17

2.7K 72 16
                                    

யானுவுக்கு தன் ஏதோ பெரும் தவறு இழைத்து விட்டது போல மனம் உருத்தியது. அவளவன் பிரிவினில் அவள் மருகிய தருணத்தில் அவளுக்கு என்று இருந்த ஒரே ஒரு ஆறுதல் அந்த பிஞ்சுக் குழந்தையின் முகம் அல்லவோ.

எப்படி இதை எல்லாம் அவள் மறந்து போனாள்.. கடவுள் ருத்தேஷ் வழியாக தனக்கு அளித்திட்ட வரத்தை தன் மடமை தனத்தால் கஷ்டபடுத்திருக்கிறமே என்ற எண்ணம் அவளுக்குள் அதிகரிக்க அதிகரிக்க அவளின் குற்ற உணர்ச்சியும் ஆதிகரித்தது.

அதே வேலை இவ்வளவு நேரமாக இதை எல்லாம் பொறுமையாய் பார்த்துக் கொண்டிருந்த சந்திரமதியோ பெருமூச் சொன்றை இழுத்துவிட்டு எதுவும் பேசாமல் நகர முற்பட அவள் கைகளில் இருந்த சிதுவோ அம்மா பாத்தியா?...இந்த அப்பாவ... நானும் நீயும் துங்கிட்டு இருக்க கேப்புல என்னை உன்கிட்ட இருந்து பிரிச்சிட்டாரு very very bad papu! என சிது தன் அறிவுக்கு எட்டியதை இவ்வளவு நேரம் நடந்ததை உள்வாங்கியதன் நிமித்தம் தாயிடம் சொல்ல சந்திரமதியோ... தன் குழந்தைக்கு இந்த வயதில் இப்படி எல்லாம் கேட்க வேண்டிய சூழ்நிலை என்ற ஆற்றாமை தாயாய் அவளை உள்ளுக்குள் க்ஷபாடாய் படுத்த. எதுவும் பேச தோன்றாது தன் அறைக்கு மாடி படிகளில் ஏறி விரைந்தாள்.....

ருத்திரேஷுக்கோ கலவையான எண்ணங்கள், உறவுகளுக்காய் அவன் செய்ய நினைத்த உபயம் அவனுடைய சொந்த ரத்தமே தன்னை வெறுத்திடுமோ தன்னவள் தன் மேல் கோபம் கொண்டிருப்பாலோ என்ற எண்ணங்கள் அவனை பயமுறுத்த... செல்லும் மதியை பின் தொடர்ந்து அவனும் போக கரடியாய் அவனுடைய கைகளை பிடித்து தடுத்தான் அகில்.

குழம்பிய பார்வையுடன் ஏன் அண்ணா இதுவரையும் நடந்து கூட ஓகே ...ஆனா என்று சிறு தயக்கத்தின் பின்...நீ யாருன்னா அந்த பெண்ணுக்கு! என கேட்டுத் துளைத்து எற்கனவே நொந்து போயிருந்த ருத்திரேஷை நோண்டி நூடில்ஸ் ஆக்க...

விடிய விடிய ராமன் கதை கேட்டுட்டு இப்ப ராமனுக்கு சீதைக்கு என்ன முறை என்னு கேக்குறீயே டா ....இப்போ தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்க என்னைய டாச்சர் அங்கயே திரும்பி போயிடாத என்று பல்லை கடித்தவன்...

You've reached the end of published parts.

⏰ Last updated: Feb 04, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪Where stories live. Discover now