3 காதல் களம்

26 10 2
                                    

செம்மன்பட்டி கிராமம்....தன்னை தேடி  வருவோரை தென்றல் தாயவள் தலை கோதி வரவேற்றிடும் பசுமையான கிராமம்....  தொழிநுட்ப வளர்ச்சியால் இன்றைய உலகிற்கேற்றாற் போல் வளர்ச்சியடைந்திருந்தாலும் விலங்கு வேளாண்மை , நெற் செய்கை என  பாரம்பரிய தாெழிலையே சீவனோபாயமாக மேற்கொள்வதால் இன்றும் பசுமை மாறாது நிற்கிறது.. .

வாயிலிலே படர விட்டிருக்கும் கொடி மல்லிகை.... முற்றத்தில் வரிசையாக நடப்பட்டிருந்த குரோட்டன் செடிகள்... பல வண்ண ரோஜா செடிகள்...  என.. வர்ஷினியின் கை வண்ணத்தால்  நடை பாதை தவிர்த்து வாசல் பரப்பு முழுவதுமே  பல வண்ண பூச் செடிகளும் பயிர் வகைகளும் அழகாக வளர்க்கப்பட்டிருக்கிறது...

முற்றத்தை தாண்டி சென்றால் கிராமப்புற வீட்டுக்கே உரித்தான திண்ணை.... எத்தனை தான் காலம் சென்றாலும் குடும்பமாக சேர்ந்து  திண்ணையில் அமர்ந்து கதையளப்பது மறக்க முடியா நினைவுகளே.... திண்ணையை தாண்டி உள்ளே சென்றால்  கூடம்....  சாப்பாட்டு நேரம் தவிர்த்து இங்கே தான் அனைவரும் கூடியிருந்து அரட்டை அடிப்பர் தனி தனி அறை இருந்தாலும் கூடத்திலே தான் அவர்களது காலம் கழியும்....

பெரும்பாலும் அபி நந்தன் ஆஃபிசிற்கு சென்றால் அவினாஷ் பாட்டியுடன் தங்கி விடுவான் ... அவினாஷ் ஆஃபிசிற்கு சென்றால் அபி நந்தன் தங்கி விடுவான்.... நிலவன் மட்டுமே கல்லூரிக்கு செல்வதால் பாட்டியுடன் செலவிடும் நேரம் குறைவு... இதில் ஏக வருத்தம் பாட்டிக்கு தான்.... பேபி பேபி என வேண்டுமென்றே உருகி வழிவதும் அடித்து கொள்வதுமாக அந்த கூடமே அவர்கள் நால்வரது நினைவையும் தனக்குள்ளே பொதித்து வைத்துள்ளது...

இப்பொழுது அதில் வர்ஷினியும் கூட்டு... 

தந்தையிடம் கிடைக்காத பாசம்... கண்டிப்பு... அக்கறை என மொத்தத்தையும் அள்ளிக் கொடுக்க மூவர் இருக்க பெற்றவளுக்கு நிகராக தன்னில் பாசம் காட்டிட பாட்டியும் இருக்க அவள் ஏன் பணம்... பதவி... மது...மாது என அலையும் ஒரு குடும்பத்திடம் போய் விழ போகிறாள்....
பெற்றவனோ  பிறந்ததிலிருந்து ஆசையாய் ஒரு வார்த்தை பேசிடவில்லை... பெண் பிள்ளை பிறந்ததில் அப்பனுக்கு ஏக வருத்தமாம்... பார்வதிக்கு அடுத்த பிள்ளை சுமக்கும் பாக்கியமும் இல்லை என்றிட ஆண் பிள்ளைக்கு வழியே இல்லாது போய் விட வேண்டாத பிள்ளை தான் வர்ஷினி அப்பன்காரனுக்கு.... பணக்கார வரனை கப்பென பிடித்துக் கொள்ள பாசமாய் உருகி பேசிய தந்தையை முதலில் கண் கலங்க பார்த்தவள் காரணம் அறிந்ததும் மொத்தமாக உடைந்தல்லவா போய் விட்டாள் பேதையவள்....

களம் காண்பேனோ காதலில் ?Where stories live. Discover now