அத்தியாயம் 26

4.8K 216 31
                                    

   "பேச வேண்டியதெல்லாம் அதான் போன்லயே பேசியாச்சே..." என்று கூறியவனை பிரபா வேகமாக எழுந்து தள்ளிக் கொண்டு வெளியே சென்றான். அவர்களை சுபாவும் கீர்த்தியும் பின் தொடர்வதைப் பார்த்த பிரபா நீங்க "இரண்டு பேரும் தூங்க போங்க..." என்று கூறிவிட்டு கார்த்தியை கார் பார்க்கிங் பக்கம் இழுத்துச் சென்றான்.

     கீர்த்தி ஏதோ நினைத்தவளாக உள்ளே ஓடினாள். அவளை பின் தொடர்ந்து சுபாவும் ஓடினாள். அவள் நேராக கார்த்தியின் ரூமிற்கு சென்றனர். அங்கே கார்த்தியின் செல்போன் சுக்கு நூறாக தரையில் கிடந்தது. அதை பார்த்துவிட்டு இருவரும் பால்கனி பக்கம் சென்றனர். அங்கு இருந்து பார்த்தால் கார்த்தி & பிரபா நின்றுக் கொண்டு இருப்பது நன்றாக தெரிந்தது. ஆனால் அவர்கள் பேசுவது கேட்கவில்லை. வாய் அசைவைக் கொண்டு கண்டறியும் அளவுக்கு அவர்கள் அருகில் இல்லை. எனவே கீர்த்தி கார்த்திக்கின் கேமராவை சுபாவிடம் கொடுத்து zoom செய்து அவர்களின் வாய் அசைவதைக் கொண்டு அவர்கள் பேசுவதை அறியச் சொன்னாள். அவ்வாறு கண்டறிவது சுபாவிற்கு பழக்கப்பட்டது என்றாலும் அதற்கு மணம் ஒத்து நடக்க வில்லை. அதற்கு ஏற்ப கேமராவும் ஒரு வருடமாக  பயண்படுத்தாமல் இருந்ததால் ஒத்துழைக்கவில்லை.

      எனவே இருவரும் அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தனர். இதுவரை அடிதடி எதுவும் இல்லை. ஒருமுறை சட்டையை பிடித்துக்கொண்டு நின்றனர். அப்பரம் விலகி கார்த்தி ஒரு காரின் மேல் ஏறி அமர்ந்தான். அவன் எதிரே நின்று பிரபா கைகளை அசைத்து அசைத்து பேசிக் கொண்டு இருந்தான். சிலசமயம் மிரட்டும் தோணியில், சில சமயம் கெஞ்சும் தோணியில். இருதியில் இருவரும் கட்டி அணைத்தனர். பிறகு வீட்டிற்கு வராமல் சிரித்துக் கொண்டே ஒரு காரில் ஏறி வெளியே சென்றனர்.

    "என்னப்பா இவங்க பன்னறாங்க... திடீர்னு சமாதானம் ஆகிட்டாங்க. கொஞ்சம் ஆக்ஷன் படம் ஓடும்னு நினச்சேன்". என்று சுபா கூற அவளை பார்த்து கீர்த்தி முறைத்தாள். அதைக்கண்டவள்  "இல்லடி நீயும் நானும் சேந்து நல்லா காமடி பன்னிகிட்டு இருக்கோம். உங்க அப்பா அம்மா ரொமான்ஸ் படம் ஓட்டராங்க. அப்பரம் தங்க மீன்கள் படம் டெய்லி நீயும் உங்க அப்பாவும் லைவ்ல ஓட்டறீங்க. அதான் கொஞ்சம் ஆக்ஷன் சேத்தா நல்லா இருக்குமேன்னு சொன்னேன்". என்று முகத்தை குழந்தைப்போல் வைத்துக் கொண்டு கூறினாள்...
    "நடிக்காதடி... ஒனக்கு ஆக்ஷன் தான வேணும் இதோ நான் காட்டரேன்" என்று கூறிக் கொண்டு தன் கையில் இல்லாத வளையலை மேலே இழுத்து விட்டுக் கொண்டு அவளை துரத்த ஆரம்பித்தாள்.

      கோபமும் சமாதானமுமாய் அந்த இரவு ஓடியது. இனி இதுபோன்ற பிரச்சனை வராது என்ற எண்ணத்துடன் காலை 10 மணிக்கு விழித்து எழுந்தான் கார்த்தி. பிறகு குளித்துவிட்டு கீழே சென்றான்.கிட்சனில் லட்சுமி நான்வெஜ் சமைத்துக் கொண்டு இருந்தாள்.  அவங்க சமச்சா என்ன சமைக்காட்டி எங்களுக்கு என்ன... நாங்களா சாப்பிட போறோம். முக்கியமான விஷயத்த விட்டுட்ட  என்று என்னை  திட்டறீங்களா... போன பார்ட்லயே சொல்லி இருப்பேன். ஆனா இன்னா கமாண்ட்ஸ் பன்னறீங்கன்னு பாக்கத்தான் இப்படி ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துகிட்டு இருந்தேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நல்ல கமண்ட்ஸ் கிடச்சு இருக்கு. மிக்க நன்றி... அடுத்த அத்தியாயத்துல கண்டிப்பா அவங்களுக்குள்ள என்ன பிரச்சனன்னு சொல்லிடரேன். 😉😉😉






என்ன எதாவது திட்ட போறீங்க.... 

ஐ யம் பாவம்.....

அதனால இவங்களுக்குள்ள எப்படி சண்டை ஸ்டாட் ஆச்சுன்னு சொல்லிடரேன்.

அதுவந்து...

அதுவந்து...

நம்ப பிரபா.... கார்த்திகிட்டயே உன்னோட தங்கச்சி கூட ஸ்டேஜ்ல டேன்ஸ் ஆடட்டுமாாாான்னு கேக்கத்தான் செஞ்சான். அதுக்கு இவன் சண்டை போட அவன் சண்டை போட முத்திடுச்சி. அத நெக்ஸ்ட் அப்டேட்ல க்ளியரா சொல்லரேன். அதுக்குன்னு இன்னா பிரச்சனன்னுதான் தெரிஞ்சிடுச்சேன்னு நெக்ஸ்ட் அப்டேட்ட படிக்காம போயிட போறீங்க.அதுல ஒன்னு இருக்கு.... ஆனா இல்ல....

உன் விழியில்...Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin