அடுத்த நாள்.
ரகு : டேய் சேது, வா பேய் ஒற்றவர் பிரபுவ ஒரு வாட்டி பாத்துட்டு வந்துடுவோம், எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு.
சேது : அது போலாம், அம்மா அப்பா உன்ன உள்ள கூப்புடுறாங்க.
ரகு ரூம்குள்ள போறான், குடும்பத்துல எல்லாரும் இருக்காங்க.
ரகு : என்ன எல்லாரும் இங்க இருக்கிங்க.
கீர்த்தி அப்பா : எல்லாம் நல்ல விஷயம் தான் பா.
ரஞ்சித் : அவனுக்கு என்னனு புரிஞ்சு இருக்கும், ஆனாலும் புரியாத மாதிரி, கேட்பான் பாருங்க.
ரகு : டேய் என்ன டா, நிஜமாவே எனக்கு புரியல.
கீர்த்தி அப்பா : உன்னையும் கீர்த்தியும் பத்தின விஷயம் தான்.
ரகு சிரிச்சிட்டு தல குனியுறான்.
ரஞ்சித் : டேய் வெக்கம்லாம் பட்டுடாத டா, தாத்தா, பாட்டி வயசானவங்க.
ரகு : இப்போ தான் டா எனக்கு ரொம்ப வெட்கம் வருது.
ரஞ்சித் : வாங்க எல்லாரும் கண்ண முடிக்கலாம்.
கீர்த்தி அப்பா : ரகு, அடுத்த முகுர்த்ததுல கல்யாணம் பண்ணலாம் முடிவு பண்ணி இருக்கோம்.
ரகு : எனக்கு ஓகே பா.ஆபீஸ்ல லீவ் லாம் சொல்லுனம், இப்போ தான் இங்க ஊருக்கு வந்ததுக்கு லீவ் எடுத்து இருக்கேன்.
கீர்த்தி அப்பா : ஏன்பா லீவ் எதுக்கு, நீ, சேது, கீர்த்தி மூணு பேரும் வேலைய விட்டுட்டு வரீங்க. நம்ம நிலத்துல விவசாயம் பண்ண போறீங்க.
ரகு : பா வீட்டோட மாப்பிள்ளையா இருந்தா, ஊர்ல தப்பா பாப்பாங்க.
கீர்த்தி அப்பா : நீ வீட்டோட மாப்பிளை இல்ல, வீட்டோட பிள்ள ஓகே வா. ஊற பத்திலாம் யோசிக்காத, அவங்களுக்கு, வாய்ல அச போட ஒரு விஷயம் தேடுவாங்க. நீ எங்கள நம்பு, உன்ன சேதுவையும், கீர்த்தியும் பாத்துக்குற அளவுக்கு பாத்துக்குறோம்.
ரகு : சரி சென்னை போய் வேலைய விட்டுட்டு வந்துடுறேன்.
ரஞ்சித் : வாழ்த்துக்கள் டா ரகு.
கீர்த்தி அப்பா : டேய் ரஞ்சித், நீயும் எங்க கூடவே இருந்துடேன். தாத்தா பாட்டியும் உன் மேல பாசமா இருக்குங்க.
ரஞ்சித் : பா ரகு, இருக்கானா இங்க, அதுல ஒரு அர்த்தம் இருக்கு.சென்னைல தான் என் பொழப்பு, குயிலியும் இந்த ஊற விட்டு வர மாட்டேன் சொல்லிட்டு இருக்கா.
கீர்த்தி அப்பா : அவ சொல்றதும் கரெக்ட் தான், எங்க வீட்ல தான் தங்க மாற்ற, இந்த ஊர்ல நாச்சும் தங்கு.
ரஞ்சித் : எனக்கு இங்க என்ன வேலை தெரியும்.
கீர்த்தி அப்பா : நீ வாங்குற சம்பளத்த விட ரெண்டு மடங்கு நீ வாங்குற மாதிரி வேல வாங்கி தரேன், நமக்கு நிறைய பிஸ்னஸ் மேன் friendஸ் இருக்காங்க.அதும் இது கிராமம் பெருசா செலவும் ஆகுது, நிறைய சேமிக்கலாம்
ரஞ்சித் : பா நான் யோசிக்கிறேன், சொல்றேன்.
