரி தப்பிச்சு ஓடுது.
கிரி : டேய் பாண்டி அந்த பொண்ணு ஓடுது பாரு புடி.
பாண்டி, கிரியோட பிஸ்னஸ் பாத்துக்குற மேனேஜர்.
பாண்டி mind வாய்ஸ் : எப்பா, இந்த பொண்ணு தொடுறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குதே, ரொம்ப அழகா இருக்கானு நினச்சேன், இப்போ எப்படி உழுந்து புரண்டு அந்த பொண்ணு புடிக்கிறேன் பாரு.
பாண்டி ஓடி போய், அந்த பொண்ண புடிக்க போறான்.
கிரி உடும்புல எதோ புகுந்தா மாதிரி பண்றான்.
பாண்டி : இந்தாங்க அய்யா இந்த பொண்ண புடிச்சிட்டேன்.
கிரி : அந்த பொண்ண யார் உன்ன புடிக்க சொன்னா.
பாண்டி : ஐயா நீங்க தான் சொன்னீங்க.
கிரி : நீ போய் நம்ம கார்ல, டிரைவர கூட்டிட்டு போய், அந்த பொண்ண வீட்ல விட சொல்லு.
பாண்டி என்ன ஆச்சு இவருக்குனு பாக்குறான்.
கிரி : போடா இது கோவிந்தன் உத்தரவு.
பாண்டி : கோவிந்தனா.
கிரி : கிரி உத்தரவு பா.
கிரி : ஏன்மா பொண்ணு இங்க வா.
அந்த பொண்ணு கிரி கிட்ட போறா, கிரி போட்டுட்டு இருந்த தங்க செயின கழட்டி குடுக்குறான், போய் படிப்பு செலவுக்கு வெச்சுக்கோ.அந்த பொண்ணு ஆச்சர்யமா பாக்குது.
கிரி : டேய் பாண்டி, அந்த பொண்ணு இங்க இருக்கட்டும், நீ போயி கார் இங்க எடுத்துட்டு வர சொல்லு டிரைவர.
கிரி : ஏய் பொண்ணு இங்க வா, உனக்கு காசு போதுமா.
அந்த பொண்ணு : போதும்.
கிரி : கிரி உன் கிட்ட நடந்துகிட்ட விதம் தப்பு தான.
அந்த பொண்ணு : ஆமா நீங்க பண்ணது தப்பு தான்.
கிரி : கிரிய உனக்கு என்ன பண்ணா சந்தோஷம் வரும்.
அந்த பொண்ணு : அரைஞ்சா.
கிரி : அரைஞ்சா போதுமா, கிரி ஜெயிலுக்கு போணுமா.
அந்த பொண்ணு : ஜெயிலுக்கு தான் போனும்.
கிரி : நாளைக்கு நியூஸ் பேப்பர் வாங்கி பாரு, நீ ஆசை பட்டது நடக்கும்.
கார் வந்துடுச்சு, அந்த பொண்ணு ஒரு குழப்பதோடு, கிரிய பாத்துனே போகுது.
கிரி : பாண்டி இன்னொரு கார் இருக்கா.
பாண்டியன் : இருக்கு ஐயா, ஆனா டிரைவர் இல்ல.
கிரி : நானே ஒட்டிக்கிறன்.
கிரி உடும்புல, கோவிந்தன் இருக்கான், MLA வீட்டுக்கு போய்ட்டு இருக்கான்.
பேய் ஒற்றவர், சித்தப்பா மேல தண்ணி தெளிச்சு, மந்திரம் சொல்ராரு. சித்தப்பா மயங்கிடுறாரு.
பேய் ஒற்றவர் : இங்க பாரு வர்ஷினி, உன் தம்பிய இந்த உலகத்த விட்டு அனுப்பிட்டேன். அடுத்தது நீ தான்.
பேய் ஒற்றவர், வர்ஷினி மேல தண்ணி தெளிச்சு, மந்திரம் சொல்றாரு.
MLA இருக்க,ரூம்குள்ள ஸ்ரீதேவி உள்ள போறா. MLA, ஸ்ரீதேவி கிட்ட பேசுறாரு.
MLA : ஏண்டி யம்மா ஏன் கத்திய எதோ கொல பண்ரா மாதிரி எடுத்துட்டு வர, ஆப்பிள் தான வெட்ட போற
MLA வும் ஸ்ரீதேவியும் பேசிட்டு இருக்காங்க.
bedல MLA படுத்துட்டு இருக்காரு, ஸ்ரீதேவி உட்கார்ந்துட்டு இருக்கா.
MLA : நான் பிஸ்னஸ் லாம் உன் பேர்ல, எழுதி, உன்ன நிர்வாகம் பண்ண சொல்லிட்டேன்னு உனக்கு கோவம் இல்லையே, உனக்கு இப்போ வேல அதிகம் ஆகிடிச்சுல. நான் என்ன பண்றது கட்சி வேலையும் பாத்துட்டு,இதையும் பாக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு. அப்பறம் உன் கிட்ட ஒன்னு காட்டணும்.
MLA ஒரு போட்டோ எடுத்து, ஸ்ரீதேவி கிட்ட காட்றான்.
MLA : இவன் தான் கிரி, நம்ம எதிரினு வச்சுக்கோயேன். இவனோட தம்பிய நானே என் கைய்யால கொன்னேன், பதிலுக்கு அவன் என் தங்கச்சிய கொள்ளணும்னு நினைச்சான், ஆனா அவ ஒரு மன நலம் பாதிக்க பட்டவ, அதும் இல்லாத என் தங்கச்சி மேல எனக்கு பெரியு அன்புலாம் இல்ல, என் அம்மாவோட கடைசி ஆசைக்கு தான் நான் அவள பாத்துக்கிறேன்னு, அவனுக்கு புரிஞ்சிடுச்சு, அதனால தங்கச்சி மேல கை வைக்கல. இப்போ எனக்கு என்ன பயம்னா உன்ன அவன் ஏதாச்சு பண்ணுவனோனு தான். எப்பவும் நம்ம ஆளுங்க நீ வெளிய போகும் போது உன் கூட தான் வர போறாங்க ஆனாலும், நமக்கு ஆகாதவங்கள நீ தெரிஞ்சுக்கணும்ல.
ஸ்ரீதேவி, ஆப்பிள வெட்டி, MLA க்கு ஊட்டி விடுறா.
MLA ஸ்பீக்கர்ல போன போட்டு பேசிட்டு இருக்காரு. அவரு பேசிட்டு இருக்க ஆள் பேரு கஜா.
கஜா : டேய் தம்பி, கல்யாணம் ஆனதுல இருந்து எனக்கு அதிகமா கால் பண்ண மாற்ற.
MLA : உங்களுக்கு தெரியும்ல னா இப்போ பிஸ்னஸ் கூடி போச்சு, வேல அதிகம் ஆகிடுச்சு.
கஜா : தம்பி கல்யாண வாழ்க்கை நல்லா இருக்கா.
MLA : இவளோ நாள் என்ன, அவள பாக்காம பண்ண கடவுள் நினைச்சு வருத்த படுறதா இல்ல இப்பயாச்சும் காட்டுனானேனு நினைச்சு சந்தோஷ படுறதான்னு தெரியல.
கஜா : உன் பொண்டாட்டி யோட தம்பிய கொன்னுட்டியாமே.
MLA ஸ்ரீதேவிய, நெளிஞ்சு பாக்குறான்.
MLA : அண்ணா வேற எதுனா பேசுவோம்.
கஜா : டேய் சொல்லணும்னு நினச்சேன், கிரி உன்ன ரெண்டு நாள்ல உன்ன கழுத்து அறுத்து போடுண்ணனும் பேசிக்கிட்டதா கேள்வி பட்டேன். கொஞ்சம் ஜாக்கிறதையா இரு.
MLA : பூலோகத்துல, எமன் இல்லனு, ஸ்பெஷலா படைச்ச படைப்புனா நான், கிரி என்ன கொன்னுடுவானா, என் கழுத்துல கத்தி வைக்க யாருக்கு தைரியம் இருக்கு.
MLA கழுத்துல, யாரோ கத்தி வைக்குறாங்க, MLA திரும்பி பாத்தா, ஸ்ரீதேவி, ஒரு சிரிப்போட MLA வ பாக்குறா. MLA மூஞ்சு பயத்துல இருக்கு.
கஜா போன்ல, சத்தமா சிரிக்கிறாரு.
கஜா : ஆமா டா தம்பி உன் கழுத்துல, யாரால கத்தி வைக்க முடியும்.
ஸ்ரீதேவி, MLA கழுத்து அறுத்துடுறா, MLA போன கட் பண்ணிடுறா.
MLA வலில துடிக்குறாரு, ஸ்ரீதேவி அவன பாத்து பேசுறா.
ஸ்ரீதேவி : டேய் நீ மாட்டுவனு தான் இவளோ நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீ எனக்கு மரியாதைய பிச்சையா தந்தல, நான் உனக்கு இந்த உலகத்துல இருந்து விடுதலை தரேன்.
என்னால ஏன் உன்ன கொள்ளாம இருக்க முடில தெரியுமா, வருண் என் தம்பி, என் பெத்தவன் கூட, நான் சாம்பாரிச்சு உன்ன பாத்துக்குறேன்னு சொல்லல, அவன போய் கொன்னுட்டியே டா. அப்பறம் வர்ஷினிய கொல்லாதனு உன்ன எவளோ கெஞ்சுன, என்கிட்ட சரினு சொல்லிட்டு, அவள கொன்னுட்டல. நீயும் இப்போ மேல போ.
