அடுத்த நாள் காலைல.
ரஞ்சித் எழுந்து கீழ வரான்.
தாத்தா சட்டைய கழுட்டிட்டு, தன்னோட ஒல்லியான body வச்சு எதோ பண்ணிட்டு இருக்காரு.
ரஞ்சித் : தாத்தா என்ன பண்ற.
தாத்தா : பட்டணத்துல இருந்து வந்து இது என்னனு கேட்குற.
ரஞ்சித் : சரி நான் தோத்துட்டேன், நீயே சொல்லு என்ன பண்றனு.
தாத்தா : இதுக்கு பேரு உடற்பயிற்சி, exercise.
ரஞ்சித் : ஓ எதோ கோளாட்டம்னு நினைச்சேன்.
தாத்தா : இந்த வயசுலயும் என் உடம்பு இரும்பு மாதிரி இருக்குன்னா, என்ன காரணம்.
ரஞ்சித் : நீயே சொல்லு.
தாத்தா : உடற்பயிற்சி டா முண்டம்.
ரஞ்சித் : தாத்தா ஒரு நிமிஷம் கண்ண மூடேன்.
தாத்தா : கெஞ்சிரியேனு மூட்றன்.
ரஞ்சித், தாத்தா கிட்ட போய் வாயால ஊதுறான், தாத்தா பின்னாடி போய் கீழ விழுந்துடுறாரு.
தாத்தா கண்ணு முழிச்சு எந்துருச்சு.
தாத்தா : டேய் வீட்ல இருக்கவங்கலாம், துணி மணி சாமான் எல்லாம் எடுத்து வைங்க,புயல் வருது.
கீர்த்தி அப்பா : என்ன பா.
தாத்தா : புயல் வருது உஷாரா இருங்க, என்னையே ஆள சாச்சுடிச்சு.
ரஞ்சித் : தாத்தா,தாத்தா நான் தான் பண்ணேன், புயல் லாம் இல்ல. உடம்பு இரும்பு மாதிரி இருக்கு சொன்னல அதுக்காக பண்ணேன்.
தாத்தா : அந்த டேபிள் fan ah கிட்ட காட்டுனியா.
ரஞ்சித் : இல்ல வாயால ஊதுனன்.
தாத்தா : டேய் நீ என்ன ரொம்ப சோதிக்கிற டா, அப்பறம் நான் கிழவனா இருக்க மாட்டேன்.
ரஞ்சித் : அப்பறம் புடவ கட்டி, பொட்டு வச்சு கிழவியா மாறிடிவியா.
தாத்தா : ஒன்னும் இல்ல,டாம்மி கிட்ட போய் நினைக்க வேண்டியத நினச்சா, மிச்சத அது பாத்துக்கோம்.
பாட்டி,ரஞ்சித் கிட்ட வராங்க.
ரஞ்சித் : பாட்டி.
பாட்டி : என்ன பேராண்டி.
ரஞ்சித் : தாத்தா,பரிமளா காஃபி எடுத்துனு வானு கத்துறாரு, இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க, உன் பேரு பரிமளானு எனக்கு இப்போ தான் தெரியும்.
தாத்தா ஓடுறாரு.
பாட்டி : யோவ் அங்கேயே நில்லு, கால அகட்டி நில்லு.
தாத்தா : முடியாது போ டி.
ரகுவும், கீர்த்தியும் பேசிட்டு இருக்காங்க. காஃபி குடிச்சிட்டு.
ரகு : ஆமா எப்போ பேய் வரும்.
கீர்த்தி : ரெகுலரா காலைல 10 மணி போல வரும்.
ரகு : அது என்ன காலைல பத்து மணி.
கீர்த்தி : ஏன்டா நான் என்ன டெய்லி பேய் கூட வாட்சப்பா பண்ணிட்டு இருக்கேன். எனக்கு எப்படி தெரியும்.
ரகு : சரி நீ மட்டும் பிஸ்கட் சாப்பிடுற.
கீர்த்தி கைய பின்னாடி மறச்சிக்குறா.
ரகு : தர மாட்டியா.
