அத்தியாயம் 11

3 0 0
                                    


அடுத்த நாள் காலைல 10 மணி.

ரஞ்சித் : எப்பவும் காலைல இந்த பேயுங்க ஓடி ஆடி விளையாடிட்டு இருக்குங்க, இப்போ பேய் இல்லாம வீடே விறிச்சோடி போச்சு.

ரகு : பேய்ங்கள நக்கல் பண்ணாத. உன் மேல ஏறிக்க போகுது.

ரஞ்சித் : பேயுங்க என்ன எப்பவுமே நம்ம மேலயே இருக்க போறா மாதிரி, சில பேயுங்க நைட்ல வருங்க, நம்ம வருண் வர்ஷினி போல பேய்ங்க மார்னிங் 10 மணிக்கு attendance போட்டுட்டு அதுங்க வேலைய பாக்க போயிடுதுங்க, நம்ம வீட்ல இருந்த பேயுங்க கிட்ட punctuality ah காத்திகனேன் பா.

ரகு : கத்துக்கோ கத்துக்கோ.

ரஞ்சித் : டேய் ரகு, ரொம்ப நாள் ஆச்சு வா கிரிக்கெட் ஆடலாம். பேட், பால் லாம் இருக்கு.

ரகு : எங்க ஆடுறது.

ரஞ்சித் : ஏன்டா இவளோ பெரிய வீடு இருக்கு. இங்கயே ஆடுவோம்.

ரகு : சரி சேது, சித்தப்பா எல்லாம் வர சொல்லு.

எல்லாரும் கிரிக்கெட் விளையாடுறாங்க.
ரஞ்சித், பேட்ஸ்மேன் பின்னாடி கீப்பிங் பண்ணாம, இன்னொரு பேட் வச்சுட்டு நிக்குறான்.

ரகு : டேய் ரஞ்சித், என் பின்னாடி பேட் வச்சு ஆடுனா என் மேல பட்டுடோம் டா.

ரஞ்சித் : எனக்கு first பேட்டிங்கும் தர மாட்ட, போடா இப்படி தான் ஆடுவேன்.

சேது பால் போடுற மாதிரி வந்து, பால் போடாம நிறுத்திட்டான். அத கவனிக்காம ரஞ்சித் பேட்ட் சுத்திட்டான். ரகுக்கு கால்ல அடிப்பட்டுடிச்சு.

ரகு வலில துடிக்குறான். கீர்த்தி, ரஞ்சித்த திட்டுறா, ரகு கீர்த்திய கம்முனு இருக்க சொல்றான். கொஞ்ச நேரம் கழிச்சு பக்கத்துல இருக்க டாக்டர பாத்துட்டு வராங்க.

ரஞ்சித் : என்ன ரகு சொன்னாங்க டாக்டர், சாரி டா என்னால தான்.

ரகு : பருவால விடு, ரெண்டு நாள் நடக்க வேணாம்னு சொன்னாரு, pain கில்லர் கொடுத்து இருக்காரு.

கீர்த்தி அப்பா ரகுவ பாத்து feel பன்றாரு.

ரகு : பா எனக்கு ஒன்னும் இல்ல, ரெண்டு நாள்ல சரி ஆகிடும்.

கீர்த்தி அப்பா : அது இல்லபா, வீட்ல இருக்கறதே ஒரே ஒரு action ஹீரோ, அவனையும் இப்படி கால்ல அடிச்சு படுக்க வச்சிட்டாங்களே, இப்போ MLA ஆளுங்க வந்தா என்ன பண்றது.

ரஞ்சித் : பா நாங்க இருக்கோம் பா.

கீர்த்தி அப்பா : நான் போறேன், எனக்கு சோகம் தாங்க முடில. நீ கொஞ்ச நேரம் தூங்கு ரகு.

ரகு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்துக்குறான். எழுந்து பாத்தா, சித்தப்பா தண்டால் எடுத்துட்டு இருக்காரு, அவர் மேல ரஞ்சித் உட்கார்ந்து இருக்கான், சித்தப்பா வெயிட் தாங்க முடியாம தரையில விழுந்துடுறாரு.