ரகு : சரி பா, நான் பேய் ஒற்ற, பிரபுவ பாத்துட்டு வந்துடுறேன். சேது, நீயும் வா என் கூட.
ரகுவும், சேதுவும் பைக்ல போய், பிரபுவ பாக்குறாங்க.
ரகு : ஐயா வணக்கம்.
பிரபு : தம்பி, என்ன திடிர்னு சொல்லாம, கொள்ளாம இந்த பக்கம்.
ரகு : ஒரு சந்தேகம், கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.
பிரபு : சுருக்கமா சொல்லுங்க, என் பொண்ணு கல்யாணம் விஷயமா வெளிய கிளம்பிட்டு இருக்கேன்.
ரகு : ஐயா பேய் அதுங்க ஆசைய பண்ணிட்ட அப்பறம், திரும்ப வராதுங்கல.
பிரபு : அதுக்கு என்ன என்ன ஆசை இருக்குனு, நீயும் நானும் முடிவு பண்ணிட முடியாது, அதுக்கு ஒரே ஒரு ஆசை தான் இருக்கும்னு சொல்லிட முடியாது.
ரகு : பேய் எப்ப வேணா திரும்ப வரும்.
பிரபு : ஆமா பா.ஆசை தீர்ந்த உடனே போய்டும்.
ரகு : சரி ஐயா, நன்றி உங்க நேரத்துக்கு.
ரகுவும், சேதுவும், கிளம்பிடுறாங்க.ரகு பைக் ஓட்டிட்டு வரான், வர வழில மழை தங்கி இருக்கறதுல பைக் சிக்கிகுது.
சேது : என்ன டா தேஜவுவா, ஏறுக்கனவே இது மாதிரி,இதே இடத்துல பைக் மாட்டிக்கிச்சு, அதே பசங்க கிட்ட வராங்க.
வருண் friends சேது கிட்ட வராங்க.
ரகு : டேய் அவங்க வருண் friends.
சேது : ஒ இப்போ தான் புரியுது அவங்க ஏன் அன்னைக்கு என்ன தூக்கிட்டு போனாங்கனு.
வருண் friends சேது கிட்ட வந்துட்டாங்க.
அந்தோணி : அண்ணா நீங்க இருங்க, நாங்க தூக்கிட்டு போய் விடுறோம்.
சேது : தம்பி அப்போ அத பண்ணீங்க, ஒரு நியாயம் இருந்துது, இப்போ தான் அவங்க நம்ம கூடவே இல்லையே.
அந்தோணி : இப்பவும் அவன் எங்க friend தான், இப்பவும் அவங்க எங்க அக்கா தான். டேய் போய் தூக்குங்க டா.
ரகுவையும், தூக்க போறாங்க.
ரகு : தம்பிகளா என்ன தூக்காதிங்க ப்ளீஸ்.
சேதுவ மட்டும் தோல்ல தூக்கிட்டு போய், தரையில எறக்கி விடுறாங்க.
சேது : தம்பிகளா தேங்க்ஸ், உங்கள ஒரு hug பண்ணிக்கலாமா.
அந்தோணி : குரூப் hug தான், ஓகே வா.
வருண் friends எல்லாரும் ஒரே டைம்ல, சேதுவ கட்டி புடிக்குறாங்க.
ரகுவும், சேதுவும், வீட்டுக்கு வந்துடுறாங்க.
சேது, அவனோட அம்மா கிட்ட பேசுறான்.
சேது : மா, என்னமா இப்பவும், குடும்பமே ஒரே இடத்துல இருக்கிங்க.
கீர்த்தி அம்மா : கீர்த்திக்கு கல்யாணம் பண்றோம், ஏன் உனக்கும் அதே நாள்ல பண்ண கூடாதுனு யோசிக்கிறோம்.
சேது : நான் யோசிச்சு சொல்றேன் மா.
கீர்த்தி அம்மா : இல்ல பா நான் தான் யோசிப்பேன், நீ ஓகே மட்டும் தான் சொல்லணும்.
சேது : மா என்ன இது.
கீர்த்தி அம்மா : நீதான, எப்பவுமே நீ பாக்குற பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன் சொல்லுவ. அப்போலாம் பெருமை பட்டேன் டா.