கீர்த்தி : நேத்து எங்க அம்மாவ தான வீட்டு தேவதைனு சொன்ன. அங்கையே போய் வாங்கிக்க.
ரகு : நேத்து நான் உன்ன தான் சொன்னேன்.
கீர்த்தி : அப்பறம் எங்க அப்பா முறைச்ச உடனே, என் அம்மாவ சொன்னேன்னு மாத்திட்ட.
ரகு : அப்பாக்களுக்கு ஒரு மரியாதை குடுக்கணும்ல.
கீர்த்தி : பயம்னு சொல்லு டா.
ரகு : மரியாதை தான்.
அப்பறம் ரெண்டு பேரும் கைய்ய புடிச்சிட்டு காஃபி குடிக்குறாங்க. ரஞ்சித் அவங்கள பாத்துட்டே போறான்.
ரகு : ரஞ்சித் இங்க வா டா.
ரஞ்சித் : சொல்லு, எனக்கு வேற வேல இருக்கு.
ரகு : கீர்த்தி,நம்ம ரெண்டு பேரும் பேசும்போது, ரஞ்சித் மூஞ்சுல ஒரு சந்தோஷத்த பாப்பேன்.
கீர்த்தி : இல்லையே எனக்கு அப்படி ஒன்னும் தெரியலையே.
ரஞ்சித் : என்ன நக்கல் பண்றது எல்லாம் இருக்கட்டும், ரெண்டு பேரும் கைய்ய புடிச்சிட்டு இருக்கறத யாராவது பாக்க போறாங்க.
கீர்த்தி : யாராவது ரெட் ஷர்ட் போட்டவங்க, போய் போட்டு கொடுத்தா தான் உண்டு.
ரஞ்சித் mind வாய்ஸ் : யாரு ரெட் ஷர்ட் போட்டு இருக்கா, ஐயோ நம்ம தான்.
ரஞ்சித் மேல படிக்கட்டுல ஏறி போறான். சேது ரூம் கதவ தொறக்குறான்.
ரஞ்சித் : டேய் சேது.
சேது : உள்ள வா மச்சான்.
ரஞ்சித் : நீ வெளிய வா.
சேது : என்ன டா சொல்லு.
ரஞ்சித் : என்ன உள்ள மாவாட்டிட்டு இருக்க, வெளிய வந்து கொஞ்சம் நேரம் இரு. உனக்கு பேய் தான் புடிச்சு இருக்கு, மத்தபடி உனக்கு ஒன்னும் இல்ல. அந்த பேய்ய ஓட்றது எங்க வேல. நீ கொஞ்சம், இந்த பொறந்தது இருந்தே கஷ்ட்ட படுறா மாதிரி மூஞ்ச வச்சுக்கிரத நிறுத்து.
சேது சிரிக்கிறான்.
சேது : சில நேரம் நீ அறிவா பேசுற டா.
ரஞ்சித் : என்ன டா நீயும் உன் தங்கச்சி போலவே சொல்லுறா.
சேது : அவளும் அது தான் சொல்றாலா.
ரஞ்சித் மேல இருந்து எட்டி பாக்குறான், ரகுவும், கீர்த்தியும் கைய்ய புடிச்சு பேசிட்டு இருக்காங்க.
ரஞ்சித் : டேய் சேது.
சேது : என்ன டா
ரஞ்சித் : நான் ஒன்னு காட்டுவேன், நீ கோப படனும்.
சேது : என்னனு காட்டு.
ரஞ்சித் : கோப படுவேன்னு சத்தியம் பண்ணு.
சேது : உன் மேல சத்தியமா கோப படுறேன்.(தலைல அடிச்சு சத்தியம் பன்றான்)
ரஞ்சித் : என்ன நம்ம மேல சத்தியம் பண்ணிட்டான், சரி இங்க வா, எட்டி பாரு.
சேது : ஓ இப்படி ஒரு கத நடக்குதா.
ரஞ்சித் : உன் கோபத்த காட்டு.
சேதுவும் ரஞ்சித்தும் கீழ போறாங்க.
சேதுவ பாத்த உடனே, ரகு கைய்ய எடுத்துடுறான். தல குனிஞ்சு இருக்கான்.
