The pendrive

100 18 21
                                    

Mr Volter robin னிடமிருந்து கத்தியை வாங்கி அதை ஒரு தடியில் கட்டி இனம் தெரிந்த பழங்களை பறித்தார்.

நால்வரும் பழங்களை சேகரித்து கொண்டு இருக்க Henry மட்டும் கை கட்டிக் கொண்டு இருந்தான்.
"Excuse me mister! உனக்கு தேவையானத நீ தான் எடுத்து கொள்ளனும். உங்க வீட்டுல இருக்கிற மாதிரி சொகுசா இந்த காட்டுல இருக்க முடியாது! " என loral கூற " That's not your business! உன் வேலைய மட்டும் நீ பாரு! " என Henry கோபத்துடன் கத்தினான்.

" Hey boy pick some fruits, இல்லாவிட்டால் பசியில் இருக்க வேண்டி வரும்! " என்றார் Mr Volter. அவனோ தன் தகுதியை நினைத்து பேசாமல் இருந்தான்.

அங்கு மூவரும் loral ஐ அழைத்து " loral ஒன்னும் சொல்ல போகாதே! அவன் நல்லது சொன்னாலும் கேட்க மாட்டான்..." என தேற்றிக் கொண்டிருந்தனர்.

பழங்களை எடுத்து கொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றனர். நேரம் செல்ல செல்ல இருட்டிக்கொண்டே வந்தது. " நிலத்தில இருந்து கொஞ்சம் உயர்வான இடமொன்றாக பார்க்கனும்! " என Mr Volter கூற " uncle, அந்த கற்பாறைகளுக்கு இடையில ஒரு குகை இருக்கிற மாதிரி இருக்குது! கொஞ்சம் உயர்வான இடமும் தான்! " என சில அடிகளுக்கு முன்னால் உள்ள கற்பாறைகளை robin காட்டி கூறினான்.

"ஒருவேளை அங்கு சிங்கம், புலி இருந்தா என்ன பண்ணுறது? " என gwen வினவ "உன்னை கண்டா சிங்கமும் ஓடி போகும்! அந்தளவு பயங்கரமான make up போட்டு இருக்க! " என robin கூறி கிண்டலடித்தான். ஐவரும் சிரிக்க Henry ஓ "பெரிய joke சொல்லிடாரு சிரிக்கிறாங்க!" என முணுமுணுத்து கொண்டே சென்றான்.

குகையினுள் முதலில் Mr Volter சென்று பார்த்து விட்டு வந்து " guys இதுக்குள்ள வேட்டையாடிய மிருங்கள சாப்பிட்டதாக எந்த தடயமும் இல்லை. So சிங்கம் புலி ட குகை ஆக இருக்க முடியாது. " என ஐவரையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றார்.

பின்னர் robin உம் danish உம் Mr Volter உடன் இணைந்து சில காய்ந்த விறகுகளை கொண்டு வந்தனர். மிருகங்கள் குகையினுள் வராமல் மரப்பட்டை ஒன்றையும் கொண்டு வந்தனர்.

இருட்ட ஆரம்பிக்க குளிர் காற்றும் சேர்ந்து வீசியது. ஆறு பேரும் கீழே அமர்ந்து கொண்டு தீ பற்ற வைத்தனர். "இதுக்கு தான் lighter கொண்டு வந்தேன்!" என்றான் danish ஐ பார்த்து robin. " நீ எங்கோ போக வேண்டிய ஆளு! Cartoon ல வார மாதிரி wizard ஆ மாறி இருக்க!" என கின்டலடித்தான் danish.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now