01

4.2K 86 9
                                    

3 அடுக்கு மாடியுடன் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயமாய் அமைக்கப்பட்ட பங்களாவின் முன் நின்ற சந்திரமதியின் கைகள் சில்லென குளிர்ந்து பயத்தில் முகம் வேளுறா தன் கைகளால் முகத்தை அழுந்தத் துடைத்தவாள்.

தன் உடமை அடங்கிய சிறு சூட்கேஸ் உடன் மெல்ல அவ் வீட்டின் உள் நுழைந்தாள்....

அந்தப் பெரிய பங்களாவில் எவ்விதத் தடையுமின்றி உள்ளே நுழைந்தவள். கையில் தினகரன் நாளிதழில் தன்னை தொலைத்து இருந்த முதிய பெண்ணைக் கண்டதும் தன் தொண்டையை செருமி இங்க புவனேஸ்வரி அம்.....மா எனத் தன் கேள்வியைப் பாதியில் நிறுத்த....

கையிலிருந்த நாளிதழை மூடி வைத்தவர் கண்கள் சந்திராமதியை மெல்ல ஆராய்ந்தது...

வெள்ளை நிற சுடிதார் மெல் மேல் போடப்பட்ட தாவணியும் கால்களில் கொலுசும் கால்களிலன சாதாரண செருப்பும் கையில் கட்டியிருந்த சிறு கோயில் நூலும்... கடிகாரமும்.... வலது கரத்தை அலங்கரித்த மோதிரமும் கழுத்தில் கறுப்பு நூல் உடன் இனைத்த தங்கத்தால் செய்த ராமர் உருவச்சிலையும்..... நடுஉச்சி பிரித்து இழுத்து இடைக்கு கீழ் நீண்ட பின்னலும்.... பார்க்கவே தன் அழகில் கர்வம் இல்லாத... அதேநேரம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள் என புலப்படுத்தியது....

தன் ஆராய்ச்சியை முடித்தவர் நீ யார் என கேட்க நான் சந்திரமதி என்னை இங்க சங்கரன் தாத்தா அனுப்பினார்.... என மனப்பாடம் செய்தவர் போல் கூறி அமைதியாய் அவரை பார்த்தாள்....

ஓ சங்கரன் அண்ணா சொன்ன பொண்ணு நீதானா நான் யாரோன்னு நினைச்சேன் ஆமா உன் படிப்பு ஏத்தினை வருசம்.... என நேரடியாய் விடயத்துக்கு வந்தாள் புவனேஸ்வரி....

நாக்கால் உதட்டை ஈரப்படுத்தியவள் ஆறு மாசம் தான் அம்மா..... என சொல்லும்போது அவள் மனச்சாட்சி பயத்தில் இப்பவே போயிடு மதி எனக்கு ஏதோ சரியா படல நீ இங்கே இருந்து படிக்கத் தான் வேண்டுமா என அவள் மனசாச்சி கூச்சலிட்டது......

ஆறு மாசம் தனா சரி நில்லு உன் ரூம்மா காட்ட சொல்லுறான் எனக் கூறியவர் வலதுபுறம் திரும்பி வடிவு எனக் குரல் கொடுத்ததும் சொல்லுங்கம்மா சந்திரமதியின் தந்தை வயது உடையவர் பணிந்து நிற்க.... இந்த பொண்ணு ஆறுமாதம் இங்கே தான் தங்கியிருந்த படிக்க போற அவா ரூம்மா ஆ காட்டிடு வா என கூறி புவனேஸ்வரி பத்திரிகையில் மூழ்கி போனாள்.....

♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪Where stories live. Discover now