யோசிப்பது என்பது இப்போது முடியாது. ஏற்கனவே நிறைய நாட்கள் வேலை கிடைக்காமல் அலைந்து விட்டாள். இனிமேலும் தாமதித்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அடுத்த மாதம் யாரையும் நம்பி இருக்க முடியுமா என்று சந்தேகம் தான். யாரை நம்புவது. வாடகை தர வேண்டும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும். குழந்தைகளுக்கான பொருட்கள் என நிறைய தேவைகள் இருக்கும் இப்படி பட்ட சூழலில் எதை யோசிப்பது. முடிவு செய்து விட்டாள் வேலைக்கு செல்வது என்பதை. ஆதித்யா அந்த அலுவலக தலைமை. அவரிடம் தனக்கு ஒரு பாதுகாப்பு இருக்கும் என தோன்றியது. தான் தனியாக இருக்கும் ஒரு அபலை இப்படி பட்ட சூழலில் தனக்கு ஒரு பாதுகாப்பும் அவசியம் என்பதை அறிந்து கொண்டிருந்தாள். குழந்தைகள் எழுந்து விட்டிருந்தனர். அவர்களுக்கு பால் கொடுத்து கீழ் வீட்டுக்கு குழந்தையை அனுப்பி விட்டு போனை எடுத்தாள். ஆதித்யா அவரின் எண்ணை அழுத்தினாள். மறுபுறம் மணி அடித்தது. ஹலோ என்ற குரல் கணீர் என்று வந்தது. அந்த குரலில் ஒரு மாற்றம் ஆயுதாவிர்க்கு தோன்றியது. சுதாரித்துக்கொண்டு சார் நான் ஆயுதா காலம்பர நேர்முக தேர்வுக்கு வந்திருந்தேன். நீங்க நான் இன்னைக்கு வேலைக்கு வரேன் என்பதை சொல்ல சொல்லிறுந்தீங்க. ம்ம் சொல்லுங்க எப்பொலேந்து வரீங்க. திங்கள் கிழமை லேந்து வரேன் சார் என்றாள். சரி வந்திருங்க. நன்றி. வைத்து விட்டார். ஆயதாவிர்க்கு அவர் குரல் ஏன் இப்படி ஒரு மாற்றத்தை தருகிறது என்பது புரியவில்லை. அவளுக்கு இதற்கு மேல் தன் வாழ்க்கை இப்படி தான் என முடிவு செய்து விட்டாள். அலுவலக நேரம் கேட்டுக்கொண்டாள் ஏற்கனவே. அதற்கேற்றாற் போல் அனைத்தும் தயார் செய்ய வேண்டும். இரவே அனைத்தும் எடுத்து வைத்து விட்டு படுத்துக் கொள்ள வேண்டும் அப்போது தான் மறுநாள் காலையில் எழுந்து சமைக்க குழந்தைகளை தயார் செய்து விட்டு தானும் கிளம்ப சரியாக இருக்கும் என்று எல்லாவற்றையும் சேர்த்து கொண்டாள். குழந்தைகள் வந்து தங்க ஒரு இடம் ஏற்பாடு செய்து வைக்க வேண்டும் என தோன்றியது. 3 மணிக்கு பள்ளி விட்டு விடும். வேன் 3.45 க்குள் வந்து விடும். வேன் ஓட்டுநரிடம் சொல்லி அவர்களை ஒரு மாலை நேர படிப்பு சொல்லி கொடுக்கும் இடத்தில் சேர்க்க சொல்ல திட்டமிட்டால். எல்லாம் சரியாக திட்டமிட்டு விட்டாள். இனி வாழ்க்கையின் ஓட்டத்திற்கு தயார். ஓட ஆரம்பிக்க வேண்டியதுதான்.
YOU ARE READING
ஆயுதா - ஒரு பெண்ணின் கதை
Romanceஅன்று அவள் தன்னுடைய முதல் நேர்முக தேர்வு க்கு தயாராகி கொண்டிருந்தாள், வெகு நாட்களாக எந்த வேலையும் கிடைக்க வில்லை. அவளுக்கு அநுபவம் இல்லாமல் இல்லை. ஆனால் இடையில் ஏற்பட்ட நிறைய வாழ்க்கை மாறுதல்கள் அவளுக்கு வேலை கிடைப்பதை கொஞ்சம் கால தாமதம் ஆக்கியது.