அடுத்த நாள். காலைல பத்து மணி.
வழக்கம் போல, சேது மேலயும், சித்தப்பா மேலயும் பேய் வருது. அவங்க ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் நடந்து போறாங்க.
ரகு வருண் பேய் கூட பேசுறான்.
ரகு,வருன்னு கூப்பிடுறான், வருண் கொஞ்ச தூரம் நடந்து போய் திரும்பி பாக்குறான்.
ரகு : வருண், நான் உன்கிட்ட சில கேள்வி கேட்கணும்.
வருண் : சொல்லு.
ரகு : நீ ஏன் செத்து பேய்யான அப்பறம், MLA வ கொல்லல.
வருண் : நான் செத்த உடனே, நான் செத்துட்டேன்னு, என் ஆத்மா நம்பரத்துக்கும், ஏத்துக்கறதுக்கும் சில நாள் ஆச்சு, அப்பறம் ஒரு நாள் நைட் சுப்பு, ராம்கி, சண்முகத்த கொன்னேன், அது MLA எதிரி கிரி தான் கொன்னான்னு MLA நம்புனான். அப்பறம் MLA வ கொல்ல தான் போனேன், ஆனா அவர் ஸ்ரீதேவி அக்கா மேல ரொம்ப பாசமா இருக்கறத பாத்தேன், அந்த அக்கா நல்லா வாழனும் ஆசை பட்டேன், அது எதோ வகையில நடக்குது, நான் அவ சந்தோஷத்த பறிக்க கூடாதுனு நினைச்சு திரும்பி வந்துட்டேன். ஆனா அந்த MLA வ வர்ஷினி அக்காவ கொன்னதும் அவன கொல்லனும் முடிவு பண்ணி போனேன், அப்போ வர்ஷினி அக்கா பேய்யா வந்து ஸ்ரீதேவி அக்காவ தான் முதல கொள்ளுவேன், அவ துரோகினு கொல்ல போனா, அப்போதுல இருந்து தான், வர்ஷினி கொல்ல போகும் போது நான் தடுப்பேன். இப்போ ஸ்ரீதேவி அக்காவ கொல்ல வர்ஷினி அக்கா முயற்சி பண்றத கம்மி பண்ணிடுச்சு, நான் எப்படியும் அத தடுத்துடுவேன்னு. இப்போலாம் சேதுக்கு பேய் பிடிச்சாலும் அதான் ஓட மாற்றா, ஆனாலும் நான் அவ பின்னாடி நடந்து போவேன்.
சித்தப்பா மேலயும், சேது மேலயும் இருந்து பேய் போயிடுது. அவங்க மயங்கி விழுந்துடுறாங்க. கொஞ்சம் நேரம் கழிச்சு விழுந்த இடத்துல இருந்து எழுந்துக்குறாங்க.
சித்தப்பா : டேய் என்ன டா நடக்குது, இந்த வீட்ல, முதல எல்லாம் பேய் எங்க மேல இருந்து போய்டுச்சுனா, நாங்க மயங்குன உடனே தூக்கிட்டு போய் எங்க ரூம்ல போடுவிங்க, இன்னைக்கு அதே இடுத்துல விட்டுட்டு, ஆள் ஆளுக்கு வேலை பாத்துட்டு இருக்கிங்க.
ரஞ்சித் : சித்தப்பு, எல்லா உபசரிப்பும் கொஞ்ச நாளுக்கு தான், அது பேய்யா இருந்தாலும் சரி, மனுஷனா இருந்தாலும் சரி.
சித்தப்பா : அதெல்லாம் சரி டா. இன்னைக்கு ரொம்ப நேரம் பேய் என் உடும்புல இருந்துதா, உடம்பு ரொம்ப வலிக்குதுடா.
ரஞ்சித் : ஆமா. நான் தான் வருண் கிட்ட பேசிட்டு இருந்தேன், எதாவது பொம்பள பேய் உங்க friend ah இருக்கா, அடுத்த வாட்டி சித்தப்பா உடம்புல பொம்பள பேய்யா இறக்கி விடுங்கனு சொன்னேன்.
சித்தப்பா : டேய் இப்படிலாமா பேய் கிட்ட கேட்பாங்க, அதுக்கு வருண் என்ன சொன்னான்.