ரகு : டேய் ரஞ்சித், என்ன டா நடக்குது இங்க.

ரஞ்சித் : டேய் MLA ஆளுங்க வந்தா சண்டை போட ரெடி ஆகிட்டு இருக்கோம். எங்கள disturb பண்ணாத. நாங்க சண்டை பயிற்சி எடுக்க போறோம்.

ரஞ்சித் : சித்தப்பா, உன் கால தூக்கி என் தல கிட்ட நீட்டு.

சித்தப்பா : சரி படு.

ரஞ்சித் : படுக்கணுமா.

சித்தப்பா : ஆமா டா நீ தான தலைல கால் வைக்கணும்னு சொன்ன.

தாத்தா : டேய் நீ சொல்றத நான் பண்ணுவேன்.

ரஞ்சித் : தாத்தா, பயிற்சில இருக்கும் போது வராத.

பாட்டி : டேய், தாத்தா ஆசை படுறாருல அவரையும் விளையாட்டுல செத்துக்கோ.

ரஞ்சித் : விளையாடிட்டு இருக்கோமா.

கீர்த்தி : ரஞ்சித் நானும் வரேன் டா.

ரஞ்சித் : நீ பூ மாதிரி soft இருக்க, நீ அடிச்சா யாருக்கு வலிக்க போகுது.

கீர்த்தி : டேய் நான் பாக்ஸிங்லாம் பாப்பேன் டா.

சித்தப்பா : டேய் ரஞ்சித் கம்முனு இரு டா பாப்பாவும் வரட்டும், கீர்த்தி மா, ரஞ்சித்த ஒரு அடி அடிச்சு காட்டுமா.

ரஞ்சித் : கீர்த்தி, கை போச்சுன்னா என்ன கேட்க கூடாது. பாத்துக்கோ.

கீர்த்தி : சித்தப்பா, அவன் கைய்ய புடிச்சிக்கோ.

ரஞ்சித் : ஏய் கைய்ய லாம் புடிக்க கூடாது.

சித்தப்பா, ரஞ்சித் கைய புடிச்சுக்குறாரு.

கீர்த்தி மூணு குத்து , ரஞ்சித் மூக்குலயே குத்துறா. ரஞ்சித் கண்ணுல தண்ணி வருது.

கீர்த்தி : சித்தப்பா, ரஞ்சித்த கவனிச்சிங்களா, என்னோட சண்டை போடுற திறன பாத்து அவனுக்கு ஆனந்த கண்ணீர் வருது.

ரஞ்சித் : ஆனந்த கண்ணீர் தான். கண்ணுல வரத பாத்தா, மூக்குல வர ரத்தத்த பாக்குல. சரி போதும் பயிற்சி, மேல ரூம்க்கு போறேன்.

சேது : ரஞ்சித், நானும் சண்டை பயிற்சி எடுக்கணும்.

ரஞ்சித் : அப்போ உன் தங்கச்சி அடிக்கிற அடிய நீ தாங்கணும், அழ கூடாது.

சேது : ஓகே டா.

ரஞ்சித் : கீர்த்தி இங்க வா, உங்க அண்ணன, என்ன அடிச்ச மாதிரி அடிச்சு காட்டு.

கீர்த்தி : ஓகே ஓகே.

ரஞ்சித் : இரு இரு நான் தள்ளி போயிடுறேன்.

சேது : மச்சான் நீ என் பின்னாடி ஒளிஞ்சுக்கோ, நான் தான அடி வாங்க போறேன்.

சித்தப்பா : நானும் சேது பின்னாடி ஒளிஞ்சுக்கிறேன்.

ரஞ்சித் : சித்தப்பா, ஒருத்தர் பின்னாடி ஒளிஞ்சா மறையிற பாடியா இது.

ரஞ்சித், சேது பின்னாடி நிக்குறான், கீர்த்தி கைய முறுக்கி குத்த போகும் போது குனிஞ்சுடுறான் சேது , ரஞ்சித் மூக்குல கீர்த்தி குத்திடுறா. ரஞ்சித் அழுவுறான்.

சேது : டேய், அடிவாங்குனா அழ கூடாதுனு சொல்லிட்டு, நீ அழற.

