இறகு 8

86 13 13
                                    

🦚மனதை மயிலிடம் இழந்தேனே 🦚

🦚இறகு - 8

🆆︎🅴︎🅴︎🅺︎🅴︎🅽︎🅳︎🦚🆂︎🆃︎🅾︎🆁︎🆈︎

"ஐயோ மயிலு... என்னமா பண்ற" என்று அலறினான் வேலு....

"Sorry Sorry அண்ணா.... அந்த குடுமி காரனை உங்க போன்ல பார்த்ததும் எனக்கு கோவம் வந்துடுது" என்ற மயிலை பார்த்து சிரிப்பதா கோவிப்பதா என்று தெரியாமல்...மீண்டும் தன் காரை அவன் வீட்டை நோக்கி விரட்டிய வேலன்..... சில நொடிகளில் மயிலையும் கமலியையும் அவர்கள் வீட்டில் இறக்கி விட்டவன்..... அதே வேகத்தில் மருத்துவமனைக்கு சென்று மித்ராவின் கைபேசியில் இருந்து ஆரூரனை அழைத்து...அவன் அப்பா தேவராஜின் நிலையை கைபேசி மூலம் தெரியப்படுத்தின்னான்..

" என்ன டா சொல்லுற.... நீங்க எல்லாம் இருந்தும் அவருக்கு ஏன் இப்படி ஆச்சு" என்று கத்திய ஆரூரன்... அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்....

ஆரூரனை அங்கே எதிர்பாராத அவனின் சித்தி வானதி...."ஆரூ...நீ எப்படி இங்க வந்த.... அப்பா.... உன் அப்பாவை.... ஐயோ உன் அப்பா இந்த நிலைமையில் இருக்கும் போது தான் அவரை பார்க்க உனக்கு மனசு வந்துச்சா" என்ற வானதி.... ஆரூரனை கட்டி அணைத்து கண்கள் கலங்கினார்......

"அழாதீங்க....டாக்டர் என்ன சொன்னாரு....இப்போ அவரு எப்படி இருக்காரு" என்று அன்பை கூட வம்பான குரலில் கேட்கும் தன் அண்ணனை முறைத்தாள் மித்ரா...

"டாக்டர் வைத்தியம் பார்த்துகிட்டு இருக்காங்க ஆரூ...... உன் அப்பாவுக்கு ரத்தம் கிடைக்காம ரொம்ப பயந்துட்டோம்... நீ இந்தியால இருக்குறது தெரிந்து இருந்தா நீயே உன் அப்பாவுக்கு ரத்தம் கொடுத்து இருப்ப.....ஆனா பாரு,அங்க அலைந்து இங்க அலைந்து கடைசியா நம்ம வேலுவோட தங்கச்சி மயிழினி தான் உன் அப்பாவுக்கு ரத்தம் கொடுத்தாள் " என்று வானதி சொன்னதும்....... ஆரூரன் தன் நண்பனை பார்க்க.....

"ம்.... அந்த பொண்ணு தான் "என்று வேலு சொன்னதும்..... மின்னல் வேகத்தில் மயிழினியின் முகம் ஆரூரன் கண் திரையில் தோன்றி மறைந்தது.......

🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚Where stories live. Discover now