சேது அவங்கள பாக்குறான், ரஞ்சித்க்கு ஒரு சந்தோஷம்.
ரஞ்சித் : விடு டா சின்ன சிறுசுங்க.
சேது ரஞ்சித்த பாக்குறேன்.
ரஞ்சித், சேது கிட்ட போய், நான் அப்படி தான் சொல்லுவேன், நீ கோப படுனு சொல்றான்.
சேது to கீர்த்தி : ஏண்டி நல்ல மாப்ள உனக்கு தேடிட்டு இருக்கோம்.
ரகு தல குனிஞ்சு கிட்டு இருக்கான்.
சேது : ஆனா நீ சூப்பர் மாப்ள, பாத்து வச்சு இருக்க.
ரகு நிமிர்ந்து பாக்குறான், ரகுவும் கீர்த்தியும் சிரிச்சுகிட்டே சேதுவ கட்டி புடிச்சுகிறாங்க.
சேது : அம்மா அப்பா கிட்ட டைம் வரும் போது நானே பேசுறன்.
சேது, ரஞ்சித்த பார்த்து, அவன் தலைல கை வச்சு கலச்சிட்டு போறான்.
ரஞ்சித் : டேய் சேது என் தலைல அடிச்சு, சத்தியம் பண்ணியே டா, எனக்கு எதாவது ஆகிடும் டா.
ரகு : ரஞ்சித் மூஞ்ச பாரு நமக்கு ஒரு நல்லது நடக்கும் போது, அவன் பேரானந்தத்துல இருக்கான்.
ரஞ்சித் mind வாய்ஸ் : நான் வயித்தெரிச்சல் படும் போது லாம், இவனுக்கு எப்படி என் மூஞ்சு சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது. ஒரு வேல கலாய்க்கிறனோ.
கீர்த்தி : ஏன்டா ரகு , நமக்கு குழந்தை பொறந்துச்சுனா, ரஞ்சித் அண்ணன் பேரு தான் வைக்கணும்.
ரகு : ரஞ்சித்க்கு ஏது அண்ணா, ஒரு தங்கச்சி தான் இருக்கு, அவ பேரு வேணா வைக்கலாம்.
ரஞ்சித் mind வாய்ஸ் : நம்ம எடுத்த காலி பண்ண வேண்டியது தான்.
காலைல பத்து மணிக்கு ஆகுது.
வீட்ல எல்லாரும் எப்படி பேய் புடிக்குதுன்னு பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
ரகு to கீர்த்தி அப்பா : பா, நாலு வேல ஆளுங்க கேட்டு இருந்தனே, சேதுக்கு பேய் பிடிச்ச அப்பறம் அவன் வீட்ட விட்டு வெளியபோகாம இருக்க,பிடிக்கறதுக்கு.
கீர்த்தி அப்பா : அதோ இருக்காங்க
குடும்பமே டென்ஷனா நெகத்த கடிச்சிட்டு, பேய் பிடிக்கறத பாக்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
ரஞ்சித் : நானும் ரகுவும் first தடவ பேய் பிடிக்கறத பாக்க போறோம் நாங்களே ரிலாக்ஸா இருக்கோம்.ஆனா இந்த குடும்பம் ஒரு வாரமா பாத்துட்டு இருக்காங்க இந்த சம்பவத்த, இவங்க டென்ஷனா இருக்காங்க.
ரஞ்சித் : வீட்ல இருக்க ஆம்பள ஆளுங்க எல்லாம் ரெடியா இருங்க, சேதுவ பிடிக்க.
பக்கத்துல தாத்தா சட்டைய கழுட்டுது.
ரஞ்சித் : பாட்டி, தாத்தா குளிக்கணும் போல, சட்டைய கழுட்டுது, பாத்ரூம் கூட்டிட்டு போ.
தாத்தா : டேய் நீதானா ஆம்பள ஆளுங்க எல்லாம் ரெடியா இருக்க சொன்ன.
ரஞ்சித் : கண்ண மூடு.
தாத்தா : நீ ஊதுவ.
ரஞ்சித் : கம்முனு இருக்கணும்
கதவு வேகமா திறக்குற சத்தம் கேட்குது.
