ஆயுதாவையே பார்த்துக்கொண்டு உக்காந்திருந்தான் ம்ரித்யு. பார்க்க பார்க்க அவளது முகம் திகட்டவில்லை. அழகிய வட்ட நிலா போன்ற முகம், அழகிய இரு கண்கள், கோவைப்பழம் போன்ற உதடுகள், நல்ல வெள்ளையும் இல்லாமல் மஞ்சளும் இல்லாமல் ஒரு நிறம் அவனுக்குள் அவளது ஒவ்வொரு அங்கமும் பதிந்து போனது.
எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய் எப்படி
நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம்
தந்தாய்உன்னை பார்க்கும்
முன்பு நான் காகிதத்தின்
வெண்மையடி உன்னை
பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணமடி
தோளில் சாயும் போது
தோழி நீயடி மடியில் சாயும்
போது தாயும் நீயடிஹரிஷ் ராகவேந்திராவின் பாட்டின் வரிகள் இவனுக்கே எழுதியது போல் இருந்தது. பார்வையை அவளிடம் இருந்து சிறிது கூட அவன் அகற்ற வில்லை. பாரதி வந்தான். அவனுக்கும் ஆயுதாவிற்கும் இட்லி வாங்கி வந்திருந்தான். மச்சி தூங்காதடா எழுத்துரு சாப்புடு என்று கூறினான். அப்போதும் ம்ரித்யு காதுகளில் விழவில்லை. மச்சி உக்காந்து கனவா, சரியா போச்சு போ, என்று விட்டு அவனை உலுக்கினான். ஏண்டா உக்காந்தே கனவு காணுற, அப்படி என்னடா கனவு சொல்லேன் என்றதும் கனவெல்லாம் இல்லடா மாப்ள சும்மா உன் தங்கச்சிய site அடிச்சுட்டு இருந்தேன் அவ்ளோ தான். என்றதும் அடிகள் வாங்க ஆரபித்தான். டேய் அவ எனக்கு காதலியான பிறகு தான் உனக்கு தங்கச்சி டா நெனப்பிருக்கட்டும் அதெல்லாம் கிடையாது உனக்கு முன்னாடியே இல்லையோ இப்போ அவ எனக்கு தங்கச்சி உன் காதல இன்னும் நீ சொல்லவே இல்ல அப்பறம் பாத்துக்கலாம் இப்போ நீ சாப்புடு என்று அவனிடம் 2 இட்லிகளை நீட்டினான். ம்ரித்யு அவனை பார்த்தான். அவளுக்கும் வாங்கிருக்கேண்டா நீ மொதல்ல சாப்புடு அப்பறம் அவளை எழுப்பி குடுக்கலாம் என்றவுடன் திரும்பவும் அவனையே பார்த்தான். மச்சி நீ சாப்டியாடா என்றதும் நண்பன் ஆரத்தழுவி இல்லடா மாப்ள சரி வா ரெண்டு பெரும் சேர்ந்தே சாப்பிடலாம் என்று 2 இட்லிகளை பங்கிட்டு உண்டனர். அந்நேரம் ஆயுதாவிடம் அசைவுகள் தெரிய ஆரம்பித்தது. இருவரும் கைகளை அலம்பிக்கொண்டு வந்து அவளிடம் நின்றார்கள். ஆயுதா கண்விழித்துவிட்டாள். கண்ணம்மா எப்படி டா இருக்கு இப்போ. அண்ணா இப்போ பரவால்ல நான் ஏன் இங்க இருக்கேன். இது எந்த இடம். சரி இவர் ஏன் இங்க இருக்காரு அங்க யாரையோ அடிச்சுட்டு இருந்தாரு தொடர்ந்து கேள்விகள். இவளுக்கு இவ்ளோ பேச வருமா என்பது போல் பார்த்துக்கொண்டிருந்தான் ம்ரித்யு. அதெல்லாம் அப்பறம் சொல்றேன்மா இப்போ கொஞ்சம் சாப்பிடலாம் எழுந்திரு என்று அவளுக்கு கைகள் கொடுத்து தூக்கி உக்கார வைத்தான். ம்ரித்யு