ஊருக்கு வந்துடுறாங்க. கீர்த்தி வீட்டுக்கு நடந்து போய்ட்டு இருக்காங்க எல்லாரும்.
கீர்த்தி : ரகு ஒரு bag ah ரஞ்சித் அண்ணன் கிட்ட குடுங்க.
ரஞ்சித் : இப்படியே அண்ணன் அண்ணனு கூப்பிட்டு இருந்தா, நான் திரும்ப போறேன் ஊருக்கு.
ரகு : கீர்த்தி உன் அண்ணன் பாசம்லா மனுசுல வச்சிக்கோ, ரஞ்சித்னு கூப்டு.
கீர்த்தி : ஓகே mr. ரஞ்சித். வாங்க.
ரகு : டேய் மச்சான் இதுக்கு முன்னாடி கிராமத்துக்கு வந்து இருக்கியா.
ரஞ்சித் : என் சொந்த ஊரும் சிட்டி தான், நான் வேல செய்யுற இடமும் சிட்டி தான். first டைம் கிராமத்துக்கு வரன். நீ டா?
ரகு : நானும் தான்.
கீர்த்தி : ஓகே சிட்டி பாய்ஸ், இங்க இருந்து கண்ணுக்கு எட்டுன தூரம் வர நம்ம நிலம் தான். விவசாய நிலம்.
ரகு : ஏய், இவளோ நிலம் இருந்தா நான் லாம் இந்த ஊற விட்டு எங்கயும் போகமாட்டேன். நீங்க ஏன் சென்னைல வேல செய்யுறிங்க.
கீர்த்தி : நாளும் தெரிஞ்சிக்கணும், முதலாளியா மட்டும் இருந்தா அரும தெரியாது கொஞ்ச நாள் தொழிலாளியாகவும் வேல செஞ்சிட்டு வாங்கனு என்னையும் எங்க அண்ணனையும் சென்னைக்கு அனுப்பிட்டாரு அப்பா.
ரகு : தெளிவான ஆளு தான் உங்க அப்பா.
கீர்த்தி : செட்டில் ஆகறது எல்லாம் நம்ம கிராமத்துல தான். நீயும் இங்கயே செட்டில் ஆகிடேன்
ரகு : உங்க அப்பா இவளோ நிலம் வச்சு இருக்காரு. நீ செட்டில் ஆகலாம்.எனக்கு குடும்பம்னே ஒன்னு இல்ல, எங்க அப்பா ஒரு ஜட்டி கூட விட்டுட்டு போல.
ரஞ்சித் : விட்டுட்டு போனா மட்டும், உங்க அப்பா ஜட்டிய நீயா போட்டுக்க முடியும்.
கீர்த்தி சிரிக்குறா.
ரகு : மானத்த வாங்கிட்டான்.
கீர்த்தி : சமயத்துல ரஞ்சித் அறிவா பேசுறாரு.
ரஞ்சித் : வாட் டூ யு மீன், நான் எப்பவும் அறிவா தான் பேசுவேன்.
கீர்த்தி : ரகு அங்க தெரியுதா, அந்த வீடு நம்மளது தான்.
ரகு : என்ன பா வீடுன்னு சொல்லிட்டு அரண்மனைய காட்டுற.
ரஞ்சித் : சேது இதெல்லாம் பெருசா சொன்னதே இல்ல. such a சிம்பிள் மேன்.
கீர்த்தி : சரி வாங்க வீட்டு குள்ள போலாம்.
கீர்த்தியோட அம்மா அப்பா வராங்க.
கீர்த்தி : மா, ரகு, ரஞ்சித், சேதுவோட friends.
ரகுவும் ரஞ்சித்தும் கால்ல விழுறாங்க.
கீர்த்தி அம்மா : நல்லா இருங்க பா. கீர்த்தி, இவங்கள மேல கூட்டிட்டு போய் சாப்பாடு போடு.
கீர்த்தி மேல கூட்டிட்டு போறா.
கீர்த்தி : அங்க தூரத்துல தெரியுறாங்கல, அவங்க தான் எங்க தாத்தா, பாட்டி. ரெண்டும் ரொம்ப சண்ட போட்டுக்கோங்க.
ரஞ்சித் : ரெண்டு பேரும் எவளோ நல்லா மாத்தி மாத்தி ஊட்டி விட்டுக்குறாங்க. அவங்கல போய் சண்டை போட்டுப்பாங்க சொல்றீங்க.
அவங்க தாத்தா பாட்டி இவங்கள பாத்துட்டு இங்க வராங்க.
பாட்டி : அட அட வாங்க வாங்க நம்ம சேது கூட்டாளிங்களா.
கீர்த்தி : ம்ம்.
பாட்டி : ஒருத்தன் ஹீரோ மாதிரி இருக்கான், இன்னொருத்தன் கா.
ரஞ்சித் : பாட்டி பாட்டி அந்த வார்த்தை வேணாம்.