சொல்லிட்டு ஸ்ரீதேவி MLA கழுத்த, சரமாரியா குத்துறா.
ஸ்ரீதேவி கீழ இறங்கி வரா,MLA தங்கச்சி கதவ திறந்துட்டு வரா. ஸ்ரீதேவி, அவள பாத்த உடனே பயந்துடுறா. MLA தங்கச்சி, அவள பாத்த உடனே கட்டிபுடிக்க கூப்புடுறா. ஸ்ரீதேவி, கத்திய பின்னாடி மறச்சுக்கிட்டு, அவ கிட்ட போறா, ஸ்ரீதேவி, அவள கண்ண மூட சொல்லுறா, MLA தங்கச்சி கண்ண மூடுன உடனே, கழுத்த அறுத்துடுறா.
ஸ்ரீதேவி, திரும்பி பாக்குறா, வீட்டு வேலைக்காரி, அவள பாக்குறா. வேலைக்காரி பேசுறா.
வேலைக்காரி : நீங்க பண்ணது கரெக்ட் மா இவள லாம் கொன்னது தான் கரெக்ட், என்ன வீட்டு வேலைக்குனு கூட்டினு வந்தாங்க ஆனா இந்த பைத்தியம் கூட படுக்கவும் வச்சாங்க, அவ என்னோட உடம்பெல்லாம் கடிச்சு வச்சிடுவா, இவ செத்தது தான் கரெக்ட். அந்த MLA வும் கொன்னுடுங்க மா, அவன் கிட்ட அவன் தங்கச்சி இப்படி எல்லாம் பண்றான்னு சொன்னதுக்கு என்ன அந்த அடி அடிச்சான், MLA வும் கொன்னுடுங்க மா.
ஸ்ரீதேவி : MLA செத்துட்டான்.
வேலைக்காரிக்கு ஆச்சர்யம்.
வேலைக்காரி : நீங்க நல்லா இருப்பிங்க மா.
கோவிந்தன் கிரி உடும்புல வந்துட்டான் MLA வீட்டுக்கு. MLA ஆளுங்க வீட்டுக்கு வெளிய, கிரி வீட்டுக்கு வந்தத, பாத்துட்டு, அவன் அடிக்க கத்தியோட போறாங்க, கிரி அவங்கள அடிச்சு அந்த இடுத்த விட்டு விரட்டிடுறான். கிரி, MLA வீட்டுக்குள்ள போறான்.
ஸ்ரீதேவி, வேலைக்காரிய, அங்க இருந்து கிளம்ப சொல்றா, சொல்லிட்டு திரும்புறா கிரி ஸ்ரீதேவி முன்னாடி நிக்குறான்.
ஸ்ரீதேவி முழிக்குறா. கிரி, MLA தங்கச்சி செத்து கிடைக்கறத பாக்குறான், ஸ்ரீதேவி கைல கத்தி இருக்கறத பாக்குறான். கிரி, ஸ்ரீதேவி கிட்ட பேசுறான்.
கிரி : நீ தான், அவள கொன்னியா.
ஸ்ரீதேவி பேசாம நிக்குறா.
கிரி : நான் கிரி இல்ல, கிரி உடும்புல நான் புகுந்து இருக்க பேய், என் பேரு கோவிந்தன்.
ஸ்ரீதேவி : நான் தான் கொன்ன.
கிரி : MLA.
ஸ்ரீதேவி : அவரும் செத்துட்டாரு, நான் தான் கொன்னேன்.
கிரி : நீ வருண், வர்ஷினிக்கு துரோகம் பண்ணிட்டனு நாங்க நினைச்சோம் ஆனா நீ பகைய மனசுல வச்சுட்டு காத்து இருந்து இருக்க. நான் இப்போ கிரி உடம்புல இருந்து வெளிய போய்டுவேன், அவன் மயங்கி விழுவான், அவன கொன்னுடுங்க. MLA அடி ஆளுங்க பாக்கும் போது, கிரி, MLA வையும், அவன் தங்கச்சியையும் கொன்னதால நீ கிரிய கொன்னதா இருக்கட்டும்.
ஸ்ரீதேவி, வேலைக்காரிய வெளிய அனுப்புறா, கோவிந்தன்,கிரி உடம்புல இருந்து வெளிய போன உடனே,மயங்கிடுறான். ஸ்ரீதேவி அவன கொன்னுடுறா.
ஸ்ரீதேவி, பிரவீன்க்கு போன் பண்ரா.