ரஞ்சித் : மா இது பெருமை படுற அளவுக்கு பெரிய விஷயம் இல்ல, நம்மள எந்த பொன்னும் பாக்க மாட்டுதுனு உங்க கிட்ட அவன் எப்படி frank ah சொல்லுவான், அதுனால தான் நீங்க பாக்குற பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒரு பிட்ட போட்டு இருக்கான்.
கீர்த்தி அம்மா : டேய் சேது, உன் என்னத்த மாத்திகிட்டியா டா.
சேது : நீயே பொண்ணு பாரு மா. ஆனா
கீர்த்தி அம்மா : ஆனா என்ன டா.
சேது : அந்த பொண்ணு வாய் பேச முடியாத பொண்ணா இருக்கணும்.
கீர்த்தி அம்மா : டேய் இப்படி யாராச்சும் யோசிப்பாங்களா டா.
கீர்த்தி அப்பா : இருடி அவனுக்கு எதாவது காரணம் இருக்கும். உன் இஷ்டம் பா, உனக்கு அப்டியே ஒரு பொண்ண பாத்துடுவோம்.
கீர்த்தி : டேய் சேது, செம decision, எனக்கும் இப்போ தான் நீ ஏன் இப்படி சொன்னனே புரியுது.
சாயுங்கலாம்,5.00 மணி.
சேது, ரகு, ரஞ்சித், கீர்த்தி நாலு பேரும், மேல இருக்க சித்தப்பா ரூம்க்கு போறாங்க, சரக்கு பாட்டில வயித்துல மறச்சு வச்சுட்டுபோறாங்க.
கீர்த்தி அப்பா பாத்துட்டு, கூப்புடுறாரு.
கீர்த்தி அப்பா : டேய் சேது, எல்லாம் இங்க வாங்க. என்ன எல்லாரோட வயிறும் பெருசா இருக்கு.
சேது : வயிறு full ah சாப்டோம் பா, அதான்.
கீர்த்தி அப்பா : இப்போ அத வெளிய எடுக்குறீங்களா இல்லையா.
வயிறுல இருந்து வெளிய எடுக்குறாங்க, சரக்கு பாட்டில்.
கீர்த்தி அப்பா : டேய் சரக்கா.
சேது : அப்பா, சித்தப்பா தான் என்ன கெடுக்க பாக்குறாரு, நான் இது தான் first டைம் குடிக்க போறேன்.
கீர்த்தி அப்பா : இதுல எந்த சரக்கு நல்லா இருக்கும்.
சேது : 1848 தரமா இருக்கும், மெது மெதுவா ஏறும், ஸ்மெலே வராது.
கீர்த்தி அப்பா : இப்போ தான் first டைம் குடிக்க போறேன்னு சொன்ன. நீ உங்க சித்தப்பாவ கெடுத்துடுவ, நானும் கூட வரேன்.
சேது : அப்பா நீங்க குடிப்பிங்களா.
கீர்த்தி அப்பா : எப்பயாவது டா. நம்ம எல்லாம் ஒண்ணா இருக்கோம்ல, கொண்டாடுவோம். அப்பறம், டேய் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல தான் கூப்டன்.
சேது : சொல்லுங்க பா.
கீர்த்தி அப்பா : என் friend ஒருத்தனோட பொண்ணு இருக்கு, அவளுக்கு வாய் பேச வராது, உனக்கு ஓகேவானு கேட்க தான் கூப்டன்.இதா பொண்ணு போட்டோ.
சேது : பா நான் போட்டோ லாம் பாக்கல. உங்களுக்கு ஓகே னா எனக்கு ஓகே.
ரஞ்சித் : டேய் சேது, என்னடா பொண்ணா இருந்தா போதும், நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற அளவுக்கு காஞ்சி போய் இருக்கியா.
சேது : டேய் இப்படியா சொல்லுவாங்க, நான் அழக பாக்கல, மனச பாக்குறேன்னு தான சொல்லுவாங்க.
ரஞ்சித் : தம்பி,அந்த மாதிரி சொல்லுற இன்னொசென்ட் ஆளுங்க எப்பவோ போய் சேர்ந்துட்டாங்க, இப்போ லாம், நான் சொன்ன மாதிரி தான் சொல்லுவாங்க. ஒழுங்கா வாங்கி பொண்ணு போட்டோவ பாரு.
சேது போட்டோவ பாக்குறான்.
கீர்த்தி அப்பா : என்ன பா பொண்ணு புடிச்சிருக்கா.
