இவ்வளவு தொல்லை கொடுத்த அந்த அரவிந்து யார் என்று இப்போது பார்க்கலாமா ? சொல்ற அளவுக்கு பெரிய அறிமுகம் எல்லாம் அவனுக்கு குடுக்க முடியவில்லை. அவன் ஆயுதாவிற்கு செய்த கொடுமைகள் அப்படி. ஆனாலும் எல்லோரும் பிறப்பில் கெட்டவர்கள் அல்லவே, ஏதேனும் ஒரு சூழ்நிலை தான் அவர்களுக்கு இவ்வாறு செய்ய வைத்து விடுகின்றது. இதில் கெட்டவர்கள் அவர்கள் அல்ல அவர்களின் சூழ்நிலைகளே. ஆனாலும் எல்லா சூழ்நிலைகளிலும் தன்னை நிதானம் செய்து கொள்ள வேண்டும் கெட்டவர்களாகவும் நல்லவர்களாகவும் மாற்றும் சூழ்நிலையை எதிர் கொள்ளும் திறன் எல்லோருக்கும் அமைந்து விடாது. இதில் முதல் ரகம் தன்னை திடம் செய்து கொண்டவள் இரண்டாம் ரகம் அரவிந்த், சூழ்நிலையை தவறாக மாற்றிக்கொண்டவன்.
அரவிந்த் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர், அவனுக்கு ஒரு அண்ணன் படிப்பு வராது அவனுடைய நண்பர்கள் சகவாசம் எல்லாம் சேர்ந்து அவனது தந்தைக்கு அவனை கண்டிப்பதிலேயே கவனம். தாயின் மறைமுக அனுசரிப்பு கேட்ட போதெல்லாம் கொடுக்கப்பட்ட பணம், அவனை கொஞ்சம் கெட்டவனாகவே வளர செய்தது. தந்தையின் கெடுபுடி அவனுக்கு வெளியில் இருந்த சுதந்திரம் இரண்டையும் அவன் தவறாக எடுத்துக்கொண்டு இவ்வாறு அவனை ஆக்கியது. ஒரு நிலைக்கு மேல் தந்தை அவனை கண்டிப்பது உதவாதது என்று விட்டு விட்டார். அண்ணன் படித்து ஏதோ ஒரு நல்ல வேலைக்கு சென்று கல்யாணம் செய்து தன் வாழ்க்கையை சரி செய்து கொண்டு விட்டார். அரவிந்த் இவ்வளவு காலங்கள் வீணடித்து விட்டு இப்போது யோசித்து இந்த கல்லூரியில் சேர்ந்திருந்தான். கல்லூரிக்கு வந்த முதல் நாளே ஆயுதாவை கண்டு அவளை காதலிக்கும் முடிவுக்கு வந்தான். அவளை எப்போதும் தன்னுடன் இருக்கும்படி பார்த்துக்கொண்டான். கல்லூரிக்கு எல்லோருக்கும் முன் வந்து அவளுக்காக காத்திருந்து அவளுடன் மட்டும் பேசி அவளுடனே வெளியில் செல்லும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டிருந்தான். அளவுக்கு மிஞ்சிய கண்டிப்பும் மனிதனை குற்றவாளியாக்கும் என்பதற்கு அரவிந்த் வாழ்க்கை ஒரு உதாரணம். இதுவே போதும் அவனை பற்றி என்று நினைக்கின்றேன்.
ŞİMDİ OKUDUĞUN
ஆயுதா - ஒரு பெண்ணின் கதை
Romantizmஅன்று அவள் தன்னுடைய முதல் நேர்முக தேர்வு க்கு தயாராகி கொண்டிருந்தாள், வெகு நாட்களாக எந்த வேலையும் கிடைக்க வில்லை. அவளுக்கு அநுபவம் இல்லாமல் இல்லை. ஆனால் இடையில் ஏற்பட்ட நிறைய வாழ்க்கை மாறுதல்கள் அவளுக்கு வேலை கிடைப்பதை கொஞ்சம் கால தாமதம் ஆக்கியது.