ஆயுதா 25

5 0 0
                                    

எல்லா பெண்களின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் ஆண்களின் அத்துமீறல் இருக்கும். பெண்களுக்கு அதை எதிர்கொள்ள திறமையும் மனோதிடமும் வேண்டும். ஆயுதா எத்தனை நேரம் அழுதாளோ, ஆனால் காலை அவர்கள் சென்றது முதல் அழுது கொண்டே இருந்தாள். நேரமும் கடந்து கொண்டே இருந்தது. அலுவலகத்திற்கு சென்று 12 நாட்கள் ஆகி விட்டது. என்ன நினைத்திருப்பார்களோ ? தன்னுடைய கைபேசியை தேடி எடுத்து அதனை charge போட்டாள். எழுந்து குளித்தாள், கொஞ்சம் ஆசுவாசம் கிடைத்தது. சுவாமி அலமாரிக்கு சென்று ஸ்வாமிக்கு விளக்கேற்றினாள். இத்தனை நாட்கள் தன்னுடைய நிலை இப்படி மோசமாக இருந்ததற்கு அவரிடம் முறையிட்டாள். பின் இனிமே தன்னை இத்தனை கஷ்டங்களில் வைக்காமல் இருக்க வேண்டிக்கொண்டாள். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. தனக்கு நல்ல மனோதிடம் வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். தன்னை தயார் செய்து கொண்டாள். குழந்தைகளுக்கு உணவு தயார் செய்தாள், தானும் கொஞ்சம் சாப்பிட்டாள், தன்னால் இப்போது உள்ள சூழலில் மூலையில் முடங்குவது என்பது முடியாத நிலை. குழந்தைகள் வளர்ப்பது இப்போது முக்கியமாக பட்டது. அவளுக்கு என்று இருக்கும் சிறு உலகமே அதுதான். வீட்டை துடைத்து துப்புரவு செய்தாள். அரவிந்த் வந்துவிட்டு சென்ற எந்த தடயமும் அங்கு அவளுக்கு இனிமே தேவை இல்லை. சார்ஜில் இருந்த கைபேசியை எடுத்து அவனுடைய எண் மற்றும் அவனை சார்ந்த எல்லோருடைய எண்களையும் block listல் போட்டாள். இனிமேல் இப்படி ஒரு தவறு தன் வாழ்வில் நடக்க கூடாது என்று மனதில் யோசிக்கும் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள முடிவு செய்தாள். ஆதித்யாவிற்கு போன் செய்ய மனதில் தைரியம் கொஞ்சம் இல்லைதான். ஆனாலும் அவள் இப்போது அந்த வேலையில் இருந்து தான் ஆக வேண்டும். அதனால் அவருக்கு போன் செய்ய எண்ணை அழுத்தினாள். சிறிது நேரத்தில் ஆதித்யா போனை எடுத்தார். சார் நான் ஆயுதா பேசறேன் சார் என்ற அடுத்த வினாடி, ஆயுதா நம்ப ஆபீஸ் புது இடத்துக்கு மாத்திட்டோம்மா, நீங்க அந்த புது ஆபீஸ்க்கு நாளைக்கு வந்துருங்க உங்களுக்கு விலாசத்தை உங்க கைபேசிக்கு அனுப்பி வைக்கறேன். ஏதாவது உதவி என்றால் எனக்கு போன் பண்ணுங்க, நாம எல்லாத்தையும் நேர்ல பேசிக்கலாம்னு சொல்லிட்டு போன் வைத்து விட்டார். ஆயுதாவிற்கு ஆச்சர்யமாகவும், அதே நேரம் கடவுள் தன்னை கைவிடவில்லை என்றும் தோன்றியது. சந்தோஷப்பட்டாள், இந்த 12 நாட்கள் நரக வேதனைக்கு இந்த செய்தி அவளுக்கு கொஞ்சம் நிம்மதியையும் தந்திருந்தது. அந்த அலுவகத்திற்கு திரும்பவும் அரவிந்த் வந்தால் என்ன செய்வது என்ற ஒரே வினாவிற்கும் இப்போது விடை கிடைத்துவிட்டது. ஆனால் அரவிந்த் சும்மா இருப்பானா, அவனை இந்த காவலர்கள் என்ன செய்து இருப்பார்கள், இல்ல திரும்பவும் தொல்லை கொடுப்பானா, அவனுக்கு புது விலாசமும் தெரிந்து விட்டால் என்ன செய்வது, வீட்டையும் காலி செய்து விட வேண்டும். என்று தனக்கு தானே கேள்விகள் கேட்டு அவளே சில பதில்களையும் கூறிகொண்டே இருந்தாள். குழந்தைகள் பள்ளியில் இருந்து drawing class முடித்துஇருப்பார்கள். சென்று கூடி வர வேண்டும் என்று எழுந்தாள். குழந்தைகள் வந்துவிட்டிருந்தார்கள். அம்மா அப்பா போய்ட்டாங்களாம்மா ? யது கேட்டவுடன் அவளுக்கு தூக்கி வாரி போட்டது. யது மது கேளுங்க அவர் உங்க அப்பாலாம் இல்லப்பா அவர் uncle என்னோட காலேஜ் ல ஒண்ணா படிச்சோம் அவ்ளோ தான் கண்ணுங்களா யாரையும் அப்பான்னு லாம் இனிமே கூப்பிட கூடாது. உங்க அப்பா சாமிகிட்ட போய்ட்டாருப்பா என்றுவிட்டு அழுது விட்டாள், குழந்தைகள் அவள் அழுவதை கண்டவுடன், சரிம்மா அழாத இனிமே அப்படி பண்ணல என்று ரெண்டும் அவளை கட்டிக்கொண்டது. ஆயுதாவிற்கு குழந்தைகளை எந்த அளவிற்கு அரவிந்த் தயார் செய்து விட்டான் என்றே தோன்றியது. இரவு குழந்தைகளுக்கு உணவு கொடுத்து படுக்க வைத்தாள் மறுநாள் தான் அலுவலகத்திற்கு செல்வதற்கு தனக்கு வேண்டியதையும் எடுத்துக்கொண்டாள். நிம்மதியாக இருந்தது படுத்து விட்டாள். உறக்கம் தான் வருவேனா என்றது. தன்னுடைய கல்லூரி காலங்களை நினைத்துக்கொண்டு உறங்கினாள். இனிமேல் விடுகின்ற பொழுதுகள் அனைத்தும் அவளுக்கு நல்ல விடியலை தரும் என்று நம்புவோமாக.

ஆயுதா - ஒரு பெண்ணின் கதைTempat cerita menjadi hidup. Temukan sekarang