தன்னுடைய அப்பா அம்மாவையே சமாளிக்க முடியவில்லை.. குணாவின் வீட்டில்.. அத்தை அண்ணியெல்லாம் எவ்வளவு கோபத்தில் இருப்பார்களோ.. அவர்களிடம் என்னவென்று சொல்வது.. எப்படி சமாளிப்பது என தவித்தாள் மது.
மது திரும்பி வந்ததை விட.. அவளை அழைத்துக் கொண்டு இங்கே வராமல் அவள் வீட்டில் குணா தங்கியது.. மஞ்சுளா சுமித்ராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இரண்டு நாட்கள் குணாவை காண முடியவில்லை என தவிக்கும் மது.. இரண்டு வருடங்கள் எப்படித்தான் பிரிந்து இருந்தாளோ என எண்ணிய மேகநாதனும் தேவியும்.. மதுவின் வாழ்க்கையை சீராக்க எண்ணினர்.
மது தன் மாமியாரிடம் நடந்து கொண்ட விதமும் அவர்களுக்கு உறுத்தலாக தோன்ற.. தாங்களே நேரில் சென்று மன்னிப்பு கேட்டு மதுவை அங்கே விட்டுவிட்டு வரலாம் என எண்ணினர்.
மஞ்சுளா.. வீட்டில் சில பிரச்சனைகள் வந்த போது.. மதுவை ஒன்றுமில்லாம வந்தவ தான நீ.. என குத்திக்காட்டி பேசியது குறித்து மேகநாதனும் தேவியும் கேள்விப்பட்டிருந்தனர்.
குணா அதெல்லாம் எதிர்பார்க்க மாட்டான் என்பது புரிந்தாலும்.. தங்கள் மகளை இனி அவர்கள் அப்படி பேசிவிடக் கூடாது என்ற எண்ணத்துடன்.. கல்யாணத்துக்கு செய்ய தவறியதை இப்போது செய்ய எண்ணி.. கட்டில்.. பீரோ.. என வீட்டு உபயோக பொருட்களையும்.. மதுவுக்கு சேர்த்து வைத்திருந்த நகைகளையும் கொண்டு சென்றனர்.
குணாவின் குடும்பத்தினர் எப்படி நடந்து கொள்வார்களோ என தயக்கமாக இருந்தாலும்.. குணா மீதிருந்த நம்பிக்கையிலும்.. தங்கள் மகள் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்ற எண்ணத்துடன் மதுவை அழைத்துக் கொண்டு கிளம்பினர் மேகநாதனும் தேவியும்.
அப்பா அம்மாவை தடுக்க முடியாத நிலையில் இருந்தாள் மது. என்ன சொல்லி தடுப்பது என புரியவில்லை.. மறுபுறம்.. குணா வீட்டில் என்ன நடக்குமோ.. என்னவெல்லாம் கேட்பார்களோ.. என பயமாகவும் இருந்தது மதுவுக்கு.