ஸ்ரீதேவி : பிரவீன், கிரி நம்ம வீட்டுக்குள்ள புகுந்து உங்க அண்ணனையும் அவர் தங்கச்சியையும், கொன்னுட்டான். நான் கிரிய கொன்னுட்டேன்.
பிரவீன் : நான் அண்ணன் பாதுகாப்புக்காக,5 பேர நிக்க வச்சேன், வீட்டு வெளிய, அவங்களையும் கிரி அடிச்சு அனுப்பி இருக்கான், அவங்க சொல்லி தான் நான் அங்க வந்துட்டு இருக்கேன். நீங்க பயப்புடாதீங்க, கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன்.
பேய் ஒற்றவர் ரூம்ல, ரஞ்சித் பாத்துட்டு இருக்கான், சித்தப்பா மயங்கி இருக்காரு.
பேய் ஒற்றவர், வர்ஷினி மேல மந்திரம் சொல்லி தண்ணி தெளிக்க. வர்ஷினி, கை எடுத்து கும்பிட்டு கெஞ்சுரா. ஸ்ரீதேவி கத்தியோட கதவு திறந்து உள்ள வரா, பேய் ஒற்றவர் கத்தில இருக்க, ரத்தம் பாத்து பயந்து பின்னாடி போறாரு.
ஸ்ரீதேவி, வர்ஷினிய பாத்து, நான் MLAவ கொன்னுட்டேன்னு சொல்றா. வர்ஷினி அழுதுட்டு, ஸ்ரீதேவி கால்ல விழுறா, ஸ்ரீதேவி கால்ல, வர்ஷினியோட கண்ணீர் துளி, வர்ஷினி, சேது உடம்ப விட்டு போயிடுறா, சேது மயங்கி விழுறான்.
பேய் ஒற்றவர், ஸ்ரீதேவிய பாத்து, நான் எதும் வெளிய சொல்ல மாட்டேன், என் குழந்தை மேல சத்தியம், நான் இல்லனா என் குடும்பம் நடு தெருவுக்கு வந்துரும், என்ன கொன்னுடாதீங்கனு சொல்றான். ஓடி போ இங்க இருந்துனு சொல்லி பேய் ஒற்றவர விரட்டி விட்டுடுறா ஸ்ரீதேவி. பக்கத்துல ரஞ்சித் பேசுறான் ஸ்ரீதேவி கிட்ட, நானும் உங்களுக்கு நியாயம் கிடைக்கணும்னு நினைச்சவன் தான் மேடம், நான் இன்னொசென்ட் boy,என்ன கொன்னுடாதீங்கனு சொல்றான். ஸ்ரீதேவி ரஞ்சித் கிட்ட பேசுறா,சேது மயங்கி இருக்கான்ல, அவன போல நீயும் மயங்கி இருக்க மாதிரி படுத்தக்கோ. ஸ்ரீதேவி, அந்த ரூம் விட்டு வெளிய போயிடுறா.
பிரவீன், அடியாளுங்க கூட,வீட்டுக்கு வந்துடுறான். ஸ்ரீதேவி கிட்ட பேசுறான்.
பிரவின் : அண்ணி, நீங்க ஒன்னும் பயப்படாதீங்க. கிரிய கொன்ன கேஸ்ல நம்ம ஆளுங்க வேற யாருனா சரணடைய சொல்றேன். வேற யாராவது வீட்ல இருக்காங்கலா.
ஸ்ரீதேவி : பேய் ஓட்றதுக்கு ஆள் கூட்டுனு வந்தீங்கல, அந்த பேய் ஒற்றவன் பேய்ய பாத்து பயந்து ஓடிட்டான், மூணு பேரு உள்ள மயங்கி இருக்காங்க.
பிரவீன் : டேய் பாலா, அந்த மூணு பேரையும் தூக்கினு போய் கார்ல அவங்க வீட்ல விட்டுடு, போலீஸ் வர நேரம் ஆகிடிச்சு, பாத்து தொலச்சாங்கனா வம்பா போய்டும்.
சேது, சித்தப்பா, ரஞ்சித் எல்லாம் அவங்க வீட்டுக்கு போயிடுறாங்க. ரஞ்சித் MLA வீட்ல நடந்தது எல்லாம் வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்றான். எல்லார் முகத்துலயும் ஒரு சந்தோஷம்.
கீர்த்தி அப்பா : எப்படியோ பா எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது, இப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம். ரகு, ரஞ்சித் ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு போலாம் பா. இங்க இருங்க.
ரகு சரினு தலைய ஆட்டுறான்.
BINABASA MO ANG
நண்பன் ஒருவன் வந்த பிறகு
Humorமூன்று நண்பர்கள் பத்தின காமெடி கதை .சிரிச்சு முடியலனா என்ன கேட்காதீங்க .