5 - காபி வித் அவள் 😍

158 17 6
                                    

நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தேன். அந்த உணவகத்தில் ஒரு சிறு கலவரத்தை செய்து முடித்துவிட்டு. எனக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. நான் எழுதினால் அது நடக்கிறது. வாயை திறந்து கூறினால் அது நடக்கிறது.
சுருக்கமாக சொல்லப்போனால் என் கற்பனையில் வரும் அனைத்தும் நிஜத்தில் நடக்கிறது.

இது நான் கதை எழுத ஒரு தடையாக இருந்தது. என்னால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?

திடீரென்று என் கைப்பேசி கீச் என்றது. ஆம். அவளிடம் இருந்து ஒரு message!

Hi...

Haaaiiii... 😍

என் மனதுக்குள்... டேய்.. அடக்கி வாசி...

எப்டி இருக்கிங்க?

நல்லா இருக்கேன். நீங்க?

நானும் fyn.

apram?

ரொம்ப boring ah இருக்கு. எங்கேயாவது lunch ku meet பண்ணலாமா?

Sure.

அய்யய்யோ... ஆனந்தமே.... பாடல் என் மனதில் ஓட ஆரம்பித்தது.

அங்கே உயரமாக ஓர் இடம். வலது பக்கத்தில் சாலை. இடது பக்கத்தில் பள்ளம். இடையில் ஒரு மேஜை. மேஜை மேல் எங்கள் இருவரது கரங்கள். இதை விட அழகான இடத்துக்கு நான் வந்ததில்லை. அழகான அவள்‌ வேறு அருகில். இருவரும் காபி order செய்தோம். வந்து அறை மணி நேரம் ஆகியும் ஒன்றும் பேசாமல் இருந்தோம். அந்த அமைதியை நானே உடைக்கலாம் என எண்ணினேன்.

வந்து இவளோ நேரம் ஆச்சு. ஒண்ணுமே பேசாம இருக்கீங்க.?

இல்லைங்க. கொஞ்சம் depression ah இருந்துச்சு. அதான்... உங்களை பாத்தா positive ஆன ஆள் மாதிரி இருந்துச்சு. அது என்னமோ தெரில. ரொம்ப நாள் பழகின friend மாதிரி இருக்கீங்க. அதுக்கு தான் உங்களை வர சொன்னேன்.

அது தாங்க நம்ம speciality. சீக்கிரம் friend ஆகிடுவென். சரி... என்ன depression உங்களுக்கு?

வீட்ல ஒரே பிரச்சனை. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் அப்டின்னு எவ்ளோ சொல்லியும் இங்க வீட்ல கேக்க மட்டங்குறாங்க. என்னோட லட்சியத்தை முடிச்சுட்டு தான் நான் கல்யாணம் பண்ணுவேன். ஆனா.. வீட்ல ரொம்ப அவசரப்படுறாங்க. இது போதாதுனு தம்பிக்கு எதோ கழுத்துல cancer னு சொன்னாங்க. அவனும் 10 வருஷமா treatment எடுத்துட்டு தான் இருக்கான். இப்போ நிலைமை ரொம்ப மோசம் ஆகிடுச்சு அப்டின்னு டாக்டர் லாம் சொல்றாங்க!

கஷ்டம் தாங்க. இந்த வயசுல எல்லாருக்கும் இந்த மாதிரி problems இருக்கும். நீங்க சோகமா இருக்கிற நால சரியா போய்டுமா? யோசிச்சு பாருங்க? நான் இப்போ சொல்றேன். நீங்க வேனா பாருங்க. உங்க வீட்ல உங்க லட்சியத்தை புரிஞ்சுப்பாங்க. இன்னைக்கே phone பண்ணி சொல்லுவாங்க பாருங்க. கல்யாணத்த தள்ளி வெச்சிட்டோம் அப்டின்னு.

அது கூட பிரச்சனை இல்லைங்க. தம்பியோட health பத்தி நினைச்சா...

அதெல்லாம் சரி பண்ணிக்கலாம். இப்பாலம் எவ்வளவோ medical facilities வளர்ந்துட்டு வருது. ஒரு miracle மாதிரி உங்க தம்பிக்கு சரி ஆகும் பாருங்க.

என்னமோ. உங்க கிட்ட பேசுனா மனசு கொஞ்சம் நல்ல இருக்குங்க. ஓகே. thank you very much ram.

no thanks between friends.

Haha. Ok. Bye

Bye.

நாங்கள் இருவரும் சென்றுவிட்டோம். இருவருக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தது போன்ற ஒரு உணர்வு.

அன்று இரவு 9.45 மணி. அவளிடம் இருந்து ஓர் அழைப்பு. இந்த நேரத்துக்கு ஏன்? என்றொரு கேள்வி என் மனதில்.

ஹலோ??!

அங்கும் இங்கும் விலகாதே !!Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin