5 காதல் களம்

30 7 3
                                    

கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவினாஷையே சுற்றி வந்த மரகத பச்சை நிற ஒளியோ புகை மூட்டம் போல் முழுதாக அவனை  சூழ்ந்து கெண்டது...

அப்படியே பின்னங்கழுத்தில் ஒளிர தாெடங்கிய மரகத பச்சை நிற உருவமோ அவனுள் ஏதோ மாற்றத்தை உண்டாக்க.... தூங்கிக் கொண்டிருந்தவன் மெது மெதுவாக அந்தரத்தில் உயர்த்தப்படுகிறான் ......
ஆனால் அவனது ஆழ் மனதிலோ முகமறியா பெண்ணொருத்தியின்  காந்த குரலே ஈன சுவரத்தில் மெல்லியதாக  ஒலித்துக் கொண்டிருக்கிறது....

" கனவில் வந்து மாயம் செய்து என்னை களவாடும் கருவிழி கள்வன் நீயென்றால்....
நெனவில் மாலையிட்டு மடி சேர்க்கும் மாயவனும் நீதானே.. 
ஆந்தை போல் என்னை விழிக்க செய்து விட்டு நீ மட்டும் ஆனந்தமாய் பொழுதை கழிப்பாயோ...
ஹ்ம்ம்... பார்த்துக் கொள்கிறேன்..." என்ற பெண்ணவளின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து செல்ல ..

அந்த ஒளியோ அவனுள் முழுதாக போய் புகுந்து கொள்வது போல் ஊடுறுவிக் கொண்டிருந்தது.... தூக்கத்தில் ஏதாே அசூசையாக உணர்ந்த நிலவனோ  அரைத் தூக்கத்தில் பாதிக் கண்களை திறந்து கண்ட காட்சியில் தூக்கி வாரி போட அதிர்ச்சியின் உச்ச கட்டத்திற்கேே போய் விட்டான்...

அதிர்ச்சியில்.... ஒருக்களித்து படுத்திருந்த அபியின் கழுத்துச் சட்டையை இழுத்து பிடித்து அவனை உலுக்கி  கொண்டே இவன்  "ஆஆஆஆஆ.... " என்று அலற

ஆழ்ந்த தூக்கத்தில் கனவில் சின்சானுடன் சீட்டுக் கட்டில் மூழ்கியிருந்தவனோ நிலவன் இழுத்து பிடித்து அலறியதில் அவனும் "ஆஆஆ... கொலை...
கொலை......."
என்று அலறியடித்துக் கொண்டு கண்களை மூடியவாறே  கத்த...

அறையில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டியும் வர்ஷினியும் சத்தம் கேட்டு பதறியடித்துக் கொண்டு என்னவென்று பார்க்க அவசர அவசரமாக ஓடி வர....

நிலவன் மிரள மிரள பூச்சாண்டியை பார்ப்பது போல அவினாஷை பார்த்துக் கொண்டிருக்க....

பெட்ஷீட்டை எடுத்து முழுதாக முக்காடு போட்டவாறு அபிநந்தனோ நிலவனை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க....

களம் காண்பேனோ காதலில் ?Место, где живут истории. Откройте их для себя