நிலவன் இறுக்கமான முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லைதான்.... ஆனால் எதிரில் பார்வையை தாழ்த்தி முகம் முழுவதும் நாணத்தின் சாயம் பூச ஓடி வந்து நின்ற பெண்ணவளை எத்தனை நேரம் உள்ளுக்குள் ரசித்து கொண்டிருந்தானோ தெரியவில்லை...
சட்டென விழியுயர்த்தி பார்த்தவள் தன்னை நோக்கி கைகளை நீட்டியவாறு நிறுத்திய ஓட்டத்தை மீண்டும் தொடர அவளது செய்கையில்... சுய நினைவு வந்தவன் சுற்றம் மறந்து உறை நிலைக்கே சென்று விட்டான் பையன்.....
பாவம்... அதிர்ச்சியில் விழி விரித்து நின்ற நிலவனை இவளோ ஈ... எறும்பாக கூட சட்டையே செய்யவில்லையே ...
"அண்ணா..." என சிரிப்புடன் அவனை தாண்டி ஓடிச் சென்று அணைத்துக் கொண்டது என்னவோ வாசலிலே பல்லைக் காட்டியவாறு நின்று கொண்டிருந்த பாசக்கார அண்ணன்கள் அவியையும்... அபி நந்தனையுமே....
திடீரென ஓடி வந்த வர்ஷினியின் செய்கையில் ஒரு கணம் உறை நிலைக்கு சென்றவனோ....
"வரு பாப்பா...
"வரு குட்டி... " என கொஞ்சிய நண்பர்களின் குரலை கேட்டதும் கொதி நிலைக்கே சென்று விட்டான் .... நிலவனை வழியனுப்பி வைத்த கையோடு ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்து விட்டு கதவை இழுத்து சாத்தி விட்டு கிளம்பியே விட்டிருந்தனர்..... அவனின் பின்னோடு...ஒரு முறை தன்னை சமன்படுத்தி கொள்ள தலையை உலுக்கிக் கொண்டவன்.... அப்போதுதான் சுற்றி என்ன நடந்தது என்பதை பார்க்க...
இதையெல்லாம் கவனித்த வேணிம்மாவோ பொங்கி வந்த சிரிப்பை வெளியே தெரியாமல் கைகளால் முகத்தை மறைத்து அரும்பாடு பட்டு கொண்டிருந்தவரோ..
நிலவனின் திரு திரு முழியில் பக்கென அடக்க மாட்டாமல் சிரித்தே விட்டார்....
இவன் இங்கு முறைக்க தொடங்க வாயை பொத்தி கொண்டவர்.... வர்ஷினியை போலவே தானும் ஓடி விட்டார்...
இவனும் வாசலுக்கு செல்ல அங்கு லோ பட்ஜெட்டில் சிவாஜி கணேசன் படம் ஓட்டிக் கொண்டிருந்தோரை பார்க்க கடுப்பு தான் வந்தது அவனுக்கு ....
أنت تقرأ
களம் காண்பேனோ காதலில் ?
مغامرةஇந்த படைப்பை பார்க்க உள்ளே வந்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் முதல் கணம் ஒரு பெரிய நன்றி..... நம்ம தொடங்க போற இந்த தொடர்கதை " களம் காண்பேனோ காதலில் ? "... தேடல் நிறைந்த ஒரு ஃபேன்டசி லவ் ஸ்டோரியா வைச்சுக்கலாம்... கதை என்னன்னா நம்ம கூடவே நம்ம உலகத்துல ச...