14

4.5K 193 28
                                    

குணாவிடம் இருந்து தான் விலகிச் செல்ல நினைப்பதற்கான காரணத்தை சொல்லிவிட நினைத்தாள் மது.

தெரிந்த பின் குணா எப்படி நடந்து கொள்வான்.. மீண்டும் குணாவை பிரிய நேருமோ.. என பயமாக இருந்தது மதுவுக்கு. ஆனாலும் மறைத்து வாழ்வதில் இருக்கும் குற்ற உணர்ச்சி இருக்காது என்ற எண்ணத்துடன் சொல்லிவிட தன்னை திடப்படுத்திக் கொண்டாள் மது.

அப்போது போன் செய்த தன் தோழி திவ்யாவிடம் தன் எண்ணத்தை.. சொல்ல.. அவள் குணாவிடம் தான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டதாக சொன்னாள். அதைக் கேட்டதும் வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வுகள் மனதில் எழ.. குணா.. குணா.. குணாவை பார்த்திட மனம் துடித்தது.

சரியாக அதே நேரம் அறைக்குள் வந்த குணா.. கதவை தாழிட்டுக் கொண்டிருக்க.. போனை அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு குணாவை இறுக்க அணைத்துக் கொண்டாள் மது.

சிலமுறை மது.. மது.. என அழைத்து பார்த்த திவ்யா.. புரிந்து கொண்டு போனை கட் செய்திருந்தாள்.

மது காதலோடு தன்னை அணைத்ததாகவே எண்ணிய குணா.. புன்னகையோடு நின்றிருக்க.. மதுவின் கண்ணீர் அவன் முதுகில் தீண்டியது..

அதை உணர்ந்ததும்.. “மது.. என்னாச்சு.. எதுக்கு அழுற..” என பதற்றமாக கேட்டான் குணா. மது எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவே.. அவள் அணைப்பிலிருந்து விலகி அவள் புறம் திரும்பினான்.

அவன் முகத்தை கூட பாராமல் நின்றிருந்தாள் மது. கட்டிலில் அவளை அமரவைத்துவிட்டு தானும் அவளருகில் அமர்ந்தான் குணா.

“மது.. என்னாச்சு..” என குணா வினவ.. எதுவும் சொல்லாமல் அவன் சட்டையை இறுக்கமாக பற்றியபடி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் மது.

சில நொடி மௌனமாக இருந்தவள்.. “குணா.. உ.. உங்களுக்கு எ.. எல்லாம் தெரியுமா..” என கேட்டாள்.

“ம்..” என்றான் குணா.

கைகள் அவன் சட்டையை இறுக பற்றியிருக்க.. நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள் மது.. “ஏன் குணா நீங்க என்கிட்ட எதுவுமே கேட்கலை..”

மறக்குதில்லை மனம்..Where stories live. Discover now