காலை நேரம் அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்தாள் அலுவலகத்திற்கு இன்று முதல் நாள் நேரம் தவறாமை வேண்டும், சில கட்டுப்பாடுகள் அவளுக்கு உண்டு. பொறுப்பான பெண்ணாக அவள் கடந்து வந்த பாதை அவளை மாற்றி இருந்தது. குழந்தைகளிடம். யது மது ரெண்டு பெரும் அம்மா சொல்றத கேளுங்க. அம்மா இன்னைலேந்து வேலைக்கு போக போறேன். நீங்க சாயந்திரம் வர்றதுக்குள்ள வந்துருவேன். யார் கூப்பிட்டாலும் போக கூடாது. யார் எது குடுத்தாலும் வாங்கி சாப்பிட கூடாது. எந்த பொண்ணுங்ககிட்டையும் வம்புக்கு போகாதீங்க. யாரையும் அடிச்சுடாதடா மது. கேட்ட பேர் வாங்காம நல்ல கொழந்தேலா நடந்துக்கணும் சரியா. அம்மா போர் அடிக்குது மா திரும்ப திரும்ப அதையே சொல்லிண்டிருக்க. டேய் அம்மாவை ஒன்னும் சொல்லாதடா. இருவரும் வாக்கு வாதம் ஆரம்பித்த நேரம் வேன் வந்துவிட்டிருந்தது. டேய் ரெண்டு பெரும் சண்டை போடாம போங்கடா பை என்று இவள் கிளம்ப ஓடினாள்.
உடை மாற்றிக்கொண்டு சுவாமி படம் முன் நமஸ்கரித்து வீட்டை பூட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்தை கிளம்பினாள். அலுவலகத்திற்குள் நுழைந்தாள் யாரும் வந்துவிட வில்லை. ஒரே ஒரு மேலாளர் மட்டுமே வந்திருந்தார். யாரும்மா நீ கேட்டார். இன்னைலேந்து புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கிறேன் சார். சரிம்மா உக்காரு சார் கிட்ட கேட்டு உனக்கு என்ன வேலை எல்லாம் சொல்றேன். சரி சார். ஒவ்வொருவராக வர ஆரம்பித்து இருந்தனர். அந்த மேலாளர் ஆதித்யா விற்கு போன் செய்து ஆயுதா வந்ததை தெரியப்படுத்தினார். ஆயுதாவிற்கு உடலில் ஒரு பதற்ற்றம் இருந்தது. வெகு நாட்களுக்கு பின் சேர்ந்த வேலை எந்த தவறும் நடக்காமல் வேலை உண்டு தான் உண்டு என்று இருக்க வேண்டும். எந்த அவப்பெயரும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அவளுக்கு இப்போது குழந்தைகள் தான் உலகம்.
ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் மனதில். அந்த மேலாளர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் எனக்கு வேலை சொல்லித்தரும்படியும் அவர் வந்த பிறகு எனக்கான பொறுப்புகள் தரப்படும் என்றும் கூறினார். ஆயுதா சென்று அவளருகில் அமர்ந்து கொண்டு சில சின்ன சின்ன வேலைகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள். மணி 11 தொட்டது. ஆதித்யா வந்தார். ஆயுதா காலை வணக்கத்தை தெரிவித்தாள். சாதாரணமாக இருங்க ஏன் இப்படி பதட்ட படறீங்க. அப்படிலாம் இல்ல சார். புதுசா இருக்கு அதான் கொஞ்சம். சரி ஆய்டும். சரி உங்களுக்கு என்னென்ன வேலை யார் கிட்ட நீங்க reporting எல்லாம் சொல்லிடறேன் நோட் பண்ணிக்கோங்க. சரி சார் என்று கூறியவுடன் என்னிடம் ஒரு டைரி நீட்டினார். இதுல நீங்க டெய்லி basis ல எல்லாத்தையும் நோட் பண்ணிக்கோங்க அப்போ அப்போ எனக்கு தெரிய படுத்துங்க. ஏதாவது என்கிட்டேந்து வேணும்னா சொல்லுங்க என்றார். அவளுக்கான பொறுப்புகள் வரையறுக்கப்பட்டது.
![](https://img.wattpad.com/cover/228514103-288-k611546.jpg)
VOCÊ ESTÁ LENDO
ஆயுதா - ஒரு பெண்ணின் கதை
Romanceஅன்று அவள் தன்னுடைய முதல் நேர்முக தேர்வு க்கு தயாராகி கொண்டிருந்தாள், வெகு நாட்களாக எந்த வேலையும் கிடைக்க வில்லை. அவளுக்கு அநுபவம் இல்லாமல் இல்லை. ஆனால் இடையில் ஏற்பட்ட நிறைய வாழ்க்கை மாறுதல்கள் அவளுக்கு வேலை கிடைப்பதை கொஞ்சம் கால தாமதம் ஆக்கியது.