ஆயுதா 13

8 0 0
                                    

சரி சொல்லுங்க. உங்களுக்கு என்ன பத்தி என்ன தெரியும் ? எப்படி தெரியும் ?. உன்ன பத்தி சொல்லனுமா உன்னோட காதல பத்தி சொல்லனுமா வம்பிழுத்தான் ம்ரித்யு. என்னோட காதலா!! ஏன் அன்னைக்கு அடி வாங்கினது பதலையா. ஏண்டீ என்ன அடிச்சுட்டு நீ தானே அப்படி அழுத. அது.... அது வந்து.... எது வந்து சொல்லுடீ. என்ன வாடி போடீ லாம் சொல்லறீங்க. அப்பறம் நான் டா போட்டு கூப்பிடுவேன். கூப்டுக்கோடீ. அவளுக்கு வர வில்லை. சரி நான் போறேன் நீங்க பேசறது ஒன்னும் சரி இல்ல. வாய் தான் அப்படி சொல்லுது முகம் செவந்து தான் இருக்கு. நீ ஏன் இப்போ இப்படி வெக்கப்படற. தன்னுடைய நிலையை முகம் பார்த்து சொன்னவனை கண்டதும், இன்னும் சிவந்தது முகம்.

முகத்தை மாற்ற முயற்சித்தாள், ஆனால் முடியவில்லை. சரி சொல்லுங்க என்று சிணுங்கிக்கொண்டே சொன்னாள் தான் ஏன் இவ்வாறெல்லாம் ஒரு முன் பின் தெரியாத ஆடவனிடம் நடந்து கொள்கின்றோம் என்று அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவளுடைய இந்த ஒட்டுதலான பேச்சு ம்ரித்யுவிற்கு மிகவும் பிடித்து போய் விட்டது. அவனை அவளிடம் இன்னும் நெருங்க செய்தது. ஆனால் அவளுக்கு தன்னை புரிய வைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்ததால் அவனுக்கு தன் காதலை காண்பிக்க இப்போது நேரம் இல்லை. ஆயுதா என்றான் ஹ்ம் என்ற அவளது பதில் அவனை என்னவோ செய்தது. நான் உன்ன 2 வருஷமா காதலிக்கறேன். நீயும் என்ன காதலிக்கரன்னு எனக்கு தெரியும் என்றான். என்னது நான் உங்கள காதலிக்கறேனா. அப்படிலாம் இல்லங்க. எனக்கு உங்கள பத்தி சரியாய் கூட தெரியாது நான் எப்படி உங்கள காதலிக்க முடியும் என்றாள். ஓ இப்போ பிரச்னை என்ன பத்தி உங்களுக்கு தெரியணும் அவ்ளோ தான் இல்லையா. ஹ்ம் நான் ம்ரித்யு அதான் தெரியுமே, நான் 3 ஆண்டு கல்லூரியில் படிக்கிறேன் அதான் தெரியுமே. என்று வடிவேலு பாணியில் பதில் கூறிக்கொண்டு இருந்தாள். ம்ரித்யு விற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சரி அப்பறம் என்றான் அதான் உங்கள பத்தி ஒன்னும் தெரியாது என்றாள். இப்போ தெரியும்னு சொன்ன அதா உங்க பேர் தெரியும்னு சொன்னேன் அவ்ளோ தான். ஓ சரி என்று தன்னை பற்றி கூறலானான். ம்ரித்யு, சுகந்தி கல்யாண் இவர்களின் சீமந்த புத்திரன். கல்யாண் பெரிய தொழிலதிபர். ஏகத்துக்கும் குறையாத செல்வ செழிப்பில் மிதப்பவர். ம்ரித்யுவிற்கு ஒரு அக்காள் அவளது பெயர் யாஷினி. யாழினி திருமணம் ஆகி இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். ம்ரித்யு வின் அத்தை பெண் தான் இந்த மாயா இப்போது அவளும் ம்ரித்யுவும் ஒரே கல்லூரியில் வேறு வேறு பிரிவில் படிக்கின்றனர். ம்ரித்யு சிறு வயதிலேயே மாயா விற்கு நிச்சயம் செய்து வைத்திருந்தனர். ஆனால் ம்ரித்யு விற்கு மாயாவை பிடிக்காது. பிடிக்காது என்றால் திருமணம் செய்ய பிடிக்காது. அவள் இவனுடைய உறவினர் அவ்வளவே இது அவன் நினைப்பு. ஆனால் மாயா ஒருதலையாக ம்ரித்யு வை காதலித்து வருகின்றாள். மாயாவை பாரதிக்கு மிகவும் பிடிக்கும். அவளுடைய குழந்தை தனமான பேச்சால் பாரதி ஒரு தலையாக மாயாவை காதலித்து வருகின்றான்.

ம்ரித்யு அவனை பற்றி ஒரு சில விஷயங்கள் மட்டுமே சொல்லி வந்தான் ஆயுதாவிடம். மாயாவை பற்றியெல்லாம் விளக்கமாக சொல்லவில்லை. அவனுக்கு அது முக்கியமாகவும் பட வில்லை. பின்னாளில் இதுவே பெரிய பிரச்சனைக்கு வழி என்று அவனறிந்து வைத்துஇருக்கவில்லை பாவம். ரொம்ப பெரியதாக சொன்னாள் எங்கே தன்னிடம் பேசுவதை நிறுத்தி விடுவாளோ என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது. அதனால் எல்லாவற்றையும் மறைத்து தான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன் என்று சொல்லி வைத்திருந்தான் ஆயுதாவிடம்.

என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும் எப்படி தெரியும் என்று திரும்பவும் கேள்வியே கேட்டாள். உன்ன நான் முதன் முதலா இந்த பெஞ்சில உக்காந்து பாத்தது உனக்கு நெனப்பு வரலையா ஜில்லு. கேட்டான். அவளுக்கு ஜிலென்று தான் இருந்தது. இல்லையே. பொய்யுரைத்தாள். ஆனால் கண்களை உருட்டி பொய் என்பதை சொல்லாமல் சொன்னாள். அவன் அவளது கரங்களை பிடித்துக்கொண்டு நம்பிட்டேண்டீ, கண்ண கண்ணை உறுதி இப்படி சொன்ன பொய் சொல்றேன்னு எல்லாரும் தெரிஞ்சுடும் ஜில்லு. அவ்வளவு தான் சுத்தமாக தன வசம் இழந்திருந்தாள் ஆயுதா. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் காதலை சொல்லிவிடுவோம் என்ற பயத்தில் போலாமா காலேஜ்க்கு லேட்டா போன பிரின்சிபால் கிட்ட திட்டு வாங்கணும் என்றாள். அவன் அவளை புரிந்து வைத்திருந்தவன் ஆகையால். எனக்கு பதில் சொல்லிடு ஜில்லு போலாம் என்றான். நீங்க மொதல்ல இப்படி கூப்படறத நிறுத்துங்க என்றாள். வாய் சொன்னது கண்கள் கெஞ்சியது. இருவருக்கும் 2 வருட காதல் அல்லவா பார்த்து பார்த்து வளர்த்திருக்கிறார்கள். எப்படி சொல்றத நிறுத்தணும் ஜில்லு. இதோ இதோ இப்படி தான், சொன்னவுடனேயே வெட்கம் வந்துவிட்டது. எதோ எதோ என்றான். போங்க என்று சிணுங்கி அங்கிருந்து ஓட முயன்றாள், அவன் அவளது கை பிடித்து இழுத்து தனதருகில் கொண்டு வந்து விட்டான்.

ஆயுதா - ஒரு பெண்ணின் கதைWhere stories live. Discover now