10

4.4K 208 33
                                    

குணா இந்த இடத்தை கண்டுபிடித்து விடுவான் என மது நினைத்து கூட பார்க்கவில்லை. குணாவை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் மது.

குணாவின் கண்களை சந்திக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள் மது.

இரண்டு வருடங்களாக தான் செய்யாத தப்புக்காக வருந்தி தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொள்ளும் தன் மதுவை பார்த்ததும்.. அவளை அள்ளியணைத்து.. அது உன் தவறல்ல.. என அவளுக்கு உணர்த்திவிட குணாவின் மனம் துடித்தாலும்.. செயலற்று நின்றிருந்தான்.

“அத்தைக்கு உடம்பு சரியில்லை..” என்றான் குணா சுருக்கமாக.

“அ.. அம்மாவுக்கு என்னாச்சு குணா..” என பதற்றமாக கேட்டாள் மது.

“வேற என்ன.. எல்லாம் உன்னை பார்க்க முடியாத ஏக்கம் தான்.. சாப்பிடாம உடம்பை கெடுத்து வச்சிருக்காங்க..” என்றான் குணா.

அதற்குள் தேவியும் சங்கரனும் வர.. அவர்களுக்கு குணாவை அறிமுகம் செய்து வைத்துவிட்டு.. குணாவுடன் தன் அன்னையை பார்க்க கிளம்பினாள் மது.

தேவிக்கும் சங்கரனுக்கும் மது கிளம்பிச் சென்றதும் தாங்கள் தனிமையில் தவிப்போமே என்ற எண்ணத்தை மீறி.. என்ன பிரச்சனை என்பதை இதுவரை மது சொல்லாவிட்டாலும் இனியெல்லாம் சரியாகிவிடும் என்ற நிம்மதியுடன் அவளை வழியனுப்பினர்.

தன்னுடன் வா.. என அழைத்தால் வரமாட்டாள்.. என்பது குணாவுக்கு புரிந்தது. ஆனால் இன்னுமொரு முறை அவள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் குணா.

இரண்டு வருடங்கள் கழித்து.. மருத்துவமனையின் படுக்கையில் தேகம் மெலிந்து.. சோர்வுடன் படுத்திருந்த தன் அம்மாவை கண்டதும் கண்கள் கலங்கினாள் மது.

தேவிக்கு பேசுமளவு உடலில் பலம் இல்லாவிட்டாலும்.. மதுவை கண்டதும் கண்கள் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது. மதுவின் கையை ஆனந்தக் கண்ணீருடன் அழுத்தமாக பற்றிக் கொண்டார்.

மறக்குதில்லை மனம்..Where stories live. Discover now