அவினாஷின் கரம் பிடித்து சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தவனுக்குள் ஆயிரமாயிரம் எண்ணக்கீற்றுகள் மின்னலென தோன்றி சடு குடு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க தடுமாறி போனான் அந்த ஆறடி ஆண்மகன்...
காப்பகத்தில் சுவரேறி இருந்தவன் தடுக்கி விழ பார்த்த போது...
மாடிப்படியில் இடற போனவனை இழுத்து நிறுத்திய போது...
முதல் முறை நீச்சல் குளத்தில் மூச்சு திணறி மயங்கிய போது...
இதாே இப்போது தலையை பிடித்து அலறிய போது...ஒரு தடவை இரு தடவை அல்ல...
எப்போதெல்லாம் அவனுக்கு ஆபத்து என்று உணர்கிறானோ அந்த ஒவ்வொரு நொடியும் உள்ளே இருந்து அவனை உந்தி தள்ளிய அந்த ஆழ் மன உணர்வை நட்பு எனும் ஒற்றை வார்த்தைக்குள் முடக்கி வைக்க முடியும் என்று இப்போது தோன்றவில்லை.... அதையும் தாண்டி ஏதாே..
எக்கு தப்பாக ஏகத்துக்கும் துடிக்கும் இதய துடிப்பின் காரணம் என்ன....
ஏன்? .... என்ற கேள்வியே மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்க சுற்றி நடப்பவை... நடந்தவை எல்லாம் சூன்யமானது போன்ற உணர்வு...எதிலும் ஒட்டாத தன்மை...
இருக்கும் இடத்தை விட்டே ஓடி விட வேண்டும்...போய் விட வேண்டும்... போய் விடு என்ற குரலே சுற்றிலும் காதில் ஒலிப்பது போன்ற பிரம்மை...
சொந்தமே இல்லாத இடத்தில் அண்டுவது போன்ற எண்ணம்...
சிந்தனையில் துளியும் தன்னையும் அவியையும் தாண்டி எதுவுமே இல்லை....வர்ஷினி, அபிநந்தன், காலேஜ் சொந்தம், பந்தம். படிப்பு ஏன் வேணிம்மா எதுவும்... எவருமே இல்லை... கைப் பிடித்து அமரந்திருக்கும் அவினாஷை தவிர... எந்த சந்தர்ப்பத்திலும் அவனை மட்டும் தவற விட்டு விடவே கூடாது..
அந்த எண்ணம் மட்டுமே சிந்தனையை ஆக்கிரமித்திருந்தது நிலவனுக்கு ...இவன் இப்படியென்றால் அவியின் நிலைமை...
பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டவாறு அமர்ந்திருந்த அவினாஷின் உடல் மட்டுமே நிலவனின் பிடிக்குள் இருக்கிறது...
அவனது நினைவுகள் எதையோ தேடி அலைந்து காலத்தின் கணக்கில் நினைவுகளாய் மாறிப் போன ஞாபக அடுக்குகளில் எதையோ தேடி ஓடுகிறது...
எண்ண அலைகள் மொத்தமாக வந்து குவிய மூளை நரம்புகள் வெடித்து விடுவது போன்றான வலி...
ஏதாே ஒரு நினைவை தேடி ஓடுகிறது அவனது சிந்தனை...

ESTÁS LEYENDO
களம் காண்பேனோ காதலில் ?
Aventuraஇந்த படைப்பை பார்க்க உள்ளே வந்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் முதல் கணம் ஒரு பெரிய நன்றி..... நம்ம தொடங்க போற இந்த தொடர்கதை " களம் காண்பேனோ காதலில் ? "... தேடல் நிறைந்த ஒரு ஃபேன்டசி லவ் ஸ்டோரியா வைச்சுக்கலாம்... கதை என்னன்னா நம்ம கூடவே நம்ம உலகத்துல ச...