கீர்த்தி : ஏய் ஆமா ரூல்ஸ் படி, அடிவாங்குனா அழ கூடாது, இந்த ஆட்டம் கணக்குல இல்ல, வா ரஞ்சித் first ல இருந்து விளையாடுவோம்.

ரஞ்சித் : நான் ரகுவ பேட்டால அடிச்சுட்டேன்ல அதான் இவ நம்மள பழி வாங்குறான்னு நினைக்கிறன். நான் ரெஸ்ட் எடுக்குறேன், நீங்க பயிற்சி பண்ணுங்க.

கீர்த்தி : நம்ம மாஸ்டரே ரெஸ்ட் எடுக்குறாரு, நம்மளும் ரெஸ்ட் எடுப்போம்.

ரஞ்சித் : நம்மள அடிக்கவே பிளான் போட்டு வந்து இருக்கா.

எல்லாரும் ரெஸ்ட் எடுக்குறாங்க.

சாயுங்காலம் ஆகுது.

ரஞ்சித், கீர்த்தி அப்பாகிட்ட பேசுறான்.

ரஞ்சித் : பா ஏன் அப்படி சோகமா இருக்கிங்க, MLA ஆளுங்க இன்னைக்கு வர மாட்டாங்க.

கீர்த்தி அப்பா எதும் சொல்லாம இருக்காரு

ரஞ்சித் : நம்பளனா என் நாக்க பாருங்க.

ரஞ்சித் நாக்க காற்றான்.

கீர்த்தி : எதுக்கு பா இத காற்ற.

ரஞ்சித் : தெரியல, நாக்குல மச்சம். கரு நாக்கு பா. நான் சொல்றேன் MLA ஆளுங்க இன்னைக்கு வர மாட்டாங்க.

ரஞ்சித் சொல்லும் போதே கால்லிங் பெல் அடிக்குது. கீர்த்தி அப்பா போய் கதவ தொறந்தா, MLA ஆளுங்க நிக்குறாங்க.

MLA ஆளுங்கல்ல வந்தவங்கல, ஒருத்தன் பேரு பிரவீன், அவன் ரகு கிட்ட பேசுறான்.

பிரவீன் : டேய் தம்பி, என்ன நேத்து நல்லா இருந்த MLA ஆபீஸ்ல பாக்கும்போது இப்போ படுத்துனு இருக்க.

ரகு : கொஞ்சம் கால்ல அடி பட்ருச்சுனா. நடக்க வேணாம் ரெண்டு நாளைக்குனு டாக்டர் சொல்லி இருக்காரு.

பிரவீன் : சரி யாருக்கு இங்க வருண், வர்ஷினி பேய் புடிச்சு இருக்கு, அனுப்பிவிடுங்க எங்க கூட, அந்த பேய்கல ஓட்ட சொல்லி MLA சாமியாரையும் அனுப்பி இருக்காரு, பேய் கூட வரமாட்டேன் சொன்னா, அது கூட்னு போக தான் இந்த பேய் ஒற்ற சாமியார்.

ரகு : னா, அந்த பேயுங்க வீட்டு விட்டு போய்டுச்சுங்க னா.

பிரவீன் : அப்போவே எங்க MLA சொன்னாரு, இந்த குடும்பம் அந்த பேய்கள காப்பாத்த எதாவது முயற்சி பண்ணும், சும்மா விட்டுட்டு வராதீங்கனு. சொல்லுங்க யாரு இங்க சேது, அப்பறம் அவன் சித்தப்பா அவங்க ரெண்டு பேரு மேல தான் பேய் வரும்ன்னு சொன்னாங்க.

ரஞ்சித் : அவங்க இல்லனா வெளிய போய் இருக்காங்க.

பிரவீன் : டேய் இவங்க நம்ம வாயால பேசுனா புரிஞ்சிக்க மாட்டாங்க. இந்த ரகுக்கு கால்ல அடி பட்டு இருக்குல, அதே கால உடைங்க.

