இறகு 1

226 20 27
                                    

🦚மனதை மயிலிடம் இழந்தேனே 🦚

🫰𝕨𝕖𝕖𝕜𝕖𝕟𝕕 𝕤𝕥𝕠𝕣𝕪....

😇Epi - 1

ஏர் இந்தியா விமானம்.... இந்திய நேரம் காலை 6.00 மணி அளவில் சென்னை ஏர்போர்ட்டில் தரை இறங்கிய செய்தியை அறிந்து...அழகு சாதன துறையில் நம்பர் ஒண்ணாக புகழ் பெற்ற "ADM"அழகு சாதன நிறுவனத்தின் துணை உரிமையாளர் 57 வயது மதிக்க தக்க வானதி தேவராஜ் கை கடிகாரத்தை பார்த்தப்படி தன் கைபேசி மூலம் யாரிடமோ காரசாரமாக பேசி கொண்டு இருந்தாள்.....

"மேடம்,சின்ன ஐயா வராரு" என்ற டிரைவர் மணி...வேகமாக ஓடிச்சென்று 30 வயது மதிக்க தக்க ஆறடிக்கு மேல் இருக்கும் கம்பிரமான தோற்றமுடைய கோதுமை நிறம் கொண்ட ஆண்மகன் "ஆரூரன் தேவராஜ்" கையில் இருந்த Brief caseஸை வாங்கிக்கொண்டு வேகமாக வந்து கார் கதவை திறந்து விட........

"Thanks வேலா " என்றப்படி காரில் ஏறி அமர்ந்தவனின் கண்கள் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் தன் சித்தி வானதியை பார்த்து கடமைக்கென்று கூட சிரிக்க வில்லை............

"எப்படி இருக்க ஆரூ.... வெளிநாட்டுக்கு போன காரியம் எல்லாம் நல்ல விதமா முடிந்ததா " என்று வானதி கேட்டதும்.... தன் Brief Caseஇல் இருந்து சில ஆவணங்களை எடுத்து வானதி கையில் கொடுத்தவன்... அதனுடனே ஒரு Pendriveயும் கொடுத்தான்....

சில நிமிடங்கள் அவன் தந்த ஆவனங்களை எல்லாம் சரி பார்த்த வானதியின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்து.... " Wow... நீ எப்பவுமே Great ஆரூ ..... பையன்னு பெற்றால் உன்னை மாதிரி ஒரு பிள்ளையை பெக்கணும் " என்று வானதி வார்த்தையால் ஆரூரணை வர்ணிக்க.... அவள் பேசுவதை காதில் வாங்காத ஆரூரன்..."மணி..வண்டியை கெஸ்ட் ஹவுஸ்க்கு திருப்பு " என்றான்.......

"என்ன பா ... பல மாசத்துக்கு பிறகு இப்போ தான் இந்தியா வந்து இருக்க... ஏன்..? வீட்டுக்கு வந்து உன் அப்பாவை பார்க்கலாமே " என்று வானதி பாசமாக பேசும் எந்த வார்த்தையும் அவன் காதில் வாங்காமல் போக காரணம்...
சித்தி என்றாலே கொடுமைக்காரி என்ற ஒரு தவறான எண்ணம் தான்....

🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚Where stories live. Discover now