ரஞ்சித் : அஞ்சு நிமிஷமா, பாத்துட்டு இருக்கான். இதுக்கு மேலயும் அவன் புடிக்கலன்னு சொல்லிடுவானா.
சேது : எனக்கு ஓகே பா, பொண்ணு வீட்ல பேசிடுங்க.
கீர்த்தி அப்பா : பொண்ணு ஒரு கண்டிஷன் மட்டும் வச்சு இருக்காலாம்.
சேது : என்ன அது.
கீர்த்தி அப்பா : அது உன்ன நாளைக்கு நேர்ல பாக்கும் போது, உன்கிட்ட சொல்லுவாலாம். சின்ன விஷயம் தானாம் ஒன்னும் பயப்பட தேவ இல்ல.
சேது : சரி பா.
கீர்த்தி அப்பா : உங்க சித்தப்பா, ரூம்ல சரக்கடிக்க வேணாம், இங்க ஹால்ல உட்கார்ந்து அடிப்போம். உங்க தாத்தாவும் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அடிக்கட்டும்.
சேது : பா, அம்மாவும் பாட்டியும் திட்ட மாட்டாங்க.
கீர்த்தி அப்பா : உங்க அம்மா பிரச்னை இல்ல, உங்க பாட்டி தான் கத்தும், அது பாத்துக்கலாம்.
கீழ் வீட்ல ஹால்ல, எல்லா ஆம்பளைங்களும் உட்கார்ந்து சரக்கு அடிக்கிறாங்க, கீர்த்தி அவங்க கூட உட்கார்ந்து சைடிஷ் சாப்புடுறா. பாட்டியும், கீர்த்தி அம்மாவும் ஹால்ல கடைசியா உட்கார்ந்து இவங்கல பாத்துட்டு இருக்காங்க. சரக்கு அடிக்கறவங்க பேசுறது, பாட்டிக்கும், கீர்த்தி அம்மாக்கும் கேட்காது ஹால் ரொம்ப பெருசு. பாட்டிக்கு, எல்லாரும் வீட்டுக்குள்ள இப்படி சரக்கு அடிக்கிறது புடிக்கல.
இப்ப எல்லாரும் first ரவுண்டு சரக்கு அடிக்கிறாங்க. சித்தப்பா, சேது கிட்ட பேசுறாரு.
சித்தப்பா : மகனே, ஏன் சரக்க அப்படி மறச்சு குடிக்கிற.
சேது : இல்ல சித்தப்பா, உங்க முன்னாடியும் , அப்பா முன்னாடியும் குடிக்க கூச்சமா இருக்கு, மரியாதைன்னு ஒன்னு இருக்குல.
சித்தப்பா : மரியாதை குடுக்குற மாதிரி குடுத்து, பெருசா அசிங்க படுத்துறவங்க எல்லாம் இப்படி தான் நடந்து பாங்க.
சேது : அப்போ நீங்க என்ன நம்பலையா.
சித்தப்பா : எப்பவுமே நம்ப மாட்டேன், என்ன பாத்து குடி. அப்போ தான் உனக்கு அடுத்த ரவுண்டு ஊத்த சொல்லுவேன்.
ரஞ்சித் : சித்தப்பா, உங்க நிலத்துல வேல செய்யுற ஆம்பளைங்கலுக்கு தொப்ப இருக்க கூடாதுனு நீங்க ரூல்ஸ் போட்டு இருக்கீங்களாமே, அதுலயும் அதுல ரொம்ப strict ஆம். ஏன் fit ah இருந்தா தான் நல்லா வேல செய்வாங்கனு உங்களோட என்னமா.
சித்தப்பா : இல்ல பா, ஒருதடவை நம்ம நிலத்துல ஒருத்தன் வேலை செஞ்சுட்டு இருந்தான், சேத்துல வேலை செஞ்சதால, சட்டைய கழிட்டி இருக்கான், அங்க வேல செஞ்ச பொம்பள ஆளுங்க, பாருடி அவன உத்தமன விட தொப்பை பெருசா வச்சு இருக்கானு சொல்லிட்டு, எல்லாம் சிரிக்கிறாங்க. நான் அவமானம் ஆகிட்டேன். அதுனால இது மாதிரி சட்டத்தை கொண்டு வந்தேன்.
