அதற்குப்பிறகு பல நேரங்களில் பல இடங்களில் இருவரும் சந்தித்து இருந்தனர். ஆனாலும் அவர்கள் இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் பரிமாற்றப்படவில்லை. பார்வைகள் மட்டுமே சந்தித்துக்கொண்டன. அதில் இருவருக்குள்ளும் 1000 அர்த்தங்கள் இருந்தன. உன் பார்வை ஒன்றே போதுமடி பெண்ணே இந்த உலகில் நான் ஜீவிக்க என்பது போல் இருந்தது ம்ரிதுயு அவனது பார்வை. நீ பார்க்கும் பார்வைக்காகவே உயிர் வாழ்கிறேனடா என்பது போல் இருந்தது நம் ஆயுதாவின் பார்வை. இப்படியே அவர்கள் 2 ஆண்டுகள் கடந்து விட்டிருந்தனர். இப்போது தான் முதல் முறையாக பேச்சு வார்த்தையும் அடிகளும் பரிமாறி இருந்தது. இரவு நேரம் கடந்து கொண்டே இருந்தது அவளுக்கு தூக்கம் என்பது கண்களில் இல்லை. ம்ரித்யு வாங்கி கொடுத்த உடை முதன் முறையாக தனக்காக ஒருவர் ஒரு உடை வாங்கி கொடுத்திருப்பதே அவளுக்கு பெரிய விஷயம். அதிலும் இதனை விலை உயர்ந்த உடை அதனை தடவி பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
உடையின் வனப்பு, அதன் வண்ணம், கண கச்சிதமாக தனக்கென அளவெடுத்தாற்போல் இருந்தது. அவனது பார்வை தன்னை எப்படி எல்லாம் அளந்திருக்கின்றது என்பதை யோசித்தாள். ஒரு புறம் கோவம் வந்தாலும் வெட்கமும் சேர்ந்தே வந்தது. சிரித்துக்கொண்டாள். எதனை நேரம் இப்படியே அமர்ந்திருப்பது என்று எழுந்து குளித்து உடை மாற்றி அந்த உடையை பத்திரப்படுத்தினாள். அந்த நினைவுகள் மட்டுமே மிஞ்சும் என்று அப்போது அவளுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவனை நினைத்து இப்போது வெட்கம் கொண்டிருக்க மாட்டாள்.
விளக்கை அணைத்து விட்டு படுத்துக்கொண்டாள். நாம அவனை காதலிக்கின்றோமோ என்றே இருந்தது அவளது யோசனை. ஆயுதா உனக்கு இதல்லாம் கொஞ்சம் ஓவர் டீ என்று மசாட்சி அவளுக்கு கூறியது. அதனை கேட்கும் நிலையில் அவள் இப்போது இல்லை. முகம் சிவந்து வெட்கம் பட்டுக்கொண்டிருந்தாள். அவன் தன்னை காதலிக்கிறான் என்பது அவளுக்கு நினைக்க நினைக்க தனக்கென ஒருவன் இருக்கின்றான் என்ற பெருமிதம் கூடியது. பாவம் யாரும் இல்லாமல் வளந்தவள் அல்லவா. எப்போது தூங்கினாளோ விடிந்து சூரிய வெளிச்சம் உள்ளே வரும் வரை தூங்கிக்கொண்டு இருந்தாள்.அவள் அந்நேரம் வரை தூங்குவது அதுவே முதல் முறை என்பதால் விடுதி வார்டன் அவளை ஒன்னும் சொல்ல வில்லை. ஏனம்மா உடம்பு சரி இல்லையா என்று கேட்டு கொண்டு சென்று விட்டார். எழுந்து குளித்து கல்லூரிக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்தாள். உடையை எடுத்து அவனிடம் திரும்ப தர மனமில்லை. ஆதலால் அதனை அறையிலேயே வைத்து விட்டு கிளம்பினாள். வரேன்ம்மா நான் கல்லூரியில் சாப்பிட்டு கொள்கிறேன் என்று கூறிவிட்டு புறப்பட்டாள் கல்லூரிக்கு. இன்று ஏனோ பொழுது அற்புதமாக விடிந்தாற்போல் தோன்றியது அவளுக்கு. இன்றே தன் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து விடும் அளவிற்கு சந்தோஷமாக இருந்தது. ஒரு புத்துணர்ச்சி தோன்றியது. விடுதியை விட்டு வெளியே வந்தவுடன் ஆச்சர்யமாக இருந்தது. ஒரு இடத்தில அப்படியே சிலை போல் நின்றுவிட்டாள்.
YOU ARE READING
ஆயுதா - ஒரு பெண்ணின் கதை
Romanceஅன்று அவள் தன்னுடைய முதல் நேர்முக தேர்வு க்கு தயாராகி கொண்டிருந்தாள், வெகு நாட்களாக எந்த வேலையும் கிடைக்க வில்லை. அவளுக்கு அநுபவம் இல்லாமல் இல்லை. ஆனால் இடையில் ஏற்பட்ட நிறைய வாழ்க்கை மாறுதல்கள் அவளுக்கு வேலை கிடைப்பதை கொஞ்சம் கால தாமதம் ஆக்கியது.