இட்லிகளை தட்டிலிட்டு பாரதியிடம் நீட்ட, டேய் நான் போய் discharge formalities முடிச்சுட்டு வரேண்டா. நீ அவளுக்கு கொஞ்சம் சாப்பாடு குடு என்றுவிட்டு அவர்களுக்கு தனிமை கொடுக்க விரும்பி வெளியே சென்றான். அண்ணா என்ன கண்ணம்மா அவன் குடுப்பான் நீ சாப்பிடுமா நான் இதோ வந்துடறேன். என்றுவிட்டு சென்று விட்டான். அவள் ம்ரித்யுவை பார்க்க கொஞ்சம் பயந்தாள். நேற்று நடந்தது இன்று காலை நடந்தது, அதன் பிறகு அவன் சண்டை போட்டது அத்தனையும் நினைவுக்கு வந்தது. உடல் கொஞ்சம் நடுங்க ஆரம்பித்தது. ஜில்லு, எதுக்கு இப்போ உடம்பெல்லாம் நடுங்குது என்ன பாத்தா பயமா இருக்கா, நான் அவ்ளோ கொடுமை காரணாவா தெரியறேன் என்று அவளை சமாதானம் பண்ண முயற்சி செய்தான். அவள் இவனை பார்க்கவே இல்லை. அவள் காதுகளில் அவன் பேசியது விழுந்ததா என்று கூட தெரியவில்லை. சரி என்று அவன் அவளுக்கு உணவை கொடுக்க ஆரம்பித்தான். ஜில்லு வாய திற என்றவுடன் உணவை உண்ண ஆரம்பித்தாள். சிறிது உணவிற்கு மேல் அவளால் உண்ண முடியவில்லை. குமட்டிக்கொண்டு வந்தது. அவன் அதனை புரிந்து கொண்டு கொஞ்சம் தண்ணீர் கொடுத்து உணவை கொடுத்தான். அப்போதும் அவளால் உண்ண முடியாமல் வாந்தி எடுத்துவிட்டாள். அவன் அவள் எடுத்த வாந்தியை கையில் பிடித்தான். அவன் கைகளை சுத்தம் செய்து கொண்டு அவளையும் சுத்தம் செய்து விட்டான். அவளுக்கு அழுகை வந்துவிட்டது. அழ ஆரம்பித்தாள். அவளருகில் சென்று அமர்ந்து கொண்டான், அவளை அணைத்துக்கொள்ள கைகள் துடித்தது, ஆனாலும் அது பொது இடம் என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, அழாதே ஜில்லு இப்போ என்ன ஆச்சுன்னு அழுதுட்டு இருக்க, அந்த பையன் தப்பு பண்ணிட்டான் அதான் அடிச்சேன் அவன் என்னோட கூட படிக்கற பொண்ண கிண்டல் பண்ணிட்டான் அது தப்பில்லையா. அதான் சண்டை வந்திருச்சு. இப்படிலாம் காலேஜ் ல நடக்கறது சகஜம் டா இதை போய் பெருசா எடுத்துக்கிட்டு அழுதுட்டு இருக்க. அவளுடைய அழுகை நிற்க வில்லை. அப்போ இதுக்காக நீ அழலை தெரிஞ்சு போச்சு என்று ராகமாக கூறினான். அப்போதும் அவள் அசைய வில்லை. யோசித்தான். காலம்பற நான் நடந்துக்கிட்டது உனக்கு புடிக்கல அதான் இப்போ அழற சரியா. அவள் எதற்கும் பதில் சொல்ல வில்லை. அவன் அதை கவனியாது சுய விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தான். நான் காலம்பற உனக்கு என்னோட காதல சொல்ல தான் வந்தேன்னு நினைக்காத ஜில்லு என்னோட காதல் உனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாடியே தெரியும். நீ நேத்து அழுதது என்ன கொஞ்சம் disturb பண்ணிடுச்சு அதான் காலம்பற வந்தேன் சும்மா உன்ன பாத்துட்டு போலாம்னு