ரஞ்சித் : சித்தப்பா,25 இட்லி சாப்புடுற நீ 5 இட்லிக்கு மாறுனா, நீயே வயித்த குறைச்சிடலாம், ஏழைங்க வயித்துல அடிக்குறியே.
சித்தப்பா : 5 இட்லி சாப்ட்டு உயிர் வாழ முடியுமா டா.
ரஞ்சித் : மனுஷங்க எல்லாம் அவளோ தான் சித்தப்பா சாப்பிடுவாங்க.
சித்தப்பா : அப்போ பாட்டி நீ வஞ்சன இல்லாத மனசு இருக்கவங்க அப்டி சாப்பிடுவாங்கணு சொன்னது.
ரஞ்சித் : பெத்துட்டோம், உண்மை எல்லாம் சொல்லிட்டு இருக்க முடியுமான்னு நினைச்சு இருக்கும்.
கீர்த்தி அப்பா, சேது கிட்ட பேசுறாரு.
கீர்த்தி அப்பா : டேய் சேது உங்க அம்மாக்கு நான் எதும் வாங்கி தரமாற்றனு சண்டை போடுவல. அவளுக்கு இன்னைக்கு புது ஜிமிக்கி வச்ச கம்மல் வாங்கி குடுத்து இருக்கேன்.இப்போ போட்டு இருக்கா.
சேது : நான் நம்ப மாட்டேன்.
கீர்த்தி அப்பா : இரு உங்க அம்மாவ இங்க கூப்புடுறேன். அடியே என் பொண்டாட்டி, இங்க வா.
கீர்த்தி அம்மா கிட்ட வந்துட்டாங்க, சேது அவங்க கம்மல பாத்துட்டான்.
கீர்த்தி அப்பா : இப்போ நம்புறியா.
சேது : இப்போ நம்புறேன்.
சேது, இப்போ நம்புறேன்னு சொன்னதும், கீர்த்தி அம்மா, கீர்த்தி அப்பாவ செவுல்லையே அரையுறாங்க.
தண்ணி அடிச்சிட்டு இருந்தவங்க எல்லாம் ஷாக் ஆகிட்டாங்க.தாத்தா மட்டும் போதையில இருக்காரு.
கீர்த்தி அப்பா : ஏய் நான் அது சொல்லல டி
கீர்த்தி, கீர்த்தி அம்மா கிட்ட, மா ஏன் அப்பாவ அடிச்சன்னு கேக்குறா, கீர்த்தி அம்மா கோபமா போய், பாட்டி கூட நின்னுட்டாங்க.
ரகு : ஏன் பா அம்மா உங்கள அடிச்சாங்க.
கீர்த்தி அப்பா : அதுக்கு ஒரு காரணம் இருக்கு.
ரகு : அந்த காரணம் தான் சொல்லுங்க.
கீர்த்தி அப்பா : ஒரு நாள்,கல்யாணம் ஆன புதுசுல,என் friend சுகுமாறும் நானும் வீட்ல சரக்கடிச்சிட்டு இருந்தோம், உங்க அம்மாவ கூப்பிட்டு, சுகுமார் கிட்ட காட்டி இப்போ நம்புறியாடான்னு கேட்டன், நம்புறேன்னு சொன்னான். உங்க அம்மா என்ன அவரு, ஏன் நம்புறேன்னு சொல்ராருனு கேட்டா, நான் சொன்னேன், அவன் கிட்ட நான் சொன்னேன் என் பொண்டாட்டிய நான் கல்யாணம் பண்ணும் போது, அழகுலாம் பாத்து கல்யாணம் பண்ணலனு சொன்னேன், அவன் நம்ப மாட்டேன்னு சொன்னான், அதான் உன்ன கூப்ட்டு காட்டுனேன். இப்போ நம்புறேன் சொல்றான். உங்க அம்மா கோபம் ஆகி அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா, அப்பறம் பேசி சமாதானம் பண்ணி கூப்ட்டு வந்தேன்.
சேது, அவன் அப்பாவ முறைக்கிறான்.
சேது : எங்க அம்மாவ அழகு இல்லனு சொல்றியா, இரு நான் உங்க அம்மாவ சொல்றேன்.
தாத்தா : டேய் என் பொண்டாட்டிய நான் தான் அழகு இல்லைனு சொல்லுவேன்.
கீர்த்தி : தாத்தா, வேணாம், பாட்டி கிட்ட, அடி கிடி வாங்கிட போற.