சேது பொண்ணு மாதிரி ஓடுறான், சித்தப்பா பாஞ்சு புடிச்சிடுறாரு.
அப்பறம் பேய் போயிடுது, சேது tired ah நடந்து போறான், பின்னாடி சித்தப்பா நடந்து போறாரு.
ரஞ்சித் : ஏன்டா ரகு,பேய் வந்து இருக்கு ஒரு பயமே வரல.
ரகு : காலைல வந்ததால நமக்கு அப்படி இருக்கு.இந்த பேய்,பேய் படம் லாம் பாக்காது போல.
ரஞ்சித் : படம் எதுக்கு மச்சான், ஒரு பத்து நிமிஷ youtube வீடியோ பாத்து இருந்தாலே, பேய் எப்படி பயமுறுத்தும்னு, அந்த பேய்க்கு தெரிஞ்சு இருக்கும். நம்மளோட கஷ்ட்ட காலம், படிக்காத பேய் லாம் ஓட்ட வேண்டி இருக்கு.
சித்தப்பா ஸ்லோவா நடந்து போயிட்டு இருக்காரு.
ரஞ்சித் : சித்தப்பா, இங்க வா.
சித்தப்பா ஸ்லோவா நடந்து வராரு
ரஞ்சித் : வேகமா வா சித்தப்பா.
சித்தப்பா : இவளோ வெயிட்ட வச்சிட்டு, பேய் பிடிச்ச உடனே பறந்து இருக்கேன். அத நீ யோசிச்சு பாக்கணும்.
ரஞ்சித் : நீ exercise பண்ணாம இருந்ததுக்கு, பேய் மேல பழி போடாத. தாத்தா இந்த வயசுலயும் ஒடம்ப இரும்பு மாதிரி வச்சி இருக்காருன்னா. அதுக்கு exercise தான் காரணம்.
சொல்லிட்டு,ரஞ்சித் ரெண்டு தடவ தாத்தா நெஞ்சுல தட்டுறான், தாத்தா இரும்ப ஆரமிச்சுடுறாரு.
ரஞ்சித் : என்ன ரொம்ப தட்டிடனோ.
தாத்தா தண்ணி கேட்குறாரு, குடிக்குறாரு.
ரஞ்சித் : சித்தப்பா அது மட்டும் இல்ல, டெய்லி சரக்கு அடிக்கிற, அதும் காஸ்லி சரக்கு. ஒரு சராசரி குடிமகனால, நீ குடிக்கிற சரக்க வாங்க முடியுமா.
கீர்த்தி : டேய் அவரு குடிக்கறது உனக்கு கஷ்டமா இருக்கா, இல்ல காஸ்லி சரக்கு அடிக்கிறாருனு கஷ்டமா இருக்கா.
ரகு : சித்தப்பா நீ மேல போய் ரெஸ்ட் எடு, அவன் எதாச்சும் கலாட்டா பண்ணிட்டே இருப்பான்.
ரகு to கீர்த்தி அப்பா : நான் பேய் ஒற்ற சாமியார் யாராவது பாக்கணும்.
கீர்த்தி அப்பா : வர சொல்றேன் பா.
பேய் ஒற்றவர் வராரு, அவர் பேரு பிரபு
ரகு to பிரபு : ஐயா, சேதுக்கு புடிச்சு இருக்க பேய்ய பத்தி எதாவது சொல்லுங்க
பிரபு : நான் ஏற்கனவே அந்த பேய்ய ஓட்ட முயற்சி பண்ணேன், ஆனா முடியல.
ரகு : ஏன் முடியல.
பிரபு : எல்லா பேய்யயும் நம்ம வச படுத்த முடியாது. ஒன்னு ஒன்னு ஒரு ஒரு ரகம். இப்போ டாக்டர் இருக்காரு, எல்லா நோயிக்கும் தீர்வு சொல்லிட முடியுமமா, ஒரு சில நோயிக்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்கலல அது போல தான் சிலது மனுஷ சக்திக்கு அப்பார்பட்டது,கடவுள் மேல பாரத்த போட்டுடனும்.
