வார்த்தை ஜாலம்-POEM

413 3 2
                                    

கமழும் மணம் கொண்டு,

சரித்திரத்தில் இடம் பெற்று,

இடம் பொருள் பார்த்து,

தவழ்ந்து வரும் அழகை கண்டு,

பதித்து வைத்தேன் மனதில் இன்று!

பதற வைத்தாய் பார்வையால் கொன்று!

யவன மங்கையரை பார்த்து வந்தேன்!

இரந்து உன்னிடம்தானே இதயம் கேட்டேன்!

இலட்சங்களை வாழ்வென நினைத்தேன்,

வஞ்சி உன்னிடம் வாழ்வின் அர்த்தம் கண்டேன்!

பழமுதிர்ச்சோலைகளை சுற்றிப் பார்த்தேன்,

வளத்தில் நீதான் உயர்வென உணர்ந்தேன்!

இங்கு யார்தான் எனக்கு பந்தம்,

ஞாயிறு மலரே உனக்கு நான் சொந்தம்!

வனத்தில் பூக்கள் பூக்கும் காலம்,

நஞ்சில் நனைந்தேன் என நினைத்தது ஞாலம்!

மழையாய் நீ பொழிந்து, புரிய வைத்தாய் சத்தியம்,

கண்ணில் உன்னை கொண்டேன் அதுதானே பாக்கியம்!

Romantic poemsWhere stories live. Discover now