தான் வந்தேன் ஆனா என்னென்னமோ ஆயிடுச்சு. ஆனா நான் உன்ன ரொம்ப காதலிக்கறேன்டீ இப்போதைக்கு அத மட்டும் புரிஞ்சுக்கோ என்னோட காதல நான் உனக்குள்ள வர வெக்கற வேலைய அப்பறம் பாத்துக்கலாம். ஏன்னா நீ என்ன தப்பா புரிஞ்சுக்க கூடாதில்ல. அதுக்காக தான் இதை சொல்றேன். அவள் அதற்கும் அசைய வில்லை. எதுக்குடீ இப்போ அழுதுட்டு இருக்க. நேத்தும் இப்படிதான் நான் சாகவே இல்ல செத்துட்டேன்னு நெனச்சு அழுத, இன்னைக்கும் அழுது சாகடிக்கற. எல்லார்கிட்டயும் வாயடிக்கற, என்ன பாத்தா ஒடனே வாய மூடிக்கற. சொல்லி தொலையேன் எதுக்கு இப்போ அழற என்று கத்தவும் அவள் பயந்து இன்னும் நடுங்க ஆரம்பித்து விட்டாள். ம்ரித்யுவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளை கட்டி அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பில் ஆயுதா உணர்ந்தது ஒரு சுகம் தாய்மடியின் சுகம். அப்படி ஒரு அணைப்பு அவளுடை அழுகையை நிறுத்தி இருந்தது. அவன் அப்படியே அவளை முகம் தூக்கி பார்த்து எதுக்கு ஜில்லு அழுத என்று கேட்டான், நீங்க நீங்க , நானு நீங்க நான் வாந்தி எடுத்தென்ன பிடிசீங்கள்ல அப்படி யாரும் இதுவரைக்கும் எனக்கு பண்ணதில்ல, உங்களுக்கு கஷ்டத்தை குடுத்துட்டேனே ன்னு தான் அழுகை வந்திருச்சு சொன்னவுடன் அவன் அவளுடைய உதட்டில் முத்தமிட்டான். நீ என்னோட உயிர் உனக்கு இதல்லாம் பண்றது எனக்கு ஒரு வேலையே இல்ல. இன்னும் என்ன வேணும்னாலும் உனக்காக நான் பண்ணிவேண்டீ என் செல்லமே, என்று கொஞ்ச ஆரம்பித்தான். ஆயுதாவிற்கு அவனுடைய அருகாமை பிடித்திருந்தாலும் நாணம் வந்து தடுத்தது. எந்த ஆடவனுடைய அருகாமையிலும் அவள் இதுவரை இருந்ததில்லை, இதுவே அவள் ஆடவனுடன் இருக்கும் முதல் முறை. உடலில் 1000 ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது. அவளால் மூச்சு கூட சீராக விட முடியவில்லை. முகம் சிவந்தாள். ம்ரித்யுவிற்கு அவளை அந்த அணைப்பில் இருந்து விடும் எண்ணம் சிறிதளவும் இல்லை. அவன் நிறைய பெண்களுடன் இருந்திருக்கிறான் தான் ஆனாலும் ஒரு வரையறையில் இருப்பான். யாரிடமும் அத்து மீரமாட்டான். ம்ரித்யுவை எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். நெற்றியில் கன்னத்தில் என முத்தங்கள் ஒன்று இரண்டு மூன்று என கூடிய அந்நேரம்...........
YOU ARE READING
ஆயுதா - ஒரு பெண்ணின் கதை
Romanceஅன்று அவள் தன்னுடைய முதல் நேர்முக தேர்வு க்கு தயாராகி கொண்டிருந்தாள், வெகு நாட்களாக எந்த வேலையும் கிடைக்க வில்லை. அவளுக்கு அநுபவம் இல்லாமல் இல்லை. ஆனால் இடையில் ஏற்பட்ட நிறைய வாழ்க்கை மாறுதல்கள் அவளுக்கு வேலை கிடைப்பதை கொஞ்சம் கால தாமதம் ஆக்கியது.