1 காதல் களம்

42 9 2
                                    

கதை மாந்தர்கள்

அவினாஷ் அன்பு தாஸ்
ஆறடிக்கு சற்றே குறைவு என்றாலும் அளவான உயரம்.... சிவந்த நிறம்.... உயரத்திற்கேற்ற உடல்வாகு.... பேச்சிலும் பார்வையிலும் தெரியும் நிதானமே அவனை தனித்துக் காட்டும் என்றாலும் நண்பர்களிடம் மட்டும் தெரியும் இதழோர குழியும் கண்களில் கூத்தாடும் குறும்பும் அப்பாவியாய் முழிக்கும் பார்வையும் கூடுதல் அழகு... விடை அறியா பல கேள்விகளுடன் பயணிக்க காத்திருக்கும் நமது நாயகன்...

கதிர் நிலவன்
கறார் பேர்வழி.... தன்னிடம் நெருங்க நினைப்போரை பார்வையிலே தள்ளி நிறுத்தும் கண்கள் ..  தேவைக்காக மட்டும் சிரித்து பேசும் அழுத்தமான உதடுகள் என அக்மார்க் சிடு சிடு முகம்.... எங்கும் நேர்த்தி எதிலும் நேர்த்தி பாலிசியை ஸ்ட்ரிக்டாக பின்பற்றுபவன்... நண்பர்களிடம் மட்டும் ரூல்ஸ் அனைத்தும் மீறப்படும்....

அபி நந்தன்
மாநிறத்தில் ஆறடிக்கு வளர்ந்து நிற்பவன்.... கோபம் , பிடிவாதம் , பாசம் இதுலாம் எப்போ எப்டி இவனுக்குள்ள வரும்னு இவனுக்கே தெரியாது....எளிதில் அனைவருடனும் சகஜமாக பழகுபவன்... வெகு சிரமப்பட்டு பார்வையில் கடினத்தை இழுத்து பிடித்து தன்னை ஒரு கறார் பேர் வழியாக காட்ட பெரு முயற்சி செய்து கொண்டிருப்பவன்....

இவர்கள் மூவரையும் இணைத்த ஒரே புள்ளி "தென்றல் காப்பகம்"
அவினாஷ்... விஷ்வ தேவன் - சத்யபாமா தம்பதியின் இல்லற வாழ்வின் இன்ப அடையாளமாய் உதித்தவன்... ஒற்றை இரவில் தடம் மாறியது அழகான குட்டி குடும்பத்தின் விதி.... பிரசவ நாளில்  குழந்தைக்கு ஜனனம் கொடுத்து எமனின் பாச கயிற்றால் அன்னை கட்டியிழுக்கப்பட.... நடை பிணமாக குழந்தையை கையில் ஏந்தி வந்த விஷ்வ தேவன் நீல வேணியிடம்

" உன் புள்ளைய நீ தனியாளா எப்படி வளர்த்தியோ அப்டியே உன் பேரனையும் ... " என குரல் கமற சொன்னவன் கண்ணீருடன் மகனின் நெற்றி முட்டி ....
அழுகையுடன் ஏறிட்ட தாயை பார்த்து  "பார்த்துக்கோம்மா...."  என்று  தலையசைத்து.... குழந்தையை தாயிடம்  ஒப்படத்த கையுடன் வைத்தியசாலையை விட்டு வெளியேறி விட.... மொத்தமாய் உடைந்து போனார் நீல வேணி பாட்டி.... அத்தோடு முடியவில்லை விதியின் விளையாட்டு... அன்றைய இரவு வைத்தியசாலையிலே கழிந்து விட விடிந்ததும் கிடைத்த அடுத்த செய்தியும் மரண அடியே...  தேவதையாய் வந்த மருமகளும் பிரசவத்தில் உயிரை விட ஆசையாய் வளர்த்த ஒற்றை மகனும் லாரி அடித்து தூக்கியெறியப்பட்டு ஸ்பாட்டிலே உயிரை விட்டு விட.... ஒரே இரவில்  மொத்தமாக சிதைந்து போனது அவர்களது குட்டி உலகம்.... ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்த கையோடு இரு உடல்களையும் ஒன்றாக அடக்கம் செய்து விட்டு.... பொக்கை வாயுடன் விரலை சப்புக் கொட்டி கொட்டி இருந்த குழைந்தையின் சிரிப்பில் அவனுக்கான வாழ்க்கையை தொடங்கினார்....

களம் காண்பேனோ காதலில் ?Where stories live. Discover now