எத்தனை முத்தங்கள் கொடுத்தாலும் சரி, பெற்றாலும் சரி அதன் ஆசை தீராது. இவர்கள் இங்கே முத்த சந்திப்பில் இருக்க அந்நேரம் பாரதி வந்துவிட்டான். அவர்களை பார்த்ததும் அவனுக்கு ஒரு சந்தோஷம் பிறந்தது. தன்னுடன் பிறக்கா விட்டாலும் அவள் தனது தமக்கை. தன்னுடனே இருக்கும் ஆருயிர் நண்பன். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பது அவனுக்கு சந்தோஷத்தையே தந்தது. ஆயினும் இடம் சூழல் புரிந்து அவர்களை வம்பிழுக்க நினைத்தான். என்னடா நடக்குது இங்க, அவளை பாத்துக்க சொல்லி தானடா உட்டுட்டு போனேன். அதுக்குள்ள என்ன பண்ணிட்டு இருக்க நீ என்று தனது நண்பனை கடிந்து கொண்டான். அப்போது தான் இருவரும் சுய நினைவிற்க்கே வந்தனர். ஆயுதாவிற்கு இந்த உலகம் முற்றிலும் புதிது அழகான அதுவும் சுகமான உலகமாக தோன்றியது. முதல் முத்தம் என்றும் அதற்க்கு பெருமை அதிகம் தான். தாயிடம் இருந்து பெற்றாலோ தெரியாது, தந்தையிடம் இருந்து கிடைத்ததோ தெரியாது, ஆனால் தன்னுடைய காதலன், தன்னவனிடம் இருந்து கிடைக்கும் முத்தத்திற்கு என்றுமே மதிப்பு அதிகமே. அவளுக்கு வெட்க்கத்தையும் கூடவே கொஞ்சம் பயத்தையும் தந்தது. எப்போதுமே பெண்கள் எல்லாவற்றிக்கும் தன்னை குழப்பிக்கொள்ளும் குழப்ப வாதிகள் தானே. கண்களில் திரும்பவும் கண்ணீர். ம்ரித்யுவால் அவளை தேற்ற முடியவில்லை. பாரதி மச்சான் discharge procedures முடிஞ்சுடுச்சுல்ல நான் போய் வண்டி கொண்டவறேன். நீ இவளை வெளியில் கூட்டிட்டு வந்திரு. கொஞ்சம் vomit பண்ணிட்டா அதனால clean பண்ணி கூட்டிட்டு வந்துரு என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டான். என்னது vomit பண்ணிட்டாளா?? doctor கிட்ட பேச வேண்டாம்டா, நீ பாட்டுக்கு போற. டேய் அவ சாப்பிடாம இருந்து சாப்பிட்டதால் vomit வந்திருச்சு. பெருசு பண்ணாம கூட்டிட்டு வா. போய்விட்டான். பாரதி அவளிடம் வந்தான். என்ன கண்ணம்மா இப்போ எப்படி இருக்குடா. நல்ல இருக்கேண்ணா. vomit பண்ணிட்டேன் அத அவரு அவர் கைலயே புடிச்சுட்டாரா அதான் அழுகையா வந்திருச்சு. இதை வெளியில் நின்று ம்ரித்யு கேட்டுக்கொண்டு தான் இருந்தான். தன்னவளின் கண்ணீர் நெஞ்சை கிழித்தது. அதற்க்கு தான் காரணமோ தன்னுடைய முத்தம் தான் காரணமோ அத்துமீறிவிட்டோமோ என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு இது காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது. நண்பனை நினைத்து பெருமை கொண்டான் பாரதி. அவன் பெரிய வீட்டுப்பிள்ளை இதல்லாம் அவனுக்கு வராது என்றே நினைத்திருந்தான் ஆனால் இன்று அவனுக்கு அவனுடைய செய்கை பிடித்துஇருந்தது. சிரித்தான் பாரதி. ஆயுதவிர்க்கு புரியவில்லை என்ன சொல்லிவிட்டோம் இப்போது இவர் சிரிக்கிறார் என்பது போல் அவனை பார்த்தாள். vomit பண்ண அவன் புடிச்சான் அழுத சரி அது ஏம்மா நான் வந்தோன்ன அழுத, அதுவரைக்கும் அழாம என்று கிண்டலாக கேட்டான், அவள் தலை குனிந்து கொண்டாள். பெண்மை அவளை தடுத்தது. அவள் எப்படி சொல்வாள், அழ ஆரம்பித்த அடுத்த வினாடி அவன் அவள் இதழ்களை சிறை செய்து விட்டான் என்று. அதற்க்கு மேல் அவள் இவ்வுலகத்தில் இல்லையே. நினைத்தவுடன் வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது. புரிந்து கொண்டான் பாரதி, ஆயினும் அவளின் பதிலுக்காக காத்திருந்தான். என்ன கண்ணம்மா பதில் இல்லையா, இல்ல சொல்ல விருப்பம் இல்லையா? அண்ணா அது வந்து.. எது வந்தும்மா.. அது அது.. சரி சரி நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், வா அவன் wait பண்ணிட்டு இருப்பான் நாம போலென்ன அதுக்கும் சத்தம் போடுவான். மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம் வா என்றான். அவளால் கட்டிலில் இருந்து இறங்க கூட முடியவில்லை. கால்கள் தடுமாற ஆரம்பித்தன. அண்ணா என்னால நடக்க கூட தெம்பில்லாத போல தோணுது. சாப்பிடாம இருந்தா இப்படி தான் இருக்கும்மா, நல்லா சாப்பிட தான் சரியா போகும், என்றுவிட்டு பாரதி கைகளை பிடித்து அவளை கட்டிலில் இருந்து இறங்க வைத்து, சரி வாடா போய் bathroom க்கு போய் மேலயெல்லாம் தொடச்சுக்கோ, என்று அவளை சுத்தம் செய்ய உதவி செய்து வெளியே அழைத்து வந்தான். அவளை பாரதி கைத்தாங்கலாக, அழைத்து வந்ததை பார்த்த ம்ரித்யு அவள் கைகளை பிடித்து வண்டியில் ஏற்ற உதவி செய்தான். ஓட்டுநர் இருக்கையில் ம்ரித்யு அமர்ந்து கொண்டு இவர்கள் இருவரையும் பின்னால் அமர வைத்து வண்டியை கிளப்பினான்.
இங்க நடந்த அத்தனை நிகழ்வுகளையும் இரு கண்கள் கவனித்துக்கொண்டே இருந்தது. அவர்கள் சென்று அந்த கண்களில் இருந்து மறையும் வரை அந்த கண்களில் பார்வை அந்த இடத்தை விட்டு அகல வில்லை. யார் அந்த கண்களுக்கு சொந்தக்காரன், வேறு யாரும் அல்ல அரவிந்த் தான் அந்த கண்களுக்கு சொந்தக்காரன். ம்ரித்யு அவனை அறையில் விட்டுவிட்டு வெளியே சென்ற அடுத்த வினாடி அவன் வெளியே வந்தான் ம்ரித்யு பின்னாலே. ம்ரித்யுவும் அவனது நண்பனும் பேசிக்கொண்டிருந்ததை கேட்க நேரிட்டது. அப்போது அவனுக்கு ம்ரித்யு மீது கோவம் வந்தது. திரும்ப அறைக்கே சென்று விட்டான். மயக்கத்தில் இருந்த ஆயுதா ம்ரித்யு பெயரை உளறவும் அவனுக்கு இன்னும் கோவம் அதிகம் ஆனது. அரவிந்த் யார் என்ன என்பதை கொஞ்சம் பார்க்கலாமா ?
YOU ARE READING
ஆயுதா - ஒரு பெண்ணின் கதை
Romanceஅன்று அவள் தன்னுடைய முதல் நேர்முக தேர்வு க்கு தயாராகி கொண்டிருந்தாள், வெகு நாட்களாக எந்த வேலையும் கிடைக்க வில்லை. அவளுக்கு அநுபவம் இல்லாமல் இல்லை. ஆனால் இடையில் ஏற்பட்ட நிறைய வாழ்க்கை மாறுதல்கள் அவளுக்கு வேலை கிடைப்பதை கொஞ்சம் கால தாமதம் ஆக்கியது.