02

6.3K 241 43
                                    

இரண்டு வருடங்கள்.. எல்லா வலியும் எல்லா தவிப்பும் இவனிடம் இருந்து விலகிடத்தானே.. இவ்வளவு தூரம் கடந்து.. இதுதான் வாழ்க்கை என ஏற்றுக் கொள்ள பழகிய பின்.. இவன் மீண்டும் கண்முன் வந்து நிற்கிறானே.. என தவிப்புடன் அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள் மது கையில் பொக்கேவுடன்.

தான் இருக்கும் சூழ்நிலை எப்படியோ உணர்வுக்கு வர.. “வெ.. வெல்கம்.. சார்..” என தடுமாற்றத்துடன் சொன்ன மது.. பொக்கேவை நீட்டினாள்.

குணா.. குணா.. என கொஞ்சிய அதே குரல்.. உள்ளுக்குள் கோபம் வந்தாலும்.. எதுவும் பேசாமல் பொக்கேவை வாங்கியபடி அங்கிருந்து நகர்ந்து தன்னறைக்கு சென்றுவிட்டான் குணா.

தான் விரும்பி ஏற்றுக் கொண்டது இந்த பிரிவு என்றாலும்.. குணா.. தன்னுடைய குணா.. எப்படி இருக்கனு ஒரு வார்த்தை கூட கேட்கலையேனு மதுவின் மனம் துடித்தது.

மற்றவர்கள் முன்னிலையில் பேச வேண்டாம் என எண்ணி இருப்பான்.. என குணா பேசாமல் சென்றதற்கு காரணம் கண்டுபிடித்து தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள் மது.

அறைக்கு சென்றதும் தன்னை அழைப்பான்.. தன்னிடம் பேசுவான்.. குணாவால் தன்னை விட்டு விலகியிருக்க முடியாது என மதுவின் நேசம் கொண்ட மனம் வாதிட்டது.

ஒவ்வொரு நொடியும் தவிப்புடன் நகர.. அரை மணி நேரம் கடந்த பின்னும்.. குணா தன்னை அழைக்கவில்லை.. அழைக்கப்போவதும் இல்லை.. என்ற உண்மை உரைக்க.. கண்ணீர் கசிந்தது மதுவின் கண்களில்.

தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு.. இயந்திரம் போல தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் மது.

இரண்டு வருடங்களுக்கு முன்.. தொழிலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பெரிதும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான் குணா.. இப்போது இந்த கம்பெனியையும் வாங்கும் நிலையில் இருக்கிறான். அதுபோல..

அதுபோல.. வாழ்விலும் வேறு ஒரு பெண்.. நினைக்கவே வலித்தது மதுவுக்கு.

இரண்டு வருடங்களாக தேடி அலையும் போதெல்லாம்.. மதுவை நேரில் கண்டதும் குணா.. கேட்க நினைத்த ஒரே கேள்வி.. எப்டி என்னை பிரிஞ்சு போக முடிஞ்சது உன்னால.. என்பதுதான்.

மறக்குதில்லை மனம்..Where stories live. Discover now