தாத்தா, இங்க இருந்து சத்தமா, ஏய் பாக்கிய லக்ஷ்மி இங்க வாடினு கூப்புடுறாரு.
பாட்டி, தாத்தாவ ஆச்சர்யமா பாத்துட்டு வருது.
கீர்த்தி : தாத்தா, வேணாம்.
தாத்தா : ஏய் பாக்கிய லக்ஷ்மி நீ அழகு இல்ல டி.
பாட்டி தாத்தாவையே பாக்குது, அழ ஆரமிச்சுடுது. கீர்த்தி எழுந்து பாட்டிய சமாதானம் பண்ரா, இல்ல பாட்டி, தாத்தா விளையாடுறாருனு சொல்றா. பாட்டி, அவர் என் பேர கரெக்ட்டா சொல்லிட்டாருனு அழுவுது. எல்லாரும் தாத்தாவ பாக்குறாங்க, ஆமா தாத்தா கரெக்டா பேர சொல்லிடுச்சுனு சொல்றாங்க.
அப்பறம், எல்லாரும் எழுந்துச்சு படுக்க போறாங்க. ரஞ்சித், தாத்தாவ தூக்கினு போய் படுக்க வைக்கிறான், அவரு ரொம்ப போதை ஆகிட்டார்னு.
அடுத்த நாள் காலைல
கீர்த்தி அப்பா : டேய் சேது, நேத்து சொன்னேன்ல ஒரு பொண்ணு, அந்த பொண்ணு, உன்ன நேரா பாக்கணும்னு சொல்லுதாம் டா. இன்னைக்கு காலைல 10 மணிக்கு போய் பாப்பியாம்.
சேது : பொண்ணு பேரு என்ன பா.
கீர்த்தி அப்பா : பவித்ரா.
சேது ஓடி போய், ட்ரெஸ் எல்லாம் போட்டு,10 தடவ கண்ணாடி பாத்து ரெடி ஆகுறான்.
சேது ஷூ போடுறான், அவன சுத்தி, ரகு, ரஞ்சித், கீர்த்தி, குயிலி எல்லாம் நிக்கிறாங்க.
சேது : டேய் என்ன எல்லாம், சுத்து போட்டு நிக்கிறீங்க.
ரஞ்சித் : நாங்க எல்லாரும் உன் கூட வருவோம்.
சேது : டேய் நீங்களுமா, குயிலி நீயுமா.
குயிலி : ஆமா னா, நீயும் இனி எங்க குடும்பம், நீயும் வர கூடனு சொல்லி ரஞ்சித் தான் கூப்டான்.
சேது : சரி வாங்க எல்லாம் போவோம்.
ரஞ்சித் : டேய் சேது, கார்ல தான போறோம்.
சேது : நடந்து போற டிஸ்டன்ஸ் தான் டா. ஆனா பவித்ரா கார்ல வந்துடுவா. டேய் நீங்க வந்திங்களா, பவித்ராவ பாத்திங்களா, கொஞ்ச நேரம் பேசுன உடனே போய்டணும் ஓகே வா. நாங்க எதுனா கொஞ்ச நேரம் பேசிட்டு பொறுமையா வருவோம்.
எல்லாரும் பவித்ரா வர ஸ்பாட்க்கு போய்ட்டாங்க. இன்னும் பவித்ரா வரல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
ரகு : டேய் சேது, என்ன டா இடம் இது, சுத்தி, ஒரு கடை கூட காணும், ரோடு full ah மரமா இருக்கு.
சேது : பவித்ராக்கு இந்த இடம் புடிக்குமா, அவ தான் இங்க மீட் பண்ணனும் சொல்லி இருக்கா.
பவித்ரா வந்துடுறா.
பவித்ரா, சேது கூட friends வந்து இருக்கறத பாக்குறா.
பவித்ரா ஒரு மெசேஜ், சேதுக்கு அனுப்பிட்டு அவன போன்ல பாக்க சொல்றா.
மெசேஜ்ல, நம்ம முதல் தடவ பாக்க வரும் போது, இவளோ பேரோடவா வருவன்னு இருக்கு. சேது பாத்துட்டு பேசுறான்.
சேது : இவங்க எல்லாம் என் friends எனக்கு ஒரு சப்போட்டா இருக்கட்டும்னு நான் தான் வர சொன்னேன். இப்போ கொஞ்ச நேரத்துல போய்டுவாங்க.
சேது எல்லாரையும், பவித்ராக்கு அறிமுக படுத்துறான்.
சேது : ஆமா எதோ உனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு, கல்யாணத்துலனு சொன்னியே.
பவித்ரா, சேதுக்கு மெசேஜ் அனுப்புறா.
அதுல என்ன மெசேஜ் இருக்குனா , என்ன எதாச்சு பண்ணி இம்ப்ரெஸ் பண்ணா தான் கல்யாணம் பண்ணுவேன், அதான் கண்டிஷன்.
சேது : என்ன பண்றதுனு தெரியலயே.
பவித்ரா : என் கேரக்டர் பத்தி, உனக்கு தெரிஞ்சு இருக்காது, நான் பாக்க எவளோ நல்லா இருக்கேன்னு சொல்லு, இம்ப்ரெஸ் ஆகுறானானு பாப்போம். உனக்கு 10 மினிட்ஸ் தான் டைம், நான் அந்த மரம் கீழ உட்கார்ந்து இருக்கேன்.10 மினிட்ஸ் கழிச்சு இங்க வருவேன்.
பவித்ரா போய் மரத்து கீழ் உட்கார்ந்துக்குறா.
சேது : மச்சான் ரகு, நான் எப்படி டா இம்ப்ரெஸ் பண்ணுவேன், எப்பவுமே நீ தான் என் பிரச்னை எல்லாம் உதவி பண்ணுவ, இந்த டைம்மும் நீ தான் பண்ணனும்.
ரகு : நான் ஒரு மேட்டர், எழுதி தரேன், அத சொல்லு work ஆகிடும்.
கீர்த்தி : டேய் ரகு, அவ எவளோ பாக்க நல்லா இருக்கானு நீ எப்படி சொல்லுவ.
ரகு : நான் எழுதுறேன் முதல, நீ படிச்சு ஓகே சொன்னா தான், சேதுக்கு குடுப்பேன்.
ரகு, போன் எடுத்து எழுத ஆரமிக்குறான்.
எழுதிட்டு, கீர்த்தி கிட்ட காட்றான்.
கீர்த்தி : ஒ நீ அப்டி வரியா.
ரகு, சேது கிட்ட குடுத்து, படிக்க சொல்றான்.
பவித்ரா கிட்ட வந்துடுறா.
பவித்ரா : ரெடியா.
சேது பவித்ராவையே பாக்குறான்.
சேது : ஒரு நாள், கடவுள் சிவன் என் முன்னாடி வந்து நிக்குறாரு, அய்யோ நான் எதும் தப்பு பண்ணல என்ன தண்டிச்சுடாதிங்கனு சொன்னேன், அவர் அதுக்கு, நான் உனக்கு ஒரு வரம் குடுக்க வந்து இருக்கேன்னு சொன்னாரு, சரி குடுங்கன்னு சொன்னேன், அதுக்கு அவர், நீ ஒரு பத்து நாள்ல் பொய் பேசாம இருந்தா, உனக்கு இந்த வரம் தரேன்னு சொன்னாரு, நான் லாம் பொய்யே பேசுனது இல்ல, நீங்க 10 நாள் கழிச்சு வரத்த தாங்கனு சொன்னன். அப்பறம் அவரு போய்ட்டாரு. அடுத்த நாள், நைட், நிலா என் முன்னாடி வந்து பேசுச்சு, என்ன எல்லா கவிஞரும்,பெண் முகம்னாலே, அது நிலா முகம் சொல்லி சொல்லி, நானும் ஒரு பொண்ணுனு நம்ப ஆரமிச்சுட்டேன், நீ சொல்லு பெண்களுல நான் பாக்க நல்லா இருக்கேனா இல்ல பவித்ரா பாக்க நல்லா இருக்காளா. நீ தான் பாக்க நல்லா இருக்கேன்னு சொன்னன் , நிலா சந்தோஷமா போயிடிச்சு. பத்து நாள் கழிச்சு , கடவுள் சிவன், என் முன்னாடி வந்தாரு, கூட ஒரு ஆள் வந்தாரு, சிவன் கிட்ட கேட்டன், யாரு அது உங்க கூடன்னு, பிரம்மானு சொன்னாரு. சரி எனக்கு வரத்த குடுங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் நான் ஏன் குடுக்கணும், நீ தான் பொய் பேசிட்டியேனு சொன்னாரு. இல்ல நான் பேசலனு சொன்னேன். சிவன் சொல்ராரு, அன்னைக்கு நான் தான் நிலவ உன்ன பாக்க அனுப்புனேன், நீ பவித்ராவ விட நிலா தான் பாக்க நல்லா இருக்கானு சொல்லி இருக்க. ஆமா நான் உண்மைய தானே சொன்னேன். இல்ல இல்ல கடவுள் நானே சொல்றன், பவித்ரா தான் பாக்க நல்லா இருக்கா. சாமி, நீங்க ஒரு விஷயம் கவனிக்கணும், நிலா பெண்களுள யாரு பாக்க நல்லா இருப்பான்னு தான கேட்டுச்சு, பவித்ரா தான் பெண்ணே இல்லையே. அவ ஒரு தேவதைனு சொன்னேன். பக்கத்துல இருந்த பிரம்மா, ஆமா நான் அவள தேவதையா தான் படைச்சன்னு சொன்னாரு.
