அத்தியாயம் 13

5.6K 295 24
                                    

அன்றைய நாள் மகிழ்ச்சி, கோபம் என எப்படியே ஓடியது சுபாவிற்கு. வீட்டிற்கு வந்தவுடன் லட்சுமி வேறு அறையை தயாராக வைத்து இருந்ததால் நிம்மதி பெறுமூச்சி விட்டாள். அன்று நடந்த அனைத்தையும் லட்சுமியிடம் ஓப்பித்தாள். முக்கியமாக சிவாவை திட்டி தீர்த்தாள். ஆனால் கீர்த்தி பற்றி எதுவும் சொல்லவில்லை.

ஊர் சுற்றிவிட்டு மோகன் வீட்டிற்கு சற்று தாமதமாக வந்த பிறகு கார்த்திக்குடன் skypee ல் பேசினான்.
மோகன் கோபமாக இருப்பதுபோல் பாவனை செய்துக்கொண்டுதான் பேசினான்.
"Hi மச்சி எப்பிடி இருக்க..." கார்த்திக்

"Hello நீங்க யாரு, இதுக்கு முன்னாடி உங்கள பாத்ததே இல்ல "மோகன்.
"டேய் உனக்கு கஜினி சூர்யா மாதிரி short time memorylossஆ. 2 நாளைக்கு முன்னாடிதான பேசனோம்"

"அப்போ உனக்கு என்னை ஞாபகம் இருக்கு ஆனா எதாவது முக்கியமான விஷயம்னா share பன்னிக்க மாட்ட அப்படித்தான. "மோகன் சண்டை போடும் தோனியில்.

"நீ எதுக்கு கோவப்படறன்னு தெரியுது. ஆன இது ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம் இல்லயே... அவளுக்குதான் என்னோட friends அ புடிக்கறது இல்லயே நீ போய் என்ன பன்னபோற. அதோட கீர்த்தி உன்ன 2 வருஷத்துக்கு முன்னாடி பாத்தது.அதுவும் நீ எப்பயாவதுதான் வருவ... ஞாபகம் இருக்கோ இல்லயோ. சரி நானா சொல்லவேனாம். அவனா போய் திட்டு வாங்கிட்டு வந்து call பன்னட்டும்னு உட்டுட்டேன்." கார்த்தி.
"திட்டலா இல்ல... இருந்தாலும் அவ சின்ன வயசுல இருந்து டாக்டர் ஆகனும்னு ஆச பட்டா. அது நிறைவேறிடுச்சி.அதனால நீ சந்தோசமா இருப்ப .... அந்த சந்தோஷத்துல எனக்கும் share குடுத்து இருக்கலாம் இல்ல...". என்று சோகக்குரலில் கூறினான்.

"Sorry டா... உங்க college ல அவ சேந்ததே எனக்கு புடிக்கல... நல்ல mark எடுத்து சீட் வாங்கி இருந்தா நான் சந்தோஷமா பெருமையா சொல்லி இருப்பேன்... அவ குறுக்கு வழில வந்து சேந்து இருக்கா... எப்படி நான் சொல்லறது. இன்னா ஆகபோறான்னு தெரியல... நான் எவ்ளோ advise பண்ண தெரியுமா... 2 நாளா சாப்படாம இருந்து அடம்புடிச்சா... அதோட நான் உங்களுடய சொந்த புள்ள இல்லயே அதான் இப்படி நடந்துக்கறீங்கன்னு வார்த்தயால சாகடிச்சா... அப்பாவும் சீட் வாங்கி குடுத்துட்டாரு.... அதான் மச்சா சொல்லல... திமிரு புடிச்சவ... " என்று சலித்துக் கொண்டான் கார்த்திக்.
" அப்படில்லாம் சொல்லாதடா... நல்ல பொண்ணுதான். ஏதே சந்தர்ப சூழ்நிலையால மாறிட்டா...சின்ன பெண்ணு வளந்தா சரியாயிடுவா..." மோகன்
" அதுக்குதான் நாங்களும் ஆசப்படறோம். சரி அவளவிடு நீ சொல்லு எப்படி இருக்க... அப்பா அம்மா அண்ணன்லாம் எப்படி இருக்காங்க..." கார்த்தி.
" ம்... நல்லா இருக்காங்க.அண்ணனுக்கு பெண்ணு பாத்தாங்கன்னு சொன்னேன்ல. அடுத்த மாசம் நிச்சயதார்தம். அப்பறம் 4 மன்த் கழிச்சி கல்யானம்னு fixபன்னி இருக்காங்க. கண்டிப்பா கல்யாணத்துக்கு நீயும் பிரபாவும் வரனும். "மோகன்.

"முயற்சி பண்னறேம்டா. எதாவது முக்கியமான assignment இருந்துச்சினா வரமுடியாது. இப்பவே சொல்லிட்டேன்." கார்த்தி.
"ஆமா பிரபா எங்க.... "மோகன்

"இதோ இங்கதான் இருக்கான்..." என்று laptopபை அவன் பக்கம் திருப்ப கட்டிலில் சோகமாக படுத்துக்கொண்டு இருந்தவன் hi கூறினான்.
"என்னடா ஆச்சு.... "அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை தெரிந்துக்கொண்டவனாக...
"Feverக்கு கூட அவன புடிச்சி இருக்கு... "டாக்டர் சார்.

"டாக்டர்ட கூட்டிட்டு போனல்ல....ஒன்னும் பிரச்சன இல்லயே..." மோகன்.

"அதல்லாம் உன்னவிட நல்ல டாக்டர் கிட்டயே கூட்டிட்டு போயிட்டேன். ஒன்னும் இல்லன்டாங்க..". கார்த்தி

"சரி அந்த பெண்ணு யாரு....." மோகன்

"எந்த பொண்ணு....." கார்த்தி.

" அதான் உன்வீட்ல சூப்பரா ஒரு பொண்ணு இப்ப வந்து தங்கி இருக்கே ...." மோகன்

"அவளையும் பாத்துட்டியா..... மச்சான் அவ உன் தங்கச்சிடா...." கார்த்தி மாய சிரிப்புடன்.

"டேய் எனக்கு யேதுடா தங்கச்சி... இருக்கற ஒரு அண்ணனயே சமாளிக்க முடியல... ஓவரா advise பண்ணறான். இதுல தங்கச்சியாடா..." கடுப்புடன் கூறினான் மோகன்.

" மச்சான் என்னோட பொண்டாட்டி உனக்கு தங்கச்சி தானடா.... "கார்த்தி வழிந்தபடி.

"டேய் இது எப்ப இருந்துடா...."மோகன் ஆச்சரியத்துடன்.....

அதை தெரிந்துக்கொள்ள next update வரை காத்திருங்கள் நண்பர்களே. உங்களுக்கு இக்கதை பிடித்திருந்தால் vote &comment பண்ணுங்க. இது எனக்கு மிகவும் முக்கியம். நன்றி.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى.



உன் விழியில்...حيث تعيش القصص. اكتشف الآن