குடும்பமே வேணாம்னு கெஞ்சுது. பிரவீன், ஜோசப்னு ஒருத்தன அனுப்பி, ரகு கால் உடைக்க சொல்றான். ஜோசப் கட்டுல்ல படுத்துனு இருக்க ரகு கிட்ட போறான், ரஞ்சித், ஜோசப்ப புடிச்சுகிட்டு அண்ணா வேணாம்னானு சொல்றான்.

பிரவீன் : டேய் ஜோசப், அந்த பையன தள்ளி விட்டுட்டு, போய் அடி டா.

ஜோசப் : னா நல்லா இருக்கமா புடிச்சு இருக்கான் னா.

பிரவீன் : டேய் அவன் அவளோ வலுவான ஆள் மாதிரி தெரியலையே டா.

ஜோசப் : னா வலிக்குது வலிக்குது.

ஜோசப் கத்தினே இருக்கும் போது, அவன, ரஞ்சித் தல மேல தூக்கிட்டு நிக்குறா. குடும்பமே ஆச்சர்யமா பாக்குது.

பிரவீன் : யோவ் சாமியார், பேய் வந்துடுச்சு போல, எதாவது பண்ணுயா.

சாமியார், ரஞ்சித் கிட்ட போகாம, எதோ மந்திரம் சொல்லி, தண்ணிய தெளிக்குறார். ரஞ்சித் கோபமாகி, தலைக்கு மேல புடிச்சுனு இருந்த ஜோசப்ப, தூக்கிட்டு சாமியார் மேல போடுறான். அப்பறம் MLA ஆளுங்கள அடிக்கிறான்.MLA ஆளுங்க வெளிய ஓடி போயிடுறாங்க.

ரஞ்சித் மேல இருந்த பேய் இன்னும் அவன் மேல இருக்கு, தரையில உட்கார்ந்துட்டு இருக்கு.

ரஞ்சித்த சுத்தி, குடும்பமே உட்கார்ந்துட்டு இருக்கு. ரகு, ரஞ்சித் கிட்ட பேசுறான்.

ரகு : வந்து இருக்கறது வருணா.

ரஞ்சித் இல்லனு தலை ஆட்டுறான்.

ரகு : வர்ஷினியா.

இல்லனு சொல்றான் ரஞ்சித்.

ரஞ்சித் : நான் கோவிந்தன்.

எல்லாரும் முழிக்குறாங்க, யாரு கோவிந்தன்னு.

கீர்த்தி ரகு கிட்ட போய், டேய் ரகு, அன்னைக்கு ஒருத்தர் 60 வயசுல லவ் பண்ணி, அவரோட பையன் அவர அடிச்சு அவர் தற்கொலை பண்ணிக்கிட்டாருல, நீ கூட அவர் பையன் கிருஷ்ணன அடிச்சியே, அந்த செத்துப்போன அப்பா தான் டா கோவிந்தன்.

கீர்த்தி ரஞ்சித்த பாத்து பேசுறா.

கீர்த்தி : ஐயா, நீங்க யாருக்காக வந்தீங்க.

ரஞ்சித் : ரகு, தம்பிக்காக. அவரு என் பையன அடிச்ச பிறகு, அவன் தப்ப உணர்ந்துட்டான், என் போட்டோ முன்னாடி அழுது மன்னிப்பு கேட்டான். எனக்கு பெரிய நிம்மதி கிடைச்சது, என் புள்ள என்ன தப்பா நினைக்கலனு. அப்பறம் ரகு தம்பி கிட்ட நன்றி சொல்ல பாத்தேன், அப்போ தான் வருண் வர்ஷினி பிரச்னைய முடிக்க முயற்சி பன்றாருனு தெரிஞ்சுகிட்டேன். சரி தம்பிக்கு உதவியா இருக்கணும்னு முடிவு பண்ணி காத்துட்டு இருந்தேன், இப்போ வந்தேன்.

ரகு : நன்றி ஐயா.

ரஞ்சித் : நீ என்ன எப்போ நினைச்சாலும், நான் இந்த உலகத்த விட்டு, போற வரைக்கும் உதவி பண்ணுவேன், ஆனா பேய் ஒற்றவர் இருந்தா நான் அந்த இடத்துக்கு வரமாட்டேன், அவங்க இந்த உலகத்த விட்டுட்டு எங்கள அனுப்பிடுவாங்க.

