அத்தியாயம் 36

4.3K 186 40
                                    

      "சுபா நீ கார்த்திய லவ் பன்னரியா..." என்று கேட்டவுடன் சுபா செய்வதறியாது திகைத்து கார்த்தியை பார்த்தாள். ஆனால் கார்த்தி வேலையில் மும்முரமாக இருந்ததால் அவள் கேட்டதை கவனிக்கவில்லை. பிறகு அமைதி நிலைக்கு திரும்பியவள் கீர்த்தியிடம் பேச ஆரம்பித்தாள்.

   "ஏய் என்னடி லூசு மாதிரி என்னென்னவோ ஒலரர. அப்படிலாம் ஒன்றும் இல்லை". என கூறவும் "ஓ...." என பதிலலித்தவள் மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தாள்.

    "இப்ப எதுக்கு அப்படி கேட்ட..." என தயங்கியபடி சுபா கேட்க "அது ஒன்றும் இல்லடி நேற்று மால்ல கார்த்தி நிக்கிய கட்டி பிடித்ததற்கு நீ கார்த்திட்ட சண்டை போட்ட. ஆனால் பிரபா இன்றைக்கு ஒரு பெண்ணை கட்டி பிடித்தான் நீ எதுவுமே சொல்லலியே... அதான் கார்த்தி சொன்னது உண்மையா இருக்குமோன்னு கேட்டேன். கார்த்தி சொன்னான் நீ அவன லவ் பன்னரதாவும் ஜலஸ்னால சண்டை போட்டதாவும் சொன்னான்... அது சும்மா விளையாட்டுக்கு... நீ சீரியஸா எடுத்துகாத..." என்று கூறிமுடிக்கவும்  "பிரபா அண்ணா ஒரு பெண்ண ஹக் பன்னதா சொன்னியே... அத நான் பாக்கல. பாத்து இருந்தால் கண்டிப்பாக சண்டையிட்டு இருப்பேன்..." என கீர்த்தியிடம் கூறியவள் 'இனிமேல் இங்கு இருந்தோம் நம் வாயாலயே உண்மையை வர வைத்து விடுவாள்...' என நினைத்தவளாக தூக்கம் வருவதாக கூறிவிட்டு தன் அறைக்கு  புறப்பட்டு சென்றாள். அவள் சென்ற சிறிதுநேரத்தில் பிரபா அங்கு வந்து சேர்ந்தான்.

    "டேய்... நீ எதுக்கு போனுன்னு ஒன்னு வச்சிஇருக்க. கால் பன்னா அட்டன் பன்ன மாட்டியா..." கார்த்தி கேட்டு கொண்டு இருக்கும் போதே கீர்த்தி இடையில் புகுந்து "யார் அந்த பொண்ணு...." என கோபமாக கேட்டாள்.

  " எந்த பொண்ணு..."- பிரபா.

    "அதான் அந்த ரெட் ஸாரி..."- கீர்த்தி.

      "ஓ... அவதான் பவித்ரா... மை சிஸ்டர்". என பிரபா கூற "சிஸ்டரா... 5 வருஷத்துக்கு பிறகு இப்பவாவது கண்ணுல காமிச்சயே... இவ்வளவு தூரம் வந்து இருக்கா எதுக்கு பார்டிய அட்டன் பன்னல...." என கார்த்தி கேட்க "அவ அவ்வளவு வெளிய வரமாட்டா. இதெல்லாம் அவளுக்கு சுத்தமா பிடிக்காது. சீக்கிரம் யார் கூடயும் பழகிட மாட்டாடா... கோயம்புத்தூர விட்டு இப்பதான் ப்பஸ்ட் டைம் வெளிய வந்து இருக்கா. என்ன பாக்கரதுக்கு. எப்படியும் அண்ணியோட வளகாப்புலாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வர மூன்று நாள் ஆகும்னு சொன்னேன். அதான் அவளே வந்துட்டா..." என பிரபா கூற

உன் விழியில்...Tempat cerita menjadi hidup. Temukan sekarang