தாத்தா : என்ன டி சொல்ல வந்த ஒருத்தன் ஹீரோ, ஒருத்தன் காமெடியன் சொல்ல வந்தியா. (ரஞ்சித்த காட்டி) இவன் தான் காமெடியனா. எங்க அவன ஒரு ஜோக் சொல்ல சொல்லு டி பார்ப்போம்.
சொல்லிட்டு தாத்தாவும் பாட்டியும் அடிச்சிக்கிறாங்க.
ரஞ்சித் ஷாக் ஆகுறான்.
கீர்த்தி : சரி வாங்க போலாம்.
ரஞ்சித் : ஏங்க ரெண்டு பேரும் அடிச்சுக்குறாங்க, போயிட்டே இருக்கீங்க.
கீர்த்தி : இது மாதிரி ஒரு நாளைக்கு அஞ்சு தடவ அடிச்சுப்பாங்க, பழகிடுச்சு. ஆனா எப்பவுமே எங்க பாட்டி தான் ஜெயிப்பாங்க.
தாத்தா, கடிக்கிறா, கடிக்கிரானு கத்துறாரு.
ரஞ்சித் அவங்க சண்டைய பாக்குறான்.
ரகு : மச்சான்.
ரஞ்சித் : டேய் முன்னாடி லாம் என்ன காமெடியன்னு சொன்னாதான், எதாவது அசம்பாவிதம் நடக்கும், இப்போ அந்த கிழவி மனசுல நினைச்சதுக்கே, இப்படி ஒரு சண்டை.
ரகு : நீ கவலைப்படாத, இதுக்கு எதுனா பரிகாரம் இருக்கும். இப்போ வா.
கீர்த்தி : மொதல்ல சாப்பிடுங்க, மத்தது அப்பறம் பாக்கலாம்.
ரகு : கீர்த்தி எனக்கு ஒன்னு புரியல, நாங்க சாப்பிட வந்து இருக்கோம்னு நினைச்சியா, எங்க சேது.
கீர்த்தி, அவ அம்மா அப்பாவ கூப்பிடுறா.
கீர்த்தி : அந்த ரூம் சாவிய எடுத்துட்டு வாங்க மா.
ரகு : ஏய் ரூம் குள்ள சேதுவ பூட்டி வச்சு இருக்கீங்களா.
கீர்த்தி கதவ தொறக்குறா.
சேது பெட்ல தூங்குறான், கை கால்லாம் கட்டி கிடக்கு.
ரகு : ஏய் எதுக்கு அவன கட்டி போட்டு இருக்கீங்க.
கீர்த்தி : வெளிய வா சொல்றேன்.
ரகு, கீர்த்தி வெளிய வராங்க.
ரகு : இப்ப சொல்லு என்னாச்சு.
கீர்த்தி : சேதுக்கு பேய் பிடிச்சு இருக்கு.
ரகு : பேய்யா.
ரஞ்சித் ரகு ஷாக் ஆகுறாங்க.
ரஞ்சித் : சரி ஏன் அதுக்கு கட்டி போட்டு இருக்கீங்க.
கீர்த்தி : அவனுக்கு பேய் பிடிச்சா ஓடுறான், வீட்டுக்கு வெளிய. அப்பறம் இன்னொரு பேய் ஓடி போய் அவன தடுத்து நிறுத்துது.
ரகு : இன்னொரு பேய் யாரு மேல வருது.
கீர்த்தி : எங்க சித்தப்பா மேல.
ரகு : ஓ உங்க சித்தப்பா மேல இருக்க பேய், சேது மேல இருக்க பேய் ஓடும்போது தடுத்து நிறுத்துது.
கீர்த்தி : சேது மேல இருக்க பேய், கொல வெறியோட ஓடும்.
ரகு : உங்க சித்தப்பா எங்க.
கீர்த்தி : அவரு அவர் ரூம்ல சரக்கு அடிச்சிட்டு இருப்பாரு.
ரகு : ஏன் அவர கட்டி போடல.
கீர்த்தி : சேதுக்கு பேய் வந்தா இவருக்கும் வரும், சேதுவ வீட்ட விட்டு போகாம தடுப்பாரு,அதனால இவர கட்டி போடல. இவர கட்டி போடலையே கண்டி, இவருக்கும் பேய் வந்ததுல இருந்து, இவரையும் வீட்ட விட்டு அனுப்புறது இல்ல.
ரகு : ஓ உங்க சித்தி எங்க.
கீர்த்தி : அவங்க கேன்சர்ல இறந்துட்டாங்க, அஞ்சு வருஷம் ஆகுது.
ரகு : அதுனால தான் குடிச்சிட்டே இருக்காரா.இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலயா.
கீர்த்தி : அவருக்கு 42 வயசு தான் ஆகுது, ஆனா இன்னொரு கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாரு.
ரகு : குழந்தைங்க.
கீர்த்தி : குழந்தைங்க இல்ல.
சரி சேது ரூம்க்கு போவோம்.
ரகு போய், சேதுவ கட்டி வச்சு இருக்க, கயிற அவுக்குறான்
கீர்த்தி : ரகு என்ன பண்ற.
ரகு கட்ட அவுத்து விட்டுடுறான்.
கீர்த்தி அப்பா : தம்பி அவன பேய் பிடிச்சு, வெளிய ஓடிட்டானா, ஊர் ஆளுங்களுக்கு தெரிஞ்சுடும், ஊருல அவன் அவன் வாய்க்கு வந்தத பேசுவாங்க பா.
ரகு : பா, ஒரு நாலு பேர வேலைக்கு வைங்க சேதுக்கு பேய் பிடிச்சு ஓடுனா புடிக்கறதுக்கு. வைக்கிற ஆளுங்க உங்க சொந்த காரங்களா பாத்துக்கோங்க, அவங்களுக்கு நல்ல காசு குடுங்க, விஷயம் வெளிய தெரியாம இருக்க. அத மட்டும் இல்ல சேது பேய் பிடிச்சு ஓடும் போது, உங்க தம்பி மேல இருக்க பேய், அவன தடுத்துடும். அதுனால கவலையே வேண்டாம். பாத்துக்கலாம்.
ரகு to கீர்த்தி : கீர்த்தி, ஏன் சேது ஊருக்கு வந்தான், ஏன் கேட்குறன்னா ஊருக்கு கிளம்புற அன்னைக்கு, அவன் எங்க கிட்டயே சரியா பேசல.
கீர்த்தி : அம்மாக்கு உடம்பு சரி இல்ல.
ரகு : அது எங்க கிட்ட சொல்லிட்டே கிளம்பி இருக்கலாமே.
கீர்த்தி : அன்னைக்கு காலைல அம்மா போன் பண்ணி உடம்பு முடில உன்ன பாக்கணும்னு சொல்லும் போது, சேது அம்மா கிட்ட சரியா பேசல, அதுனால அப்பா கால் பண்ணி நல்லா திட்டிட்டாரு, அதான் அப்படி கோபத்துல கிளம்பி இருப்பான். அப்பா,அவன் சென்னைல இருந்தாலும், பேய் பிடிக்காம இருந்து இருக்கும், என்னால தான் எல்லா பிரச்னையும்னு வருத்த படுறாரு.
ரகு : ஓகே விடு.
கீர்த்தி, சேது ரூம் கதவ சாத்துறா.
ரகு : கதவ தொறந்து விடு கீர்த்தி.
கீர்த்தி : சித்தப்பாவ பாக்குறியா.
கீர்த்தியோட சித்தப்பா பேரு உத்தமன். அவரோட ரூம்க்கு போறாங்க ரகு, ரஞ்சித், கீர்த்தி.
கீர்த்தி : என்ன சித்தப்பா, சரக்கு அடிக்காம இருக்கீங்க, தமிழ் நாட்டுல சரக்கு வசூல் கம்மியாகிடுமே.
உத்தமன் : மகளே, உன் நக்கல் குறையலையே.
கீர்த்தி : இது சேது நண்பர்கள் சித்தப்பா, ரகு, ரஞ்சித்.
உத்தமன் : வாங்க தம்பிகளா.
ரகு : சார் உங்க கிட்ட சில கேள்வி கேட்கணும்.
உத்தமன் : கேளு, சார்னு கூப்பிட்டு அந்நிய படுத்தாத, சித்தப்பானு கூப்டு.
ரகு : உங்களுக்கு பேய் பிடிக்கும் போது, எப்படி இருக்கும்.
உத்தமன் : எனக்கு எதும் ஞாபகம் இருக்காது பா, மத்தவங்க சொல்லி தான் இப்படி நடந்து கிட்டேன்னு தெரியும்.
ரகு : உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் செத்துட்டாங்களா. அவங்க யாராச்சும் இருக்கும்னு தோணுதா.
உத்தமன் : இல்ல பா.
ரகு : எதாவது யாரையாவது கொல கில பண்ணி இருக்கீங்களா.
உத்தமன் : என்ன பா இவளோ பெரிய விஷயத்தை, இவளோ அசால்ட்டா கேட்டுட்ட. என் பேருக்கு ஏத்தா போல உத்தமன்.
கீர்த்தி : ஆமா எங்க சித்தப்பா,உத்தம ராசா தான்.
உத்தமன் : தேங்க்ஸ் மகளே. ஆமா இந்த பையன் ஏன் எதும் பேசமாற்றான்.
கீர்த்தி : ரஞ்சித் பேசு.
ரஞ்சித் : சித்தப்பா ஒன்னும் கேட்கறதுக்கு இல்ல.
உத்தமன் : ரகு தம்பி அவளோ கேள்வி கேட்டாரு, நீங்க ஒரு கேள்வியாச்சும் கேட்டா தான் சமமா இருக்கும்.
ரஞ்சித் : எனக்கு ஒரு கேள்வி இருக்கு, ஆனா வேணா சித்தப்பா.
உத்தமன் : மனசுல வச்சிட்டே இருந்தா நோய் பா, வெளிய கக்கு.
ரஞ்சித் : ஆமா நீங்க பாக்க பண்ணி குட்டி மாதிரி இருக்கீங்க, அப்பறம் எப்படி பேய் வந்த பிறகு பறந்து போய் சேதுவ புடிக்கிறிங்களாம்.
உத்தமன் : ஹா ஹா ஹா. செம கேள்வி செம கேள்வி.
கீர்த்தி : டேய் எங்க சித்தப்பாவ பண்ணி குட்டினு சொல்றியா, ஓத வாங்குவ.
உத்தமன் : தங்கம் அவன எதும் சொல்லாத, எனக்கு கண்ணாடிய பாத்தாலும், அதே தான் தோணுது. என்ன னா எல்லாருக்கும் மனசுல இருக்கும், இவன் கேட்டுடான், ஏன்பா ரஞ்சித் எனக்கு உன்ன புடிச்சு இருக்கு பா, ரகு தம்பி உங்களையும் தான்.
ரகு : சரி சித்தப்பா, நாங்க அப்பறம் வந்து பாக்குறோம், அப்ப அப்ப ரூம் விட்டு வெளிய வாங்க.
உத்தமன் : நான் வரேன் பா, சீக்கிரம் என்ன வீட்டு விட்டு வெளிய போறதுக்கு, வழி பண்ணி விடுங்க பா.
ரகு : கண்டிப்பா.
ரகு, கீர்த்தி, ரஞ்சித் ரூம் விட்டு வெளிய வராங்க.
கீர்த்தி : டேய் ரஞ்சித் எங்க சித்தப்பா, பண்ணி குட்டினா சொல்ற, உனக்கு இருக்கு டா.
ரகு : ஏய் அவனுக்கு வந்த சந்தேகம் ஒன்னும் தப்பு இல்ல, நீங்க அவரை சேதுவ பறந்து புடிச்சாரு சொன்ன உடனே, ஃபிட் ஆன ஆளு னு நினச்சேன். குடிச்சு குடிச்சு வயிர தண்ணி டேங்க் மாதிரி வச்சி இருக்காரு.
ரஞ்சித் : ரகுவ எதும் சொல்லமாட்டியே, நான் சொன்னா, என்ன திட்டுறது, அவன் சொன்னா சிரிக்கறது.
கீர்த்தி : ஓகே விடுங்க ரஞ்சித்.
கீர்த்தி அம்மா வராங்க.
கீர்த்தி அம்மா : கீர்த்தி, சேது ரூம்ல இருந்து வெளிய வந்து நிக்குறான்.
எல்லாரும் ஓடி போய் பாக்குறாங்க.
ரகு, சேது கிட்ட போறான்.
ரகு : மச்சான்.
சேது கட்டி பிடிச்சு அழுவுறான்.
சேது : டேய் எனக்கு எதோ ஆகிடிச்சு டா, என்ன கட்டி போட்டு வச்சு இருக்காங்க. நான் பைத்தியமா.
ரகு : ஒன்னும் இல்ல டா நான் வந்துட்டேன்ல பாத்துக்கறன்.
சேது : எனக்கு ஒன்னும் ஆகாதுல.
ரகு : ஒன்னும் ஆக விட மாட்டேன்.
சேது ரகு ரஞ்சித் மூணு பேரும் கட்டி புடிச்சுகிறாங்க.
ரகு to சேது : டேய் நீ போய் ரெஸ்ட் எடு. எத பத்தியும் கவல படாத, stress க்கு சில மாத்திரை டாக்டர் குடுத்து இருக்காங்க, அத போட்டுட்டு நிம்மதியா இரு.உன்ன கட்டி போட மாட்டாங்க இனிமேல். புக்ஸ் கொஞ்சம் குடுக்க சொல்றேன் படிச்சிட்டு ரிலாக்ஸ் பண்ணு. உனக்கு ரூம் விட்டு வெளிய வரணும்னு தோணுச்சுனா வா.ஆனா வீட்ட விட்டு வெளிய போகாத. கொஞ்ச நாள்ல எல்லாம் மாறிடும்.
சேது : நீ இங்கையே இரேன்.
ரகு : பிரச்னைய முடுச்சிட்டு தான் நானும் ரஞ்சித்தும் போவோம்.கீர்த்தி அவன ரூம் குள்ள கூட்டிட்டு போ.
சேது ரூம்குள்ள போறான்.
கீர்த்தி : ரகு ச்சில் பண்ணு, வீட்ட சுத்தி பாரு, எல்லார் கிட்டையும் பேசு. நான் குளிச்சிட்டு வரேன். ரெண்டு பேரும் first சாப்பிடுங்க.
சாயங்காலம் ஆச்சு வீட்ல எல்லாரும் ஒரு மூலைல உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க.
கீர்த்தியோட தாத்தா, ரகு, ரஞ்சித், கீர்த்தி கூட பேசுறாரு.
