03 ) ரோட்டில் ட்ராஃபிக் ஜேமே இல்லாமல் அனைவரும் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தனர் . ( அடேய் ஒருத்தர ஒர்த்தர் இடுச்சு கீழ விழுந்தா தெரியும் ) . ஆனால் அப்படி ஒரு பயமே அல்லாமல் பறந்து கொண்டிருந்தனர் . காலில் ஒரு ஷூ இருந்தது . அற்கு கீழே நெருப்பு . ஃப்லையிங் ஷூஸாம் அதன் பெயர் . அதில் தான் நமது நாயகர்களான சூர்யா , விஷ்வா மற்றும் ஜான் மூவரும் பறந்து கொண்டிருந்தனர் .
" டேய் மச்சி , இன்னிக்கு தான் ஃபர்ஸ்ட் டே ட்யூட்டில ஜாய்ன் பண்ண போரோம் . ஐ அம் வெரி ஹாப்பி டா " என்றான் விஷ்வா .
" ஆமா டா . நானும் தான் . " ஜான் .
" கொஞ்ச நேரம் அமைதியா வாங்க டா , இடியட்ஸ் " என்று கத்தினான் சூர்யா .
" என்ன டா . இவன் இப்டி இருக்கான் . இவன் எப்ப எப்டி இருப்பான்னே தெரிய மாட்டிங்குது . " என்று சலித்துக் கொண்டான் ஜான் .
" என்ன ஆச்சு டா உனக்கு " விஷ்வா .
" எனக்கு என்ன . எதுவும் இல்ல " சூர்யா எதையோ யோசித்துக் கொண்டே கூறினான் .
இருவரும் அவனை ஆராச்சி பார்வை பார்க்கவும் அவன் " இல்ல மச்சி , எனக்கு என்னமோ ஒரு மாதிரி இருக்கு " என்றான் சூர்யா .
" என்ன மாதிரி இருக்கு டா " விஷ்வா .
" தெரியல டா . ஏதோ ஒரு மாதிரி இருக்கு . வானத்துல பறக்குற மாதிரி . " சூர்யா .
" அடேய் பக்கி . நீ பறந்துட்டு தான் இருக்க " என்று அவன் காலை வாறினான் விஷ்வா .
" அது இல்ல டா . அந்த ஃபீலிங் எப்டி இருக்கும்னு சொல்ல முடியல . ஆனா நல்லாருக்கு " என்றான் அவன் .
" ஆஹா . பையனுக்கு ஏதோ ஆகிருச்சு " ஜான் .
" போடா " என்றவன் அவனின் உலகத்திற்கு சென்றுவிட மற்றவர்களும் எதுவும் கூறவில்லை .
அவனின் மனதில் நேற்று நடந்ததே அவனை அச்சுருத்திக் கொண்டிருந்தது .
நேற்று இரவு :
அடுத்த நாள் காலை ட்யூட்டிக்கு செல்வதால் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தான் சூர்யா . மிகவும் நேரம் கழித்தே உறங்கினான் .
ESTÁS LEYENDO
வஞ்சம் தீர்க்க வருகிறாள். ( Completed )
Terror#2nd rank in story 27/10/2020 #1st rank in மர்மம் 27/10/2020 #1st rank in திகில் 27/10/2020 #6th rank in novel 27/10/2020 #5th rank in நாவல் 28/10/2020 #15th rank in நட்பு 27/10/2020 #3rd rank in கதை 27/10/2020