காலை 7 மணி எப்போதும் போல் பிள்ளையாரை பார்த்து விட்டு கல்லூரிக்கு செல்ல வேண்டும். நேரம் தவறி எழுந்ததால் எல்லாமே அவசர அவசரமாக செய்ய வேண்டி இருந்தது. விடுதி வார்டனிடம் சொல்லிவிட்டு கல்லூரிக்கு கிளம்பி வெளியே வந்தவள் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி நின்றாள். எதிரில் ஒரு பெஞ்சில் ம்ரித்யு தனது வண்டியில் அமர்ந்து இவளுக்காக காத்திருந்தான். நேற்று வரை எதுவும் இப்படி இல்லை. இன்று எல்லாமே மாறி இருந்தது. அவள் அவனை கண்டதும் இன்னும் புத்துணர்ச்சி வந்திருந்தது. முகம் முத்தாப்பாய் இருந்தது. பூவை பூவாய் மலர்ந்திருந்தாள். இருந்து எதையும் அவள் காண்பித்துக்கொள்ள விரும்ப வில்லை. இருந்தாலும் அவள் முகம் அவனுக்கு காண்பித்துக்கொடுத்து விட்டது. ம்ரித்யு இவளை பார்த்து ஹாய் என்று கை அசைத்தான். இவளது கை அவளையும் அறியாமல் காண்பித்தது. அருகில் அழைத்தான். சென்றாள். வண்டியில் ஏறும்படி கூறினான், ஏறினாள். எதுவும் பேசவில்லை. அவளை எப்போதும் செல்லும் பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிச்சென்றான். அவள் இறங்கி கோவிலுக்கு சென்று பிள்ளையாரை வணங்கிவிட்டு திரும்பினாள், ம்ரித்யுவும் அவளுக்கு அருகில் இருந்து சாமி கும்பிடுவது தெரிந்தது. அவனுக்கும் இது முதல் தடவை கோவிலுக்கு வருவது. அவளுக்கு அதுவும் அடுத்த ஆச்சர்யத்தை தந்திருந்தது. பிரசாதம் பெற்றுக்கொண்டு அருகில் இருந்த குளக்கரையில் இருவரும் அமர்ந்தனர். எப்போதும் அந்த குளத்தில் தண்ணீர் இருக்காது. இப்போது மழை பெய்திருந்ததால் கொஞ்சம் நீர் நிறைந்திருந்தது.
அமைதியாக உட்காந்திருந்தாள் ஆயுதா. அவளுக்கு இந்த குளக்கரையில் அமர்ந்திருக்க பிடிக்கும். சின்ன சின்ன குருவிகளின் சத்தம், கோவில் மணி ஓசை தெய்வீக மணம் கமழும் சுற்றுப்புற சூழல் ரம்யமான இசை என அந்த இடம் அவளுக்கு ஒரு மன நிம்மதியை தரும். ஆதலால் அவளுக்கு இங்கே இருப்பது ஒரு சந்தோஷமான விஷயம். இப்போது கூடவே ம்ரித்யு அவள் மனதுக்கு மிகவும் பிடித்து போன இடத்தில், எல்லாம் சேர்ந்து அவளை வானில் பறக்க வைத்து இருந்தது.
![](https://img.wattpad.com/cover/228514103-288-k611546.jpg)
VOCÊ ESTÁ LENDO
ஆயுதா - ஒரு பெண்ணின் கதை
Romanceஅன்று அவள் தன்னுடைய முதல் நேர்முக தேர்வு க்கு தயாராகி கொண்டிருந்தாள், வெகு நாட்களாக எந்த வேலையும் கிடைக்க வில்லை. அவளுக்கு அநுபவம் இல்லாமல் இல்லை. ஆனால் இடையில் ஏற்பட்ட நிறைய வாழ்க்கை மாறுதல்கள் அவளுக்கு வேலை கிடைப்பதை கொஞ்சம் கால தாமதம் ஆக்கியது.