இறகு 36

85 12 16
                                    

🦚மனதை மயிலிடம் இழந்தேனே 🦚

🅔︎🅟︎🅘︎..36

"பாண்டிச்சேரியா...? அப்போ நம்ம வர லேட் ஆகுமா?"என்று மயிழினி கேக்க

"ம்... ஆமா ஹனி, எப்படியும் 7pm குள்ள நானே உன்னை வீட்டுல ட்ரோப் பண்ணிடுறேன்.. You don't worry அம்மாவும் நம்ம கூட வராங்க" என்று மஹத் சொல்ல....

"என்ன இது?.... குடுமி வேற 5.30pm மணிக்கு நமக்காக வெயிட் பண்ணுவேன்னு சொன்னாரே.... இப்போ என்ன பண்ணுறது?"
என்று மயிழினி தனக்குள் யோசித்தபடி கண்களை நாலா பக்கமும் சுழற்றி யோசிக்கும் பெண்ணவளின் சைகையை கூட ரசனையாக கவனித்து இருந்த மஹத் ...
"ஏன்... உனக்கு வேற எதாவது appointment இருக்கா?"என்று கேக்க
"ம்... 5.30 pm சார்" என்று தலையாட்டியவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்...

"சரி..நம்ம 5pmக்கு எல்லாம் return வர மாதிரி நான் பாத்துக்குறேன்" என்று மஹத் சொன்னதும் மயிழினியின் முகம் அழகாய் மலர்ந்தது...

"நீ சிரிச்சா ரொம்ப அழகா இருக்க ஹனி" என்று மஹத் சொல்ல.
"Thanks சார், ஹாங் நம்ம எத்தனை மணிக்கு போகணும்?" என்று கேட்டாள்.

"இப்போவே கிளம்புனா சரியா இருக்கும், போகும் போது அம்மாவை கோவில்ல இருந்து பிக் up பண்ணிக்கலாம்" என்றான் கைகடிகாரத்தை கவனித்தப்படியே.

"மித்ரா மேடம் வரலையா?" என்று இவள் கேக்க.
"இல்ல ஹனி அவ டூட்டி போய் இருக்காள், சரி.. நீ வா கிளம்பலாம்" என்ற மஹத்தை பின் தொடர்ந்து சென்ற மயிழினி.. அவனுடன் காரில் கோவிலை நோக்கி பயணித்தாள்..

கோவிலில் இவர்களுக்காக காத்து இருந்த மஹத்தின் அம்மா வானதியை பிக் up செய்த மஹத் தன் காரை பாண்டிச்சேரியை நோக்கி விரட்ட.... காரின் பின் இருக்கையில் வானதியும் மயிழினியும் அமர்ந்து இருக்க.. மஹத்தின் பார்வை அடிக்கடி மயிழினி மேல் பதிந்து மீழ்வதை கவனித்த வானதியின் மனம் இருக்கொல்லி எறும்பை போன்ற நிலையில் தவித்தது...

மயிழினியும் வானதியும் இயல்பாக பேசிக்கொண்டாலும் வானதிக்கு ஏனோ அவர் மனதில் முதல் முறையாக சிறு சங்கடம் ஏற்பட்ட நிலையில்...
"உங்க அப்பாகிட்ட நாங்க சனிக்கிழமை வீட்டுக்கு வரத பத்தி கேட்டுட்டு சொல்லுறேன்னு சொன்னியே, என்ன மறந்துட்டியா?" என்று வானதி கேட்டதும்.

🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚Where stories live. Discover now