இமைக்கா நொடிகள்.

104 11 2
                                    

அத்தியாயம் 16

விஷாலும், நிஷாவும் 97 வது தளத்தை வந்தடைந்தனர்.

நிஷா- விஷால், நமக்கு இன்னும் டைம் இருக்கு.. அதனால மெதுவாவே தேடு.. எதாவது கிடைக்கும்.. என்றவள், அந்த அறையை சுற்றி தேட ஆரம்பித்தாள்.  ஆனால் அவளது துரதிர்ஷ்டம் அங்கு எதுவும் உருப்படியாக கிடைக்கவில்லை.. மனதில் எதையோ முனுமுனுத்தவாரே தேடினாள்.

விஷால்- நிஷா.‌ இங்க வந்து பாரேன்.. என்று ஒரு தாளை எடