அள்ளிக் காெடுப்பதில் இயற்கை அன்னையவள் என்றும் குறை வைத்திடமாட்டாள் ... அவளின் பிள்ளை கதிரவன் மட்டும் கஞ்ச தனம் செய்திடுவானா என்ன ?.. தன் வெப்பக் கதிர்களை உலகத்தாருக்கு வாரி வழங்கிக் கொண்டிருந்தான்....
பந்தடி பட்டு தாடை வீங்க வந்த அபி நந்தனுக்கு வேணிம்மா மருந்து போட்டுக் கொண்டிருந்தார்...
"சின்னபிள்ளைங்க கிட்ட போய் அடிபட்டு வந்திருக்க.."
" நல்லா கேளு பாட்டி படிக்க வந்த பசங்களை இழுத்துட்டு போய் விளையாண்டா இப்டிதான் ஆகும்... நாளைக்கு அந்த அலமு வந்து என்னைதான் காயும். " .... சொல்ல சொல்ல கேளாமல் பிள்ளைகளை இழுத்து சென்ற கோபம் அவளுக்கு... உடனே பச்சை பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டவன்
" வரு பாப்பா அண்ணனை திட்டுறியா மா" என இழுக்க....
" உன் மூஞ்சிக்குதான் இந்த பாவமா நடிக்குறது கோவமா பேசுறது ரெண்டுமே வருது இல்ல ல அண்ணா... அப்புறம் ஏண்ணா அதையே ட்ரை பண்ணுற..." என தலையிலடித்துக் கொண்டாள்...
" உன் ஆளு கிளம்பினதும் நான் பாசமா பேசுறது வேசமா தெரியுதுல... " மூக்கை சுருக்கி கேட்க...
" ம்க்கும்... நீதாண்ணா அடிக்கடி அந்த சிடுமூஞ்சியை என் ஆளுன்னு சாெல்லி எனக்கே ஞாபகப்படுத்துற... இல்லன்னா எனக்கே மறந்துரும்... இந்த வேணியும் கம்முனு இருக்குது... பேத்தி வாழ்ககைல அக்கறையே இல்ல... " வர்ஷினி சலித்துக் கொள்ள அவனது பார்வையும் வேணிம்மாவை தீண்டியது...
எதுவும் கேளாதது போல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த வேணிம்மாவை கண்டு புருவம் தூக்கியவன்
" என்ன பேபி உன் பேரன் மூஞ்சு வீங்கினாலும் மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கேன் ல " என கண்சிமிட்டி கேட்க..." உனக்கானவங்க வரப்போ இந்த வேணியை மறந்துடாதடா கண்ணா.. "
"என்ன வேணி சொல்லுற ? "
புருவம் இடுங்கக் கேட்டவனை பார்த்து இயல்புக்கு வந்தவர்....
"வேலைனு ஊருக்கு போனானுங்க. ஒரு ஃபோன் கால் இல்ல பாரு நீயும் வேலைனு கிளம்பி போனா என்னை மறந்துருவல"
என சிறு பிள்ளை போல் முகத்தை சுருக்கி வைத்து கேட்க அவரது கன்னம் பிடித்து கொஞ்சியவன் ..
![](https://img.wattpad.com/cover/355259502-288-k44394.jpg)
ESTÁS LEYENDO
களம் காண்பேனோ காதலில் ?
Aventuraஇந்த படைப்பை பார்க்க உள்ளே வந்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் முதல் கணம் ஒரு பெரிய நன்றி..... நம்ம தொடங்க போற இந்த தொடர்கதை " களம் காண்பேனோ காதலில் ? "... தேடல் நிறைந்த ஒரு ஃபேன்டசி லவ் ஸ்டோரியா வைச்சுக்கலாம்... கதை என்னன்னா நம்ம கூடவே நம்ம உலகத்துல ச...