அத்தியாயம் 39

3.8K 180 91
                                    

காலை 2 மணி... அழகிய அமைதியான அந்த நேரத்தில் பிரபா மற்றும் மோகன் கார்த்தியின் அறையை கோபமாக தட்டிக்கொண்டு இருந்தனர். அந்த சத்தம் கேட்டும் கேட்காதது போல் படுத்துக்கொண்டு இருந்தனர் வருணும் சிவாவும். ஊசியை செலுத்திய இரண்டு மணி நேரத்தில் கார்த்தியின் மயக்கம் தெளிந்து இருந்தது. சத்தம் தாங்காமல் எழுந்தவன் நேரத்தை பார்க்க 2 என காட்டியதால் கடுப்பானவன் வேகமாக கதவை திறந்து "ஏன்டா இப்படி தூங்க விடாமல் என்னுடைய உயிர வாங்கரீங்க..." என தூக்க கலக்கத்தில் கூற அழுததால் கண்கள் சிவக்க நின்றிருந்த பிரபா அவன் சட்டையை பிடித்து தன் மனதில் தோன்றியதெல்லாம் சரமாரியாக கொட்டினான்.
கார்த்தி புரியாமல் முழிக்க அவனை தள்ளிவிட்டுவிட்டு வேகமாக வெளியேறினான். அங்கு கோபமாக நின்றுகொண்டு இருந்த மோகன் கார்த்தியின் போனை எடுத்து அவனின் விரல் ரேகையை பதித்து திறந்தவிட்டு அதை எடுத்துக் கொண்டு அவனும் வெளியேறினான்.

"மோகன்... மோகன்... என்னதான்டா ஆச்சி... எதுக்கு பிரபா இப்படி பிகேவ் பன்னறான்..." என கேட்டபடி அவனை பின்தொடர, வந்த கோபத்தில் மோகன் கார்த்தியின் கண்ணத்தில் வேகமாக அறைந்துவிட்டு தன் நடையை தொடர்ந்தான். மோகன் அறைந்ததால் கண்கள் இருண்ட கார்த்திக்கு அது தெளிய கொஞ்ச நேரம் ஆகியது. அவனுக்கு நடப்பது எதுவும் புரியாமல் தவித்தான். இருவரும் எங்கே என்று தேடிச்செல்ல இருவரும் தங்கள் அறையில் இருதனர். மோகன் கார்த்தியின் போனை நோன்டிக்கொண்டு இருக்க பிரபா தலையனையில் முகம் பதித்து அழுதுகொண்டு இருந்தான்.

" மோகன், பிரபா... தயவுசெய்து என்ன ஆச்சின்னு சொல்லுங்க... சத்தியமா எனக்கு நடக்கரது ஒன்னும் புரியல. நான் ஏதோ தப்பு பன்னி இருக்கேன்னு தெரியுது. பட் என்னன்னு எனக்கு சுத்தமா தெரியல... என்ன அடிங்க திட்டுங்க என்ன வேணும்னாலும் பன்னுங்க... ப்ளீஸ் எதுக்குன்னு சொல்லிட்டு செய்யுங்க..."- கார்த்தி.

மோகன் கார்த்தி கூறுவதை கேட்டு படுத்தபடியே அழுது கொண்டு இருந்த பிரபாவிடம் மண்டியிட்டு "பிரபா... எனக்கு என்னவோ இது கார்த்தி தெரிஞ்சே பன்னமாதிரி தெரியல... இந்த போட்டோவ பார்த்தாலும் செல்பி எடுத்த மாதிரி இல்ல. ஒருவேளை கார்த்தி பவிகிட்ட தப்பா நடக்க முயற்சி பன்னிஇருந்தா எதுக்கு இப்படி போட்டோ எடுத்து எல்லோருக்கும் அனுப்பி இருக்க போரான். சரி அதவிடு. நிச்சயதார்த்தை நிறுத்தனும்னு நினச்சி இருந்தால் மாப்பிள்ளை வீட்டுக்கு மட்டும் இந்த பிச்சர அனுப்பி இருக்கலாம் இல்ல. எதுக்கு இவனுடைய போன்ல இருக்கர எல்லா நம்பருக்கும் அனுப்பனும். அதுவும் இதுல இவன் சேவ் பன்னி இருக்கர நம்பர் எல்லாமே நமக்கு ரொம்ப வேண்டியவங்க நம்பர் மட்டும் தான்.... மாப்பிள்ளை வீடு சம்பந்தபட்டவங்களோ... இல்ல மத்த தேர்ட் பர்சனோ யாரும் இல்ல. நாம இது ஒரு கோஇன்சிடன்ட்ன்னு சொன்னா நம்பரவங்க... நாம சமாளிச்சிடலாம்டா..." என சமாதானப் படுத்த கார்த்தி நடந்து இருப்பதை உணர்ந்தான்.

உன் விழியில்...Donde viven las historias. Descúbrelo ahora