15 ❤

8.3K 297 125
                                    

குணாவிடம் மனம் விட்டு எல்லாம் பேசிவிட்ட நிம்மதியுடன்.. உறங்கிய மதுவுக்கு அன்றைய விடியல்.. இனிமையாக அமைந்தது.

விழித்ததும் உறக்கத்தில் இருந்த குணாவின் முகத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். எல்லா நாளும் இது போலவே விடிய வேண்டும் என மனதில் எண்ணியபடியே குணாவின் நெற்றியில் இதழ் பதித்தாள்.

குணாவிடம் இருந்து விலகி எழும்ப முயற்சித்தவளை அணைத்த குணா.. “ஏன் மது சீக்கிரம் எழுந்துட்ட.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு..” என்றான்.

அவன் அணைப்பில் இருந்து விலக மனமின்றி.. ம் என்றவள்.. மணியை பார்க்க.. காலை ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது.

“குணா.. மணி ஏழாக போகுது..” என்றாள் மது சிறு பதற்றத்துடன்.

“அதுக்கென்ன..” என அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“விடுங்க.. நா.. நான் எழுந்திருக்கிறேன்..” என்றாள் மது.

சிரிப்புடன் அவளை விடுவித்தவன்.. “நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் மது..” என்றான்.

“ம்.. சரி..” என்ற மது எழுந்து குளித்துவிட்டு.. அறையில் இருந்து வெளியேற.. ஹாலில் அமர்ந்திருந்தார் மஞ்சுளா.

லேட்டாக எழுந்ததுக்கு எதுவும் சொல்வாரோ என தயக்கமாக அவரை பார்த்தாள் மது. ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை.

பேசாமல் கிச்சனுக்கு சென்ற மது.. டீ போட்டு மஞ்சுளாவுக்கு கொண்டு சென்று கொடுத்தாள். அவரும் எதுவும் பேசாமல் டீயை வாங்கிக் கொண்டார்.

“ப்ரிட்ஜ்ல மாவு இருக்கு.. தோசை சுட்டுடு.. தக்காளி சட்னி வை.. குணாவுக்கு பிடிக்கும்..” என மதுவை பாராமலே சொன்னார் மஞ்சுளா.

“ம்.. சரி.. அத்தை..” என்ற மது.. காலை உணவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டாள்.

குணாவும் எழுந்து குளித்துவிட்டு வர.. அவனுக்கும் மஞ்சுளாவுக்கும் சேர்த்தே காலை உணவை பரிமாறினாள் மது.

“மது.. நீயும் ஆபிஸ்க்கு கிளம்பு..” என்றான் குணா. மது தயக்கத்துடன் மஞ்சுளாவையும் குணாவையும் மாறி மாறி பார்த்தபடி நின்றிருந்தாள்.

மறக்குதில்லை மனம்..Where stories live. Discover now