ரஞ்சித் : வருண் என்ன சொன்னானா, "நான் அவரு உடம்ப விட்டு போன அப்பறம்,ரெண்டு பொம்பள பேய், அவரு உடும்புல வர சண்டை போட்டுட்டு இருக்கு. நான் சொன்னேன் ரெண்டு பேயும் ஒரே நேரத்துல அவரு உடம்புக்குள்ள போகலாம் அவளோ பெரிய பாடி".
சித்தப்பா : ஒரே உடும்புல ரெண்டு பேய் கூட வருமாடா.
ரஞ்சித் : ஆமா சித்தப்பா, அது அது அவங்க சைஸ பொறுத்தது.
சித்தப்பா : டேய் என்ன டா சொல்ற.
ரஞ்சித் : உடம்பு சைஸ சொன்ன சித்தப்பா.
கீர்த்தி, ரகு கிட்ட பேசுறா.
கீர்த்தி : டேய் ஒரு பிரச்னை.
ரகு : என்ன அது.
கீர்த்தி : உன் மேல வர்ஷினி எறங்கி, சந்திரன்னு ஒருத்தன அடிச்சல, ரஞ்சித் மேல வருண் எறங்கி அவன் தம்பிய அடிச்சான்ல.
ரகு : ஆமா.
கீர்த்தி : அந்த சந்திரன், MLA க்கு தெரிஞ்சவன் போல, அவன் நீ விசாரிச்சத MLA கிட்ட சொல்லி இருக்கான், வருண் வர்ஷினியோட பேய் நம்ம சேது, சித்தப்பா மேல இருக்குனு.MLA எப்போ வேணா நம்மள கூப்பிட்டு அனுப்புவாருன்னு கணியன் போன்ல சொன்னாரு
ரகு : சரி என்ன வருதுன்னு பாப்போம்.
வெளிய கார் சத்தம் கேட்குது, ஒரு ஆளு வீட்டுக்குள்ள வராரு.
அந்த ஆள் : யாரு பா இங்க ரகு, உன்ன MLA நாலு மணிக்கு வந்து பாக்க சொன்னாரு. தனியா வர சொன்னாரு.
கீர்த்தி : கூட ஒருத்தர் ஆச்சும் வரலாமா.
அந்த ஆள் : எத்தனை பேர் வந்தாலும், உள்ள ரகு மட்டும் தான் போக முடியும்.
அந்த ஆள் போய்ட்டாரு.
கீர்த்தி அப்பா, சேது, சித்தப்பா, ரஞ்சித், ரகு எல்லாம் பேசிக்குறாங்க.
கீர்த்தி அப்பா : இல்ல பா நீ தனியா போய் MLA பாக்க வேணாம், நானும் வரேன்.
ரகு : இல்ல பா அவரு என்ன மட்டும் தான் வர சொல்லி இருக்காரு.
சேது : டேய் உன்ன அனுப்பிட்டு எப்படி டா நாங்க நிம்மதியா இருப்போம், நானாவது வரன்.
ரகு : டேய் கம்முனு இரு, உன்ன இவளோ நாள் வீட்லயே வச்சிட்டு இருந்ததுக்கு, அர்த்தம் இல்லாம போய்டும். நான் போறேன், எனக்கு ஒன்னும் ஆகாது.
கீர்த்தி அப்பா : நம்ம டிரைவர் கிட்ட சொல்றேன் பா, நீ அவன் கூட கார்ல போ. சாமி கும்பிட்டிட்டு போ பா.
நாலு மணி ஆச்சு, ரகு கிளம்பிறான்.
பாட்டி ரகு கிட்ட, கருப்பு சட்ட போடாத பா, அது நல்ல ராசி இல்லனு சொல்லுது. பாட்டி எனக்கு எப்பவுமே இது தான் ராசியான கலர்னு ரகு சொல்றான்.வீட்ல எல்லாரும் முகத்தலையும் கவலை தெரியுது. ரகு போய்ட்டான்
பாட்டி, சித்தப்பா கிட்ட பேசுது. சித்தப்பா துணி வாஷிங் machine ல போட்டுட்டு இருக்காரு.
பாட்டி : ஏன் பா நீயே சமைச்சுகிற, நீயே துணி தோச்சுக்குற, ஒத்தையா கஷ்ட்ட படுறதுக்கு, ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாமல்.
