6 காதல் களம்

14 6 1
                                    

வீட்டை விட்டு கிளம்பியவர்கள் நேராக வந்து நின்ற இடம் "தென்றல் காப்பகம் "....
அந்த இடத்துக்கு தனி வாசம் உண்டோ என்னவோ ஒரு முறை நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டவர்களது முகத்தில் வழிந்த புன்னகை அத்தனை அழகு...

இருந்த வரை காயம் தான்... வலி தான்... அனாதை என்ற வார்த்தை சாதாரண வார்த்தையா என்ன.... அனுபவிப்பவர்களுக்கு ஒவ்வொரு முறை கேட்கும் போதே நரக வலியல்லவா....  ஆயிரம் முறை இதயத்திலே கத்தியை ஆழமாக  இறக்கும் வேதனையல்லவா அது... அபியும் நிலவனும் மட்டுமா அனுபவித்தான்... பள்ளியில் அத்தனை பிள்ளைகளுக்கும் மத்தியில் ஓரந்தள்ளப்பட்ட அவியும் அதை அனுபவித்தவன் தானே...

தாய்..  தந்தையை எண்ணி ஏங்கி அழுத நாட்கள்...
தவறாது ஓடி வரும் அவியின் பாசக் குரல்...
ஆசையாக சமைத்து கொண்டு வரும் நண்டு வறுவல்...பாய் கடை பிரியாணி.... புளியோதரை பார்சல்...
பெயின்டிங் வேலை நடந்து கொண்டிருந்த போது திருட்டு தனமாக நால்வரும் பதித்து வைத்த கைத் தடங்கள்...
அர்த்தமில்லா முதல் எழுத்து கிறுக்கல்கள்...
எத்தனை எத்தனையோ நினைவுகள்...

இதே இல்லதில் தானே அவர்களது உலகமே உருவானது...
அவர்களே போதும் கோடி உறவுகள் சேர்ந்தாலும் இவர்களுக்கு ஈடாகாதே...
சாதாரணமாக கடந்து போக கூடிய இடமா இது.. மாதாந்தம் செய்யும் முதல் பணியே  ஆசிரமத்துக்கன்றே தனி தொகையை ஒதுக்குவது தானே...

வேடிக்கை பார்த்தவாறு நடந்து கொண்டிருந்தவர்களின் கவனத்தை கலைத்தது... தலைமையாசிரியராக இருக்கும் அமிர்தாம்பிகை அம்மாவின் குரல்...

அன்றிலிருந்து இன்று வரை முகத்தில் தெரியும் அதே ஆளுமை... பார்வையிலே தெரியும் கம்பீரத்திற்கு குறைவே இல்லை.... இருக்கும் வரை அனாதை என்ற வார்த்தையையே அழிக்க நினைப்பவர்... இன்று வரை அதற்காக  தன்னாலான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு உன்னதமான மனித பிறவி....

அங்கிருந்த வரை கண்டிப்புடன் இருந்தவர்... இல்லத்தை தாண்டி சென்றும் மறவாது மாதம் தோறும் வருகை தரும் மூவர் மீதும் பாசத்தை தாண்டிய பிடித்தம்....

களம் காண்பேனோ காதலில் ?Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