தாத்தா to ரஞ்சித் : வீட்ல எல்லார்கிட்டையும் பேசிட்டிங்களா.
ரஞ்சித் : ம்ம் பேசிட்டோம் தாத்தா.
தாத்தா : நீ பேசாத ஒரு ஆளு கிட்ட உங்கள கூட்டிட்டு போறேன்.
ரஞ்சித் : வாங்க போலாம்.
எல்லாரும் எழுந்து வராங்க.
தாத்தா : கீர்த்தி, நீ வேணாம், உனக்கு தெரிஞ்ச ஆளு தான்.
ரகு : அவளும் வரட்டும் தாத்தா, எனக்கும் ஒரு கம்பெனி வேணும்ல.
தாத்தா : டேய் நாங்க இத்தனை பேரு இருக்கும் போது அவ கம்பெனி தான் வேணுமா.
ரஞ்சித் : தாத்தா பாயிண்ட்ட புடிச்சிட்டாரு, நல்லா கேளுங்க, இவங்க ரெண்டு பேரும் ஓவரா போறாங்க.
தாத்தா : சரி வந்து தொலைங்க.
தாத்தா கூட்டிட்டு போய் ஒரு நாய காட்ராறு.
தாத்தா : இதென்ன.
ரஞ்சித் : நாய்.
தாத்தா : இல்ல இது என் புள்ள. பேரு டாம்மி
ரஞ்சித் : ஓ புள்ள மாதிரி வளக்குறிங்களா. இந்த நாய் கடிக்குமா, பாத்தா பயமா இருக்கு.
தாத்தா : இது யாரையும் கடிக்காது, கடிச்சதும் இல்ல.
ரஞ்சித் : சரி வாங்க போலாம், போயி வேலைய பாக்கலாம், நாய பாத்தாச்சு.
தாத்தா : ஒய் இரு . டாம்மிக்கு ஒரு speciality இருக்கு.
கீர்த்தி : அது எனக்கு தெரியுமே.
தாத்தா : அதுனால தான் இவ வேணாம்னு சொன்னேன்.
கீர்த்தி : சரி வாய் திறக்கல.
தாத்தா : டாம்மிக்கு தமிழ் தெரியும்.
ரஞ்சித் : அப்படியா, எங்க அ, ஆ, இ, ஈ, எழுதி காட்ட சொல்லுங்க.
தாத்தா : எரும, நம்ம பேசுனா புரிஞ்சிக்கும்.
சொன்னதை செய்யும்.
ரஞ்சித் : அப்படியா, டேய் டாம்மி, போய் ஒரு சொம்புல தண்ணி எடுத்துட்டு வா டா, வரும் போது கைய்ய சொம்பல ஒளப்பி கொண்டு வர கூடாது.
தாத்தா திரும்பி ரஞ்சித்த பாக்குறாரு.
தாத்தா : டேய் இதெல்லாம் எப்படி செய்யும்.
பால தூக்கி போட்டு கேட்ச்னு சொன்னா கேட்ச் பண்ணும்.
ரஞ்சித் : கேட்ச் என்பது ஆங்கில வார்த்தை, தமிழ் எங்க வருது.
தாத்தா கோபமா அவன பாக்குறாரு.
ரஞ்சித் : உங்களுக்கும் வேணா, எனக்கும் வேணா, ராமசாமி ன்றது உங்க பேரு,தமிழ் பேரு தான.
தாத்தா : சுத்தமான தமிழ் பேரு டா மடையா.
ரஞ்சித் : உங்க புள்ளய அந்த பேர சொல்ல சொல்லுங்க
தாத்தா மொறைக்குறாரு, ரகுவும் கீர்த்தியும் சிரிக்குறாங்க.
கீர்த்தி : தாத்தா இருங்க, நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றன், அவர் அத புள்ள மாதிரி வளத்துட்டாரு, அப்பா பேர சொல்லி கூப்பிடுறது, தமிழ் கலாச்சாரத்துலயே இல்ல, இது தமிழ் நாய், அது எப்படி கூப்பிடும்.
ரஞ்சித் : ஓகே கீர்த்தி உனக்கும் மூல அப்ப அப்ப வேல செய்யுது.
தாத்தா : டேய் அவ என் பேத்தி டா.
ரஞ்சித் : அதுனால தான் அப்ப அப்ப வேல செய்யுதுனு சொன்னேன். இல்லனா முழுசா வேல செய்யும்ல.
கீர்த்தி : டேய், முன்ன எங்க சித்தப்பாவ கலாய்ச்ச, இப்போ என்னையும், என் தாத்தாவையும்.
தாத்தா : உத்தமன என்ன மா சொன்னான் இவன்.
கீர்த்தி : பாக்க பன்னிக்குட்டி மாரி இருக்கீங்கனு சொல்லிட்டான்.
தாத்தாக்கு சிரிப்பு வருது. ரகுவும், ரஞ்சித்தும் சேர்ந்து சிரிக்கிறாங்க.
கீர்த்தி : சிரிச்சு இப்படி கவுத்துட்டியே தாத்தா.