சித்தப்பா : ஆரமிச்சுட்டியா, நானா தோய்கிறேன் துணிய, machine தோய்க்கப்போகுது.
பாட்டி : ஆயிரம் சினேகிதன் இருந்தாலும், ஒரு பொண்ணு இருக்கறது ஒரு தெம்பு பா.
சித்தப்பா : மா எந்துருச்சு போ.
கீர்த்தி அங்க வரா.
கீர்த்தி : என்ன இங்க சத்தம், பாட்டி சித்தப்பா கல்யாண பேச்சு எடுத்தியா.
பாட்டி : வேற என்ன பேசுவன்.
கீர்த்தி : சித்தப்பா நீ கண்டிப்பா கல்யாணம் பண்ணனும்.
சித்தப்பா : நீயும் ஆரமிக்காதமா.
கீர்த்தி : சித்தப்பா எங்கள சின்ன வயசுல இருந்து, எவளோ நல்லா அன்பா பாத்துப்ப, நாங்க உங்க புள்ளைங்கள பாக்க வேணாமா.
கீர்த்தி அப்பா, கீர்த்திய கூப்பிடுறாரு. தோ வரேன்னு சொல்லிட்டு கீர்த்தி போய் அவ அப்பாவ பாக்குறா.
கீர்த்தி அப்பா : ரகு போய் மூன்ற மணி நேரம் ஆகுது, டிரைவர்க்கு போன் பண்ணேன், கால் போகல. ரகு நம்பர் குடு.
கீர்த்தி : நானே கால் பண்ணி பாக்குறேன்.
ரகுக்கு கால் போல.
கீர்த்தி அப்பா : என்னமா புதிரா இருக்கு. நீ அவன் நம்பர் குடு, நான் ட்ரை பண்றேன்.
கால் போகல.
ரஞ்சித் வரான்.
ரஞ்சித் : பா, ரகு கிட்ட ரெண்டு நம்பர் இருக்கு, நான் பண்றேன்.
கால் போகல.
சித்தப்பா மேல இருக்க ரூம் வெளில, சேது கிட்டயும், ரஞ்சித் கிட்டயும் பேசுறாரு.
ரஞ்சித் : சித்தப்பா எதாவது பண்ணு.
சித்தப்பா : நம்ம ஊர் தலைவர்க்கு, MLA ஆபீஸ் நம்பர் தெரியும். நான் அவர் கிட்ட பேசுறன்.
சித்தப்பாக்கு MLA ஆபீஸ் நம்பர் கிடைக்குது, போன் பன்றாரு. போன் பேசி முடிக்குறாரு.
சித்தப்பா : டேய் MLAவ பாத்துட்டு கிளம்பிட்டாங்கலாம் டா எப்பவோ.
ரஞ்சித் : அது எப்படி, எப்பவோ கிளம்புனவங்க, இன்னும் வராம இருக்காங்க.
சித்தப்பாக்கு ஒரு போன் வருது, அவங்க கிட்ட வேல செய்யுற வீரா பேசுறான், பேசி முடிச்ச உடனே, சித்தப்பா மூஞ்சு மாறுது.
சேது : என்ன சித்தப்பா மூஞ்சு ஒரு மாதிரி இருக்கு.
சித்தப்பா : டேய்.
சேது : சொல்லு சித்தப்பா.
சித்தப்பா : ரகு கைல சிங்கம் முகம் இருக்க காப்பு இருக்குமா.
சேதுக்கும், ரஞ்சித்க்கும் முகம் மாறுது.
ரஞ்சித் : இருக்கு.
சித்தப்பா : ஒரு கை மட்டும் வெட்ட பட்டு அரச மரத்தடில இருக்கான் டா.
ரஞ்சித்தும், சேதுவும் கைல இருக்க டம்ளர கீழ போட்டுட்டு,பதறி அடிச்சிட்டு படிக்கட்டுல இறங்கி ஓடுறாங்க, கீர்த்தி அம்மா, சேதுவ கை நீட்டி நீ வெளிய போக கூடாது டானு சொல்றாங்க. சேதுவும் ரஞ்சித்தும், ரொம்ப வேகமா ஓடுறாங்க,ஒரு கார் அவங்க மேல மோத வந்து, அவங்க கிட்ட நின்னுடுத்து, ரஞ்சித்தும் சேதுவும் கீழ விழுந்துடுறாங்க. கார்ல இருந்து ரகு இரங்குறான், ரஞ்சித்தும் சேதுவும், அவன் பாத்து தரைல அடிச்சிட்டு அழுவுறாங்க. ரகு என்ன டா ஆச்சுனு கேட்குறான், ரகுக்கு கீர்த்தி போன் பண்ரா.
கீர்த்தி : டேய் ஏன் உனக்கு போன் போல இவளோ நேரம். உனக்கு எதோ ஆகிடிச்சுனு ரஞ்சித்தும் சேதுவும் ஓடி போனாங்க.
அப்பறம் கார்ல ரகு, ரஞ்சித், சேது மூணு பேரும், ஒருத்தர் ஒருத்தர் பேசாம கம்முனு வராங்க.
கார் வீட்டுக்கு வந்துடுது. வீட்ல இருக்க எல்லாம் ரகுவ சுத்தி நின்னு, ஒன்னும் இல்லையே பா உனக்குன்னு கேட்குறாங்க.
வீரா, வீட்டுக்குள்ள வந்து, சித்தப்பா கிட்ட, சாரி னா அதே மாதிரி காப்பு ரகு தம்பிய போட்டு இருக்கறதுனால, அப்படி போன் பண்ணி சொல்லிட்டேன். ரஞ்சித், கோப பட்டு, வீராவ தள்ளி விடுறான், அறிவில்லையா உனக்குனு கேட்குறான். ரகு, ரஞ்சித்த இழுத்துட்டு போயிடுறான்.
கீர்த்தி அப்பா : என்ன ரகு, MLA என்ன சொன்னாரு.
ரகு : இனி வருண், வர்ஷினிய பத்தி யாருகிட்டயும், விசாரிக்க கூடாதுனு மிரட்டி விட்டுட்டாரு.
கீர்த்தி அப்பா : நல்ல வேலை பா. அதோட விட்டுட்டான்.
ரகு : இது அதோட முடியாது பா.MLA,அவன் ஆளுங்குள அனுப்பி, சேதுவும், சித்தப்பாவையும் தூக்கினு பேய் ஓட்ட பாப்பாங்க. அவங்க பேய் ஓட்டணும்னு என் முன்னாடி தான் பேசுனாங்க.
கீர்த்தி அப்பா : சரி எது நடக்கணுமோ நடக்கட்டும்.
ரகு தனியா நின்னு யோசிச்சிட்டு இருக்கான்.கீர்த்தி அவன் கிட்ட போய் பேசுறா.
கீர்த்தி : என்ன டா, சாப்பிட வரல, என்ன யோசிச்சிட்டு இருக்க.
ரகு : என்ன யோசிச்சிட்டு இருப்பன்னு நினைக்கிற.
கீர்த்தி : ரஞ்சித்தும் சேதுவும் உனக்கு எதோ ஆகிடுச்சுனு ஓடி வந்தத யோசிச்சிட்டு இருக்கியா.
ரகு : ஹ்ம்ம்,அதான். நான் காலேஜ் படிக்கும் போது என்னோட அனாதை ஆசிரமத்துல இருந்த பசங்க சில பேரு கூட போய் அனாதை பிணத்தை, சில பேரு எரிப்பாங்க, அவங்க கூட நான் ஒரு உதவிக்காக போவேன், எனக்கு அந்த வேல பண்ண புடிக்காது, ஆனா எனக்கு இருக்கிற பயம் என்ன அந்த வேலைய பண்ண வைக்கும், அது என்ன பயம்னா நாளைக்கு நான் செத்துட்டனா என் பொணத்த யாராவது எரிப்பாங்க, நம்ம பொணம் யாருமே எடுக்குறதுக்கு ஆளே இல்லாம இருக்காது.
ரகு கண்ணுல தண்ணி வருது.
கீர்த்தி : அழாத டா.
ரகு : ஆனா இப்போ அந்த பயம் இல்ல. ரஞ்சித்தும் சேதுவும் அழுதத பாக்கும் போது, முதல் முறை ஒருத்தர் அழுதது,எனக்கு ஒரு நிறைவ குடுத்தது. அந்த அழுகை எனக்காகனு நினைக்கும் போது, கடவுளுக்கு நன்றி சொல்ல தோணுச்சு. கடைசில எனக்கும் எனக்குன்னு ரெண்டு பேர் இந்த உலகத்துல இருக்காங்கனு ஒரு நிம்மதி.