ரகு : சேது மேல இருக்க பேய், பொண்ணா இருக்குமோ. பெண்ணோட நளினத்தோட ஓடுறான்.
பிரபு : இருக்கலாம் பா. ஒரு திருநங்கையா கூட இருக்கலாம்.
ரகு : அப்பறம் நீங்க சித்தப்பா மேல வர பேய்ய பாத்திங்களா.
பிரபு : பாத்தேன், சேது தடுக்கும் போது அந்த பேய் வரும், மத்த நேரத்துல அது வராது. பேய் ஓட்ட முயற்சி பண்ணது சேதுக்கு தான், அந்த பேய் வந்துச்சு, நான் ஓட்டும் போது.
ரகு : அப்போ நீங்க அந்த பேய் கிட்ட பேசுனீங்களா.
பிரபு : இல்ல அந்த பேய் என் கிட்ட பேசல. நான் அத யாருனு கேட்கும் போதெல்லாம் அழுவும், அவளோ தான்.
ரகு : இது இயற்கை மரணமா இருக்காதுல.
பிரபு : இருக்காது, யாராவது கொலை பண்ணி இருக்கணும், இல்ல இவங்க தற்கொலை பண்ணி இருக்கணும்.
ரகு : புடிக்காதவங்கள அந்த பேய் புடிக்குமா, புடிச்சவங்கள புடிக்குமா
பிரபு : ரெண்டுமே நடக்கும். அது இப்படி நடந்துக்கும்னு எந்த ஒரு விதியும் இல்ல.
ரகு : சரி ஐயா நன்றி உங்க நேரத்துக்கு.
பிரபு : சரி தம்பி. பேய்ய ஒற்ற விஷயத்துல, எப்பவும் ஜாக்கிரதையா இருக்கணும். நீ சின்ன பையன், துணிச்சல் மட்டும் போதாது, விவேகமும் வேணும்.
ரகு : நான் பாத்துக்குறேன் ஐயா.
பிரபு ரகு தலைல கை வச்சிட்டு ஆசீர்வாதம் பண்ணிட்டு போறாரு.
ரகு to கீர்த்தி : ஏய், இந்த ஊர்ல பேய்ய பத்தி யார் பேசுனாலாம், என் கிட்ட சொல்லு. உங்க ஊர்ல விசாரிச்சு பாரு.
கீர்த்தி : ஓகே பாஸ்.
ரகு : கிண்டல் பண்ணாத, எனக்கு இந்த பேய் விஷயத்துல எங்க இருந்து ஆரமிக்கறதுனு தெரில, பார்ப்போம் எங்க கூட்டினு போகுதுனு.
கீர்த்தி : ஓகே. இப்போ போய் வீட்ல கொஞ்சம் நிம்மதியா இரு, மிச்ச விசாரணைய நாளைக்கு பார்ப்போம்.
பாட்டி தண்ணி தொட்டி மேல உட்கார்ந்துனு இருக்கு, பக்கத்துல ஒருத்தன் மாட்ட கழுவிட்டு இருக்கான்.
பாட்டி : டேய் ரஞ்சித் இங்க வா.
ரஞ்சித் : பாட்டி என்ன தொட்டி மேல உட்கார்ந்துட்டு இருக்க.
பாட்டி : இந்த மாட்ட கழுவிட்டு இருக்கான்ல கமல், அவன் மாட்ட ஒழுங்கா கழுவுராணான்னு பாத்துட்டு இருக்கேன்.
ரஞ்சித் : அதெல்லாம் சரி டேய் உன் பேரு உண்மையாவே கமலா.
கமல் : ஆமா சார், பொறக்கும் போது எங்க அம்மா வச்ச பேரு ரஜினி தான்,எனக்கு பத்து வயசு ஆகும் போது எங்க அம்மா கண்ணுக்கு நான் கமல் மாதிரி அழகா இருந்ததுனால கமல்னு மாத்தி வச்சிட்டாங்க.
ரஞ்சித் : ஏன்டா ஆளு என்னமோ மாடு தான் மேய்க்குற,ஆனா உன் பேருக்கு ஒரு வரலாரே இருக்கே.
