💙இறகு 19💙

70 14 16
                                    

🦚மனதை மயிலிடம் இழந்தேனே 🦚

🅔︎🅟︎🅘︎...19

"வேற என்ன யோசனை?" என்று மித்ரா கேக்க.....
"ஆரூ நெற்றியில எப்படி விபூதி குங்குமம் வந்துச்சு?... அவனுக்கு தான் சாமி மேல எல்லாம் நம்பிக்கை இல்லையே..... ஏன் வேலு நீ ஆரூக்கு பிரசாதம் கொடுத்தியா!?" என்று வானதி கேக்க....

"இல்ல அம்மா... ஆரூரன் இன்னைக்கு இங்க வருவான்னு எனக்குத் தெரியாதுமா..நான் விபூதி எல்லாம் கொடுக்கல.... நான் கொடுத்தாலும் அவன் அதெல்லாம் வச்சிக்க மாட்டான் " என்ற வேலு....காரை இயக்கி கொண்டு இருக்க...

"பின்ன எப்படி ஆரூ நெற்றியில் விபூதி வந்துச்சு?" என்று மீண்டும் வானதி கேள்வி கேக்க....

"அதுவா......உங்க பெரிய பையனுக்கு நான் தான் விபூதி குங்குமம் கொடுத்தேன்... ஹ்ம் இல்ல இல்ல வச்சு விட்டேன் "....என்ற மயிழினியை.. மித்ரா, வேலு, வானதி ஆகிய மூவரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர்....

“என்ன மயிலு சொல்ற….. ஆரூkku நீ விபூதி கொடுத்தியா!?” என்று வேலு ஆச்சிரியமாக கேக்க….

“கொடுக்கல…. நானே வச்சி விட்டேன்” என்ற மயிழினியை பார்த்து வானதியும் மித்ராவும் வாயடைத்து போய் அமர்ந்து இருந்தார்கள்…

“நீ எப்போ அவனை பார்த்த?” என்று வேலு கேக்க…
“நீங்க எல்லாம் ஏலம் எடுக்க போனீங்களே….அப்போ தான் அவரை பார்த்தேன்….. அப்போ தான் நான் அவருக்காக வேண்டிகிட்டு எடுத்துட்டு வந்த திருநீரை வச்சி விட்டேன்” என்றாள் மயிழினி….

“என்ன…. ஆரூ அண்ணாவுக்காக நீ வேண்டிகிட்டியா?” என்று மித்ரா கேக்க…
“ஆமா…. நான் தான் வேண்டிகிட்டேன்” என்றவள்……காரின் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்…

“அப்போ ஆரூ உன்கிட்ட பேசினானா?” என்று வேலு கேக்க…
“ஆமா…. ஏன் கேக்குறீங்க” என்று கேட்டாள் மயிழினி….

“இல்ல மா…எமிலி விஷயத்துல அவன் உன் மேல கோவமா இருந்தானே…அதான் கேட்டேன்” என்று வேலு சொல்ல…
“நாங்க தான் சமாதானம் ஆகிட்டோமே…. ஏன் உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்டாள் மயிழினி….

🦚மனதை மயிலிடம் இழந்தேனே🦚Where stories live. Discover now