23) இமைக்கா நொடிகள்.

94 9 4
                                    

அத்தியாயம் 23


சூரஜ் hospitalஇல் படுத்திருந்தான். அவனது வயிற்றில் கத்தி ஆழமாக செருகவில்லை என்ற காரணத்தினால் மட்டுமே அவன் உயிர் பிழைத்தான்.

விஷால் தன் கையில் வைத்திருந்த சீட்டை எடுத்து பார்த்தான். அதில், DAVID என்று எழுதி இருந்தது. அதற்கு கீழ், "உன்ன பெரிய detectiveனு நான் நினைச்சா.... நீ லூசு மாதிரி googleஅ தேடுற. நீ எல்லாம் detectiveனு வெளிய சொல்லிக்காத." என்று எழுதி இருக்கவும், சூரஜ் நிஷாவின் கையில் இருந்து எடுத்த சீட்டை எடுத்து பார்த்தான்.

அதில்,

Divad க்கு கீழ் COOL ❌ LOOC என்று எழுதி இருந்ததல்லவா... LOOC என்பதை திருப்பி போட்டால் COOL என்று தான் வரும். எனவே... Divadஐ திருப்பி போடும்படி கூறியிருக்கிறாள். இதை நினைத்து தலையில் அடித்துக் கொண்டான் சூரஜ்.

அப்போது தான் அந்த சீட்டுக்கு பின்னால் ஏதோ எழுதி இருப்பதை உணர்ந்தவன், அதை திருப்பி பார்க்க, அதில், DAVIDஇன் புகைப்படம் இருந்தது. அதற்கு கீழ், இவன் தான் DAVID. இவன் தான் அவங்கள கொலை பண்ணான்... என்று எழுதி இருந்தது. அதை பார்த்தவன், அதிர்ந்து போனான்.


*

ஒரு வருடத்திற்கு முன் :-

நிஷா அதிர்ச்சியுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். இப்படியும் நடக்குமா... என்றிருந்தது அவளுக்கு. எப்படியோ பழக்கதோஷத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். மனம் வேதனையுற்றது என்னவோ உண்மை தான். கேவலம் ஒரு gameஇற்காக ஒருவனின் வாழ்க்கையையே பலி ஆக்கிவிட்டிருக்கின்றனர்.

நிஷா வேதனையுடன் படுக்கையில் விழ, அப்படியே அவள் உறங்கியும் போனாள்.

இருள் சூழ்ந்த இரவு, நிஷா எங்கையோ தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் முன் Liam, Matthew இருவரும் கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் இருந்தனர்‌. அதை பார்த்து அதிர்ந்தவளாக அவள், அசையாமல் நிற்க, அவ்விருவரும் இவளை நோக்கி மெதுவாக நடந்து வந்தனர். நிஷா பயத்தில் பின்னால் நகர, அவளுக்கு பின்னால் இறுகிய முகத்துடன் David நின்று கொண்டிருந்தான். இவள் கண்ணை இறுக்க மூடியபடி, காதை தனது கைகளால் மூடிக் கொண்டு நின்றாள்.  வெகுநேரமாகியும் எந்த சத்தமும் வராமல் இருக்கவும், ஒற்றைக்கண்ணை திறந்து பார்த்தாள். அங்கு யாரும் இருல்லை... திடீரென்று அவள் முன் விஷாலின் உடல் விழ, "விஷால்" என்று கத்திக் கொண்டே எழுந்தமரந்தாள் அவள்.

இமைக்கா நொடிகள்.. (Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