ரஞ்சித் : தாத்தாக்கு அந்த டயலாக் மனசுல இருந்து இருக்கு, அதனால நான் சொல்லும் போது அவருக்கு சிரிப்பு வந்துடுச்சு. இல்ல தாத்தா.
தாத்தா : ஆமானு சொல்லி, உத்தமன் என்ன கோச்சிக்கவா. போடா போடா.
ரஞ்சித் : சரி நாங்க இப்போ போலாமா.
தாத்தா : நீங்க இப்போ போனீங்கனா நான் டாம்மிக்கு தமிழ் தெரியும்னு சொன்னது பொய் ஆகிடுமே.
ரஞ்சித் : சரி, தாத்தா என்ன நினைக்கிறாருனா , நம்ம இங்க இருந்து போய்ட்டா, அவர் சொன்னது பொய் ஆகிடும் நினைக்குறாரு, சரி நம்ம யாரும் போக தேவ இல்ல இங்கயே பாய் விரிச்சு படுத்துக்கலாம்.
தாத்தா : டேய் குண்டக்க மண்டக்க பேசிட்டு இருந்தா, நான் கிழவனா இருக்க மாட்டேன்.
ரஞ்சித் : ஓ கிழவனா இல்லாம குமரனா மாறி காலேஜ் first இயர் சேர்ந்துடுவீங்களோ.
தாத்தா : கீர்த்தி அந்த தண்ணிய எடுமா.
கீர்த்தி : இதாங்க தாத்தா.
தாத்தா : டேய் ரஞ்சித், என் டாம்மிக்கு தமிழ் தெரியும் டா, இது நான் கால் கழுவுற தண்ணி மேல சத்தியம்.
ரஞ்சித்க்கு சிரிப்பு அடக்க முடில.
ரஞ்சித் : தாத்தா, குடிக்கிற தண்ணி மேல சத்தியம் பண்ணா கூட பரவால, யாராவது கால் கழுவுற தண்ணி மேல சத்தியம் பண்ணுவாங்களா.
தாத்தா : சரி இப்போ இந்த வாட்டி கரெக்ட்டா சத்தியம் பண்றேன், என் டாம்மிக்கு தமிழ் தெரியும், இது பொண்டாட்டி பரிமளா மேல சத்தியம்.
கீர்த்தி : பாட்டி பேரு பரிமளா இல்ல தாத்தா, பேர மறந்துட்டியா.
பாட்டி : என்னமா அங்க பரிமளான்னு யார் பேரோ சொல்றிங்க, நானும் அங்க வரவா.
தாத்தா to கீர்த்தி : அவள இங்க வர வேணாம்னு சொல்லிடு.
கீர்த்தி : வராத பாட்டி.
தாத்தா : கீர்த்தி, இந்த ரஞ்சித் பையனால எனக்கு அவமானம் ஆகிடுச்சு, எனக்கு ஒன்னுனா குடும்பமே வரும்னு இவனுக்கு காட்டணும். எல்லாரையும் கூப்பிடுறா.
கீர்த்தி அவங்க அம்மா அப்பா பாட்டி எல்லாம் கூப்புடுறா. எல்லாம் ஒரு எடுத்துல இருக்காங்க.
கீர்த்தி : ரகு நீ எங்க சைடா அவன் சைடா.
ரஞ்சித் : அவன நீ பாத்தாலே உன் சைடு வந்துடுவான் அவன் கிட்ட கேட்குற. என்ன மச்சான், நான் சொல்றது ரைட் தான சொல்லி திரும்பி பாக்குறான் ரகுவ ஆள காணோம்.
ரகு கீர்த்தி சைடு நிக்குறான்.
ரகு : யார் கிட்ட மச்சான் பேசிட்டு இருக்க.
ரஞ்சித் : போய்ட்டியா எப்பவோ.
தாத்தா : என் படைய பாத்தியா டா.
ரஞ்சித் : அதெல்லாம் இருக்கட்டும் டாம்மிக்கு தமிழ் தெரியும்னு காட்டுங்க.
பாட்டி : இருங்க டா எந்த விளையாட்டா இருந்தாலும், நியாயமா இருக்கணும், ரஞ்சித் கூட யாரும் இல்ல, நான் அவன் சைடு போறேன்.
கீர்த்தி : பாட்டி இது விளையாட்டு இல்ல, நம்ம மான பிரச்னை.
பாட்டி : அதெல்லாம் முடியாது, அந்த பையன் தனியா இருக்க நான் விட மாட்டேன்.
ரஞ்சித் : டேய் ரகு, பாத்தியா, வெற்றி தேவதையே என் பக்கம்.
ரகு : வீட்டோட தேவதையே எங்க பக்கம்.
கீர்த்தியோட அம்மா, அப்பா, ரகுவ ஒரு மாதிரி பாக்குறாங்க.
ரகு : பா, நான் அம்மாவ தான் வீட்டோட தேவதைனு சொன்னேன்,கீர்த்திய இல்ல. நம்ம விளையாடலாம் வாங்க.
தாத்தா : ஆட்டத்தை ஆரமிக்கலாமா.
ரஞ்சித் : ஆரமிக்கலாம். டேய் அந்த பாட்ட போடுறா.
தாத்தா : நான் அந்த ஆட்டத்தை சொல்லல, விளையாட்ட சொன்னேன்.
ரஞ்சித் : சரி தொடங்கி தொல, வல வலனு.
கீர்த்தி சைடு, டேய் மரியாதையா பேசுடானு கத்துறாங்க.
பாட்டி : வல வலனு தாண்டா பேசுறீங்க, கரெக்டா தான சொன்னான்.
ரஞ்சித் : எங்க ஆளு ஒருத்தர் பேசுனா, எல்லாரும் ஆஃப் ஆகுறீங்க பாத்திங்களா.
பாட்டி : சரி விளையாட்ட தொடுங்குங்க.
தாத்தா : டேய் ரஞ்சித், என் டாம்மி முன்னாடி, டாம்மினு கூப்பிட்டு எதுனா தமிழ்ல நினைச்சுக்கோ, என் டாம்மிக்கு மனசுல நினைச்சாவே புரியும்.
ரஞ்சித் கண்ண மூடி நிக்குறான், டாம்மி அவனையே வெறியோட பாக்குது, திடிர்னு பாஞ்சு அவன கடிக்குது. ரஞ்சித் அலறுறான்.
ரஞ்சித் : தாத்தா, நாய் கடிக்காதுனு சொன்ன.
தாத்தா : என் புள்ள யாரையும் கடிக்க மாட்டான் டா, நீ அவன் கோபபடுற மாதிரி எதோ நினைச்சு இருக்க.
ரஞ்சித் : தாத்தா நான் எதுமே நினைக்கல, சும்மா கண்ண மூடிட்டு நின்னுட்டு இருந்தேன்.
தாத்தா : என் டாம்மிக்கு கடிக்க பயிற்சி கொடுத்ததே இல்ல, நீ என்ன நினைச்சு, அவன கோப படுத்தின.
ரஞ்சித் : நாயிக்கு ஏன் கடிக்க பயிற்சி தரணும். யாருனா விவரமான ஆள உங்க டீம்ல இருந்து அனுப்பலாம்ல கீர்த்தி.
கீர்த்தி : அந்த விவரமான ஆள் எங்க தாத்தா தான் பேசு.
தாத்தா கெத்தா ஃபீல் பன்றாரு.
ரஞ்சித் : தாத்தா நான் கண்ண மூடி சும்மா நிக்கும் போது உங்க டீம்ல இருந்து ஏன் யாராவது நாய் கிட்ட மனசுல பேசி இருக்க கூடாது.
தாத்தா : நீ யார சந்தேக படுற.
ரஞ்சித் அந்த டீம பாக்குறான், ரகு மட்டும் ஒளியிறான்.
ரஞ்சித் : ரகு தான் அந்த culprit.
தாத்தா : உன் நண்பனா.
ரஞ்சித் : இல்ல என் எதிரி.
தாத்தா : ரகு இங்க வா.
ரகு : தாத்தா.
தாத்தா : உண்மைய சொல்லு.
ரகு : நான் நினைச்சதுக்கு தான் ரஞ்சித்த கடிச்சுது.
தாத்தா : இப்போ தெரியுதா டா ரஞ்சித், என் டாம்மிக்கு தமிழ் தெரியும்னு.
ரஞ்சித் : சரி நான் நம்புறேன்.அவன் என்ன நினைச்சான்னு சொல்ல சொல்லுங்க.
ரகு : எல்லாம் அவனுக்கு தெரிஞ்ச வார்த்தை தான்.
ரஞ்சித் : என்ன வார்த்தைனு சொல்லுங்க.
ரகு : டாம்மி, ரஞ்சித் ஒரு காமெடியன் தானனு சொன்னேன்.
ரஞ்சித் : டேய் கொலைகாரா, இப்போ புரியுது அது ஏன் கடிச்சுதுனு.
தாத்தா : இந்த வார்த்தை சொன்னா எப்புடி கடிக்கும், என்னால நம்ப முடியல.
ரகு : நீங்க ஒரு தடவ அதே வார்த்தைய நினைச்சு பாருங்க தாத்தா.
தாத்தா : புத்திசாலி பையன், நல்ல ஐடியா.
ரஞ்சித் : நல்ல ஐடியாவா, நீ நினைச்சா என்ன தான கடிக்கும், நான் போறேன்.
தாத்தா : அவன் ஓட பாக்குறான் ரகு, அவன புடி.
ரகு : டேய் தப்பிக்கவா பாக்க.
ரகு, ரஞ்சித்த புடிச்சிக்கிறான், தாத்தா நினைக்கிறாரு, நாய் ரஞ்சித்த கடிக்குது.
தாத்தா : ஆமா என்ன ஒரு அதிசயம்.
கீர்த்தி : தாத்தா நான் ஒரு தடவ செக் பண்ணனும்.
தாத்தா : நம்ம டாம்மி டா நீ செக் பண்ணு.
ரஞ்சித் : கடிக்குறது என்ன டா.
கீர்த்தி : ரகு அவர எனக்காக இருக்கமா புடிச்சிப்பிங்களா.
ரஞ்சித் : இப்போ இந்த கொஞ்சல் ரொம்ப முக்கியம்.
கீர்த்தி, நினைக்குறா, நாய் ரஞ்சித்த கடிக்குது.
கீர்த்தி : வாவ் அமேஸிங்.
தாத்தா : என் பேத்திய இவளோ சந்தோஷமா நான் பாத்ததே இல்ல. இன்னொரு தடவ கூட பண்ணிக்கோ ராஜாத்தி.
ரஞ்சித் : உங்க குடும்பத்து மேல போலீஸ் கம்பளைண்ட் குடுப்பேன்.
கீர்த்தியோட அம்மா அப்பா, போய்ட்டாங்க.
திடிர்னு நாய் ஆக்ரோஷமா, ரஞ்சித் கிட்ட வருது.
ரஞ்சித் : டேய் யார் டா நினைக்கிறீங்க.
ரஞ்சித் திரும்பி பாத்தா பாட்டி சிரிச்சுட்டு இருக்கு.
ரஞ்சித் : பாவி பாட்டி, நீ நினைச்சுத்துல தான் நாய் இப்போ வெறியா பாக்குதா.சேம் சைடு கோல் போட்டுட்டியே.
ரஞ்சித் ஓடி போயிடுறான்.
தாத்தா : டேய் ரஞ்சித்,என் பொண்டாட்டி பரிமளா எப்பவுமே என் சைடு டா.
பாட்டி : யாரு பரிமளா.
தாத்தா முழிக்குறாரு.
தாத்தா : சரி விடு. எப்படியும் நீ என்ன அடிக்க முடியாது, கையில மருதாணி இருக்கே.
பாட்டி : கால அகட்டி வை.
தாத்தா : ஏன்,வச்சிட்டேன்.
பாட்டி ரெண்டு காலு நடுவுல எட்டி உதைக்குது. அவர் பரிமளானு கத்துறாரு.
பாட்டிக்கு திரும்ப கோபம் வருது, திரும்பவும் உதைக்க போகுது, கீர்த்தி பாட்டிய புடிச்சிடுது, இதுக்கு மேல அங்க அடிச்ச, தாத்தாக்கு சங்கு தான்.
பாட்டி : பரிமளாவாம் பரிமளா.
கீர்த்தி : சரி விடு பாட்டி.
கொஞ்ச நேரம் கழிச்சு, கீர்த்தியும், தாத்தா, பாட்டி எல்லாம், ரஞ்சித்த பாக்க போறாங்க.
தாத்தா : எப்படி இருக்கு.
ரஞ்சித் மூஞ்ச திருப்பிக்கிறான்.
தாத்தா : இங்க பாரு காயத்துல, சுண்ணாம்பு தடுவுனா, சட்டுனு ஆறிடும்.
ரஞ்சித் : இந்த கிழவன் என்ன கிளோஸ் பண்ண ட்ரை பன்றான் டோய்.
கீர்த்தி : டேய் எழுந்துரு, வா பக்கத்துல ஒரு டாக்டர் இருக்காரு, ஊசி போட்டுட்டு வந்துடலாம்.
ரஞ்சித்தும் கீர்த்தியும் பைக்ல போய்ட்டு டாக்டர பாத்துட்டு வராங்க.
கீர்த்தி : டேய்,நாய் எங்கயும் கடிக்க காணும், கிட்ட வந்து கொலச்சதுக்கே, அது கடிச்சிடுச்சுனு சொல்லிட்ட நீ, எங்க டாம்மி பத்தி எங்களுக்கு தெரியாதா, அது குழந்தை டா. ஆனா ஒன்னு டா, நீ காமெடியன்னு சொன்னதும் அவன் ஆக்ரோஷ படுறான். இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது.
ரஞ்சித் : சிரிப்பு வரும்.வந்த முதல் நாளே இப்படி சம்பவம் பண்றிங்களே. நான் முழுசா ஊரு போய் செருவனா.
கீர்த்தி : இப்போ சொல்றன், நல்லா கேட்டுக்கோ, இந்த ஊருக்கு நீ வந்தது தான் உன் லைஃப்ல பெரிய turning பாயிண்ட்டா இருக்க போது.
ரஞ்சித் : என்ன திடிர்னு பாசிட்டிவ்வா லாம் பேசுற.
கீர்த்தி : போய் நல்லா தூங்கு. நாளைக்கு பார்ப்போம்.
YOU ARE READING
நண்பன் ஒருவன் வந்த பிறகு
Humorமூன்று நண்பர்கள் பத்தின காமெடி கதை .சிரிச்சு முடியலனா என்ன கேட்காதீங்க .