பவித்ரா முகத்துல சந்தோஷம்.
சேது : அப்பறம், சிவன், நான் திருப்தி அடைஞ்சுட்டேன், உனக்கு என்ன வரம் வேணும்னு கேளுனு சொன்னாரு. நான் அந்த தேவதைக்கு புருஷன் ஆகணும் இல்ல அவளுக்கு ஒரு அடிமை ஆகணும்னு சொன்னேன். சிவன், நான் உன்ன புருஷனே ஆக்குறான், ஏன்னா புருஷனாலே அடிமை தான்.
பவித்ரா ரொம்ப சந்தோஷம் ஆகி, சேது கைய புடிச்சிக்குறா.
ரகு, ரஞ்சித், கீர்த்தி, குயிலி எல்லாரும் கை தட்டுறாங்க. அப்பறம் திரும்பி நடந்து வீட்டுக்கு போறாங்க.
அந்த ரோட்ல full ah மரம், ரொம்ப காத்து அடிக்குது.
ரஞ்சித் : என்ன மச்சான், பேய் காத்து அடிக்குது.
ரகு : பின்னாடி ரெண்டு பேரு சந்தோஷமா இருக்காங்கல இந்த கதைய கேட்டு.
ரஞ்சித் : ஆமா.
ரகு : மேல இருந்து ரெண்டு பேரு சந்தோஷமா இருப்பாங்க, அதான்.
ரஞ்சித் : நீ யார சொல்றனு தெரியல டா.
கீர்த்தி : எனக்கு தெரியும், எனக்கு தெரியுமே.
நாலு பேரும் நடந்து வந்துட்டு இருக்கும் போது, மரத்தோட ஓரமா, வருணும் வர்ஷினியும், ரகுவ பாத்து thumbs up பன்றாங்க, ரகு நடந்துட்டே திரும்பி பாக்குறான், வர்ஷினி, வருனோட உள்ளங்கைய முத்தம் குடுக்குறா, வருணும் வர்ஷினியோட கால்ல இருந்து கொஞ்சம் கொஞ்சமா மறஞ்சு, ரெண்டு பேரும் மறஞ்சிடுறாங்க.
கீர்த்தி : டேய் ரகு, என்ன டா பாக்குற.
ரகு ஒன்னும்இல்லனு தலை ஆட்டுறான்.
மழை வருது.
ரஞ்சித் : ஏய் மச்சான் நம்ம ஃபேமிலி song பாடுவோம்.
கீர்த்தி : என்ன song டா.
ரகு, ரஞ்சித், கீர்த்தி, குயிலி ஒருத்தர ஒருத்தர் தோல்ல கை போட்டுக்கிட்டு, "நண்பன் ஒருவன் வந்த பிறகு" song படுறாங்க.
"நண்பன் ஒருவன் வந்த பிறகு.
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு"
-----------------------------The End ------------------------------
Note : கமெண்ட் பண்ணாம போனீங்கணா, நைட் உங்க வீட்டுக்கு, வருணும், வர்ஷினியும் வருவாங்க.
VOUS LISEZ
நண்பன் ஒருவன் வந்த பிறகு
Comédieமூன்று நண்பர்கள் பத்தின காமெடி கதை .சிரிச்சு முடியலனா என்ன கேட்காதீங்க .