இறகு 29

54 10 6
                                    

🦚மனதை மயிலிடம் இழந்தேனே 🦚

🅔︎🅟︎🅘︎...29

"அக்கா அக்கா என்னாச்சு அக்கா?.... ஐயோ உடம்பு ரொம்ப சூடா இருக்கே.. ஐயையோ .... அக்காவுக்கு ரொம்ப ஜுரமா இருக்கு " என்று கமழினி வேலுவின் அம்மா ஜெயாவை அழைக்க.... இவர்கள் சற்றும் தாமதிக்காமல் மயிழினியை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் வேகமாக வந்த Audiகார் இவர்கள் பயணித்த ஆட்டோவை மோதியது வேலுவின் கார் தான்....

ஆட்டோ டிரைவர் கோபமாக கீழே இறங்கி வந்தவாரு "டேய் கண்ணை என்ன தலையில வச்சுக்கிட்டு ஓட்டுறியா அறிவு இல்ல உனக்கு" என்று கத்த.....

" சாரி பாஸ் தப்பு என் மேல தான் சாரி சாரி" என்றபடி வேலு....ஆட்டோவின் அருகில் வந்து நின்றதும்....வேலுவை பார்த்த கமழினி "அண்ணா நீங்களா?" என்று கேட்க....
" கமல் நீ என்ன காலைல வெளியே வந்து இருக்க...என்ன ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்டான் வேலு......

"டேய் வேலு..... மயிலுக்கு" என்று ஜெயா சொல்லும் முன்பு.....வேலுவின் கார் பின் இருக்கையில் இருந்து கீழே இறங்கிய ஆருரன் "என்ன பிரச்சனை?" என்று கேட்டுக்கொண்டே இவர்கள் அருகில் வந்து நின்றான் ...

"ஆட்டோ அண்ணா தப்பு என் மேல தான் மன்னிச்சிடுங்க ஆட்டோவுக்கு எவ்வளவு செலவோ நானே அந்த செலவை ஏத்துக்கிறேன்" என்று வேலு சொன்னதும்.....ஆட்டோ டிரைவர் மேற்கொண்டு பிரச்சனை செய்யாமல்...
"பரவால்ல பரவால்ல ஏதோ தன்மையா பேசுற... அதனால விடுறேன்.....இதே பணக்கார திமிரை ஏதாவது காட்டியிருந்தீங்க அவ்வளவுதான்" என்று சொல்ல....... "அய்யய்யோ அண்ணா நான் பணக்காரன் எல்லாம் இல்ல...நானும் இந்த காருடைய டிரைவர் தான்...சரி இந்தாங்க பணம்...மெக்கானிக் ஷெட்ல விட்டு ஆட்டோவை சரி பண்ணிக்கோங்க" என்ற வேலு ஆட்டோ டிரைவரை சமாதானம் செய்து கொண்டிருந்த வேளையில்....ஆரூரரின் பார்வை ஆட்டோவில் பின் இருக்கையில் கண்கள் மூடி ஜுரத்தில் அமர்ந்திருக்கும் மயிழினி மேல் பட்டதும்... பதறிப் போய் ஆருரன் அவள் அருகில் சென்றவன்....
"ஹே என்ன ஆச்சு...... கமல் பொம்மைக்கு என்ன ஆச்சு.....aunty மயிலுக்கு என்ன பிராப்ளம்?"
என்று பதறினான்...

🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚Where stories live. Discover now