ரகு : ஐயா, அப்பறம் எப்படி இன்னைக்கு வந்தீங்க, இன்னைக்கு ஒரு பேய் ஒற்றவர் வந்தாரே.

ரஞ்சித் : அவனுக்கு பேய் ஓட்டலாம் தெரியாது, ஏமாத்தி காசு பறிக்குறவன்.

பேசிட்டு இருக்கும் போதே, ரஞ்சித் உடம்ப விட்டு, கோவிந்தன் போயிடுறாரு. ரஞ்சித் மயங்கிடிறான்.

ரஞ்சித் தூங்கி எழுந்துக்குறான். ரஞ்சித், ரகு கிட்ட பேசுறான்.பக்கத்துல கீர்த்தி இருக்கா

ரஞ்சித் : ரகு, மச்சான் எனக்கு என்ன ஆச்சு.

ரகு : ஒரு பொம்பள பேய் உன் மேல வந்துச்சு.ரஞ்சித் மேல யாரும் கை வைக்க கூடாதுனு, அவன நான் தான் கொள்ளுவேன்னு சொல்லுச்சு.

ரஞ்சித் : யாரா இருக்கும்.

ரகு : எதாவது பொண்ணு உன்னால கஷ்ட்ட பட்டு இருக்கா.

ரஞ்சித் : ஆமா டா 8th standard படிக்கும் போது ஒரு பொண்ணு, கவிதான்னு,எனக்கு லவ் லெட்டர் குடுத்துது, நான் போய் டீச்சர் கிட்ட மாட்டி விட்டுட்டன்.

ரகு : அந்த பொண்ணு, கொஞ்ச நாள் முன்னாடி accidentல போய்டுச்சாம். அந்த பொண்ணு பேய் ஆகி உன்ன பாத்து இருக்கு, அது உயிரோட இருக்குறப்ப பாத்தத விட, அது பேய்யாகி பாக்கும் போது இவன் அழகா தெரியுரியான், அதுனால உன்ன கொன்னு பேய்யாக்கி கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கு.

ரஞ்சித் : ஒரு வேல எனக்கு பேய்கள் உலகத்துல பெரிய டிமாண்ட் இருக்கு போல டா.

ரகு : ஏன் அப்படி சொல்ற.

ரஞ்சித் : சென்னைல ஒரு பேய், என்ன பாத்து, ரா ரா சரசுக்கு ரா ரா னு பாட்டு பாடிச்சு, ஏன்னு இப்போ தான் புரியுது. நான் பேய் ஆகிட்டனா, என்ன சுத்தி பொம்பள பேய்யுங்களா இருக்கும்ல.

கீர்த்தி : டேய், பேய் ஆகுறேன்னு எதாவது பண்ணிக்க போற, இன்னைக்கு உன் மேல பேய்யா வந்தது கோவிந்தன்னு ஒரு ஆளு. பேய்ய நினச்சு மனச, அலப்பாய விடாத. குயிலி இருக்கா உனக்கு.

ரஞ்சித் : டேய் ரகு, இவளோ நேரம் கத உட்டியா.

ரகு : நீ பேய்கள் உலகத்துல பெரிய மன்மதனோ.

ரஞ்சித் : டேய் நீ தான் என் மனசுல ஆசைய வளர்த்த.

சேது இவங்க கிட்ட வரான்.

சேது : மச்சான் எனக்கு பயமா இருக்கு டா, நம்ம MLA ஆளுங்கல அடிச்சு அனுப்பி இருக்கோம். அவன் ஒன்னும் சாதாரண ஆளு இல்ல, நம்மள அப்டியே விட்டுட.

ரகு : கண்டிப்பா விட மாட்டான், மச்சான் அவன்.

சேது : நம்ம எதாவது பண்ணனும்ல safety க்கு.

ரகு : நீ பயப்படாத, கோவிந்தன் பேய்யா வந்து நம்மள காப்பாத்துவாரு. நிம்மதியா இரு.

நண்பன் ஒருவன் வந்த பிறகுDonde viven las historias. Descúbrelo ahora