ஆயுதா 9

14 0 0
                                    


நான் திங்கள் கிழமைலேந்து வரேன் என்று சொல்லிவிட்டாள் தான் ஆனாலும் இன்னும் தன்னை தயார் செய்யவில்லை அவள். எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்யும் ஆயுதாவால் தனது வாழக்கையில் திட்டமிடாமல் செய்த காரியங்களால் வந்த சில விளைவுகள் திரும்பவும் நினைவிற்கு வந்தது.

ஆயுதா விடுதிகிட்டக வந்துட்டோம்மா, உள்ள வந்து வார்டனிடம் சொல்லிட்டு உன்ன விட்டுட்டு போறேன். அப்போதான் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும். இல்லேன்னா அவங்க அனாவசியமாக சந்தேக பட ஆரம்பிச்சுருவாங்க. இல்லண்ணா நான் சொல்லிக்கறேன். ஒன்னும் பிரச்னை இல்ல அவங்களுக்கு என்ன நல்லா தெரியும். நான் சின்ன வயசிலேந்து இங்க தான் இருக்கேன். ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

சரிம்மா நான் கிளம்பறேன் சொல்லிவிட்டு சென்றுவிட்டான் பாரதி. ஆயுதா உள்ளே சென்று வார்டனிடம் நடந்ததை கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள். உடை மாற்றி குளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனாலும் சிறிது நேரம் தனது படுக்கையில் அதே உடுப்புடன் அமர்ந்து கொண்டு அன்று நடந்த அனைத்தையும் நினைத்துக்கொண்டாள். அன்று நடந்த அனைத்தும் அதிலும் பிரத்யேகமாக ம்ரித்யு அவனை சுற்றியே தன் நினைவுகள் செல்வதை அவளால் தடுக்க இயலவில்லை. அவளுக்கு இரு வேறு விதமான மனநிலைகள் உண்டானது. ஒரு புறம் அவள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள் ம்ரித்யுவின் அருகாமை அவளுக்கு அந்த மனநிலையை கொடுத்து இருந்தது. இன்னொன்று அவளுக்கு உண்டான பயம் எங்கே அவன் தன் வாழ்வில் இல்லாமல் போய் விடுவானோ என்ற பயம்.

முதன் முதலில் அவனை தன்னுடைய கல்லூரி வளாகத்தின் அருகாமையில் உள்ள கோவிலுக்கு செல்லும் வழியில் தான் பார்த்தாள். தினமும் ஆயுதவிர்க்கு அந்த பிள்ளையார் கோவிலுக்கு செல்வது வழக்கம். தன்னால் இயன்றவரை சென்று விடுவாள். அன்று காலை 7 மணி வெள்ளிக்கிழமை. சதுர்த்தி என்று அவசர அவசரமாக கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தாள். பிள்ளையாரை பார்த்து விட்டு கல்லூரிக்கு சென்று உணவருந்தி விட்டு தான் தன்னுடைய பிரிவிற்கு செல்ல வேண்டும். சதுர்த்தி ஆகையால் சற்று கூட்டம் இருந்தது கோவிலில். ஆகையால் சற்று தாமதம் ஆகிவிட்டிருந்தது கல்லூரிக்கு செல்வதற்கு. பிள்ளையாரை வணங்கி விட்டு வழியில் வந்து கொண்டிருந்த போது ம்ரித்யு தன்னுடன் ஒரு பெண்ணை வண்டியில் வைத்து அந்த கோவிலுக்கு கூட்டிக்கொண்டு வந்திருந்தான். அப்போது அந்த பெண் உள்ளே செல்ல இவன் கோவிலின் அருகாமையில் நிழலில் தன் வண்டியின் மீதே அமர்ந்து கொண்டிருந்தான். அப்போது ஆயுதா சாலையை கடக்க முயன்ற ஒரு வயதான பாட்டி, ஏம்மா பொண்ணு என்ன கொஞ்சம் அங்க கொண்டு போய் விடறியா, வாங்க பாட்டி கூட்டிட்டு போறேன். கொண்டு போய் விட்டு அவள் திரும்போது அவன் அவளையே கவனிப்பதை பார்த்தாள். அவன் ஏன் என்னை பார்க்கின்றான் என்று நினைத்து வந்தவள் திடீரென்று வந்த லாரியை பார்க்க மறந்தாள். லாரி பக்கத்தில் வந்து பிரேக் இட்டு நின்றது. ஆயுதா கண்களை மூடிக்கொண்டு கத்தி விட்டாள். லாரி ஓட்டுநர் நன்றாக அவளை திட்டி விட்டு சென்று விட்டான். அந்த நேரம் ம்ரித்யு அவளை காப்பாற்ற வேண்டி வண்டியில் இருந்து இறங்கி 2 அடி எடுத்து வைத்திருந்தான். ஆனால் ஒன்றும் ஆகாதது போல் திரும்ப ஆயுதா வருவதற்குள் போய் வண்டியிலேயே அமர்ந்து திரும்ப அவளை பார்க்க ஆரம்பித்தான்.

ஆயுதாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது கொஞ்சம் தன்னை ஆசுவாச படுத்திக்கொள்ள நினைத்தவள் அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகில் உள்ள பெஞ்சில் அமரலாம் என்று அங்கு சென்றாள். ஆனால் ம்ரித்யு தன்னைப்பார்ப்பது தெரிந்தது. இவன் என்ன இப்படி நம்மை பார்க்கின்றான் என்று நினைத்தவள் பரவாயில்லை என்று அந்த பெஞ்சில் சென்று அமர்ந்தாள். அவன் உடனே அவளிடம் வந்து தன்னிடம் உள்ள தண்ணீர் பாட்டிலை கொடுத்தான். அவளும் தனக்கு இது தேவை தான் என்று குடித்தாள்.
தேங்க்ஸ் என்றாள். பார்த்து வந்திருக்கலாமே என்றான். அவளுக்கும் தெரியும் இவனை பார்த்ததால் தான் நிலை தவறியது என்று, அவனுக்கும் தெரியும் அவள் அவனை கவனித்தால் தான் நிலை தடுமாறினாள் என்பது. இருவரும் ஒன்றும் சொல்லிக்கொள்ள வில்லை. தெரியாம வந்துட்டேன். கொஞ்சம் தவறிருந்தா என் உயிரே போயிருக்கும் என்றான். அவள் என்ன சொன்னீங்க, இல்ல கொஞ்சம் தவறி இருந்தான் உங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லாம போயிருக்கும் என்றான். அவள் அவனையே பார்த்தாள் அவனும் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். இருவரும் தன்னிலை மறந்து இருந்தார்கள். எங்கிருந்தோ வந்த ஒரு வண்டியின் சத்தம் கேட்டு அவள் தான் முதலில் சுதாரித்தாள். எழுந்து கொண்டாள், இருவரும் பெயர் ஊர் எதுவும் கேட்டுக்கொள்ள வில்லை. நடை வேடமிட்டு ஓடினாள் ஆயுதா, அவன் கண்களில் இருந்து தப்பிக்க நினைத்து பாவம் அவளுக்கு தெரியவில்லை. கண்களில் இருந்து தப்பித்தாலும் இதயம் அவனை அவளிடம் வசப்பட வைத்து விட்டது என்பதை. அவன் இல்லாமல் இவளும் இவள் இல்லாமல் அவனும் இருக்க முடியாது என்ற நிலை வரப்போகின்றதென்பது.

ஆயுதா - ஒரு பெண்ணின் கதைWhere stories live. Discover now