கீர்த்தி ரகு கைய புடிச்சிட்டு,பேசுரா
கீர்த்தி : இங்க பாரு டா, நீ இனிமே கஷ்டத்த பாக்க மாட்ட, எங்க குடும்பமே உன் கூட இருக்க போகுது, நீயும் இந்த வீட்டு பையன். வா போய் சாப்பிடலாம்.
ரகு : வருணும் சித்தப்பாவும் சாப்பிட வந்துட்டாங்களா.
கீர்த்தி : அவங்கள கூப்பிட வந்தேன், உன் கூட அப்டியே பேசிட்டு இருந்துட்டேன். அவங்களையும் சாப்பிட கூட்டினு வந்துடு டா.
ரகு : சரி நான் மேல போய் பாக்குறேன்.
ரகு மேல போய் பாக்குறான், சேதுவும், சித்தப்பாவும் ரூம்க்கு வெளில உட்கார்ந்துட்டு இருக்காங்க. சித்தப்பா கண்ணுல தண்ணி, சேது சித்தப்பா உள்ளங்கையில முத்தம் குடுக்குறா. ரகு இந்த மாதிரி முத்தம் யாரோ குடுப்பாங்களே. ரகு, சித்தப்பாவ பாத்து பேசுறான்.
ரகு : வருண் வந்து இருக்கியா.
சித்தப்பா : ஆமா.
ரகு : ஏன் இந்த நேரத்துல, எப்பவும் காலைல தானே வருவ.
சித்தப்பா : எனக்கு உன் கிட்ட பேசணும்.
ரகு : என் கிட்டயா, என்னனு சொல்லு.
சித்தப்பா : நீ இன்னைக்கு சொன்னல, எங்கள MLA பேய் ஒட்டிடுவானு.
ரகு : ஆமா.
சித்தப்பா : அது நடக்க கூடாது, நான் MLA வ கொன்னு ஆகணும் நினைக்குறேன் ஆனா நான் MLA கொல்ல போனா, வர்ஷினி அக்கா அந்த கேப்ல ஸ்ரீதேவி அக்காவ எதாவது பண்ணிடுவா. அதுனால நாங்க ஒரு முடிவு பண்ணி இருக்கோம். இனி நாங்க சேது உடும்பளையும், சித்தப்பா உடம்புலயும் வர மாட்டோம், நாங்க ஊர்ல வேற யாரு மூலமானா போய் நாங்க நினைச்சத நிறவேத்திக்குறோம், இல்லனா இங்க வந்து அந்த MLA ஈஸியா பேய் ஒட்டிடுவான். சரி நாங்க கிளம்புறோம் உங்கள பாக்க தோணுச்சுனா, வருவோம்.
சேதுவும், சித்தப்பாவும் மயங்கி விழுந்துடுறாங்க. எழுத்துட்டு போய் அவங்க ரெண்டு பேரையும் ரூம்ல போட்டுடுறான் ரகு.
ரகு வீட்ல இருக்கவங்க கிட்ட, வருணும், வர்ஷினியும் வீட்ட விட்டு போய்ட்டாங்கனு சொல்றான்.
கீர்த்தி அப்பா : அப்பா டா பேய் போய்டுச்சு, என் பையனும், என் தம்பியும் இனி நிம்மதியா இருக்கலாம்.
ரகு : இனிமே ரொம்ப பிரச்னை.MLA பேய் ஓட்ட ஆளுங்க அனுப்புவான் நம்ம வீட்டுக்கு,MLA கிட்ட இப்போ நம்ம வீட்ல பேய் இல்லனு சொன்னாலும் நம்ப மாட்டான், நம்ம அந்த பேயுக்கு உதவி பண்ண, எதோ வேல பண்றோம்னு நினைப்பான்.
கீர்த்தி அப்பா : என்ன பா, இதுக்கு என்ன தான் முடிவு.
ரகு : இப்பவே எதையும் யோசிச்சு வைக்க, முடியாது, பிரச்னை வரும் போது பாத்துக்குவோம்.
KAMU SEDANG MEMBACA
நண்பன் ஒருவன் வந்த பிறகு
Humorமூன்று நண்பர்கள் பத்தின காமெடி கதை .சிரிச்சு முடியலனா என்ன கேட்காதீங்க .