கமல் : வரலாறு ரொம்ப முக்கியம் இல்லையா சார், வந்தோமா வாழ்ந்தோமானு இருக்க கூடாதுல.
ரஞ்சித் : ஓ அப்போ இந்த பேரு வச்சதால வரலாறுல இடம் பிடிச்சிட்ட, மாடு மேய்க்கறது நினைச்சு ஒன்னும் வருத்தும் லாம் படல.
கமல் : கிருஷ்ணரே மாடு மேய்ச்சு இருக்காரு.
ரஞ்சித் : இந்த மேட்டர உனக்கு யாரு சொல்லி குடுத்தா.
கமல் : இந்த பாட்டி தான்.
ரஞ்சித் : உன் வேல தானா இது.
பாட்டி ரஞ்சித் காதுல சொல்லுது.
பாட்டி : டேய் எவனும் இப்போ லாம் மாடு மேய்க்க மாற்றாங்க, எல்லாம் படிச்சிட்டாங்க, இவன போல சிலர் இருக்காங்க, அவங்களும் மாடு மேய்க்கற வேலைய கேவலமா நினைச்சு வர மாற்றாங்க, அதுனால கிருஷ்ணர் மாடு மேய்ச்ச கத எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.
ரஞ்சித் : நீ ஒரு கே.டி தான்.
பாட்டி : அதெல்லாம் இருக்கட்டும், அவன் எங்க.
ரஞ்சித் : எவன் பாட்டி.
பாட்டி : அந்த முட்டா பய.
ரஞ்சித் : யாரை சொல்ற.
பாட்டி : அந்த கூறு கெட்டவன்.
ரஞ்சித் : டேய் கமல், பாட்டி யார சொல்லுது.
கமல் : சார் கிராமத்து ஆளுங்க எல்லாம், அவங்க புருஷன பேர் சொல்லி கூப்பிட மாட்டாங்க.
ரஞ்சித் : ஏன் டா லூசு பையன், முட்டா பயனு கூப்புடறதுக்கு பேரு சொல்லி கூப்பிடலாமே.
கமல் : கிராமத்து மக்கள்க்கு ஒரு கலாச்சாரம் இருக்கு, நம்ம பாட்டிலாம் முன்னாடிலாம் ஜாக்கெட்டே போடாது. அது தான் கிராமத்தான்.
ரஞ்சித் : இதுல ஒரு பெருமையும் இல்லையே டா. பாட்டி நாச்சும் ஒரு காலத்துல ஜாக்கெட் போடாம இருந்துது, இப்போ போடுது . இப்பவும் நான் லாம் வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்தா லுங்கி கட்டுவேன், ஆனா உள்ள ஒன்னும் போட மாட்டேன்.
கமல் : பாட்டி முன்னாடி வச்சிட்டு என்ன சொல்றிங்க.
ரஞ்சித் : நீ மட்டும் ஜாக்கெட் கதைய சொல்லலாமா. என் கோர்ட்ல ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் ஒரே நியாயம் தான்.
கமல் : ஆனாலும் கிராமத்தான், கிராமத்தான் தான், நான் ஒரு ஆட்டு கரிய ஒரே ஆளு திம்பேன். உங்களால முடியுமா
ரஞ்சித் : ஏன்டா அவளோ தின்னுற அத ஒரு வீடியோ எடுத்து youtubeல போட்டு,கோடீஸ்வரன் ஆணோமா, கல்யாணத்துக்கு ஜனாதிபதிய கூப்டமானு இல்லாம, இங்க எருமைக்கு குண்டி கழுவிட்டு இருக்க.
கமல் : டேய் மரியாதையா பேசு, நான் ஒன்னும் குண்டி கழுவல, மாட்ட குளிப்பாட்டிட்டு தான் இருக்கேன்.
பாட்டி : டேய் கமல், என்ன என் பேரன் கிட்டயே எகுருற, போய் அந்த மாட்டையும் சேத்து கழுவு டா.
VOUS LISEZ
நண்பன் ஒருவன் வந்த பிறகு
Comédieமூன்று நண்பர்கள் பத்தின காமெடி கதை .சிரிச்சு முடியலனா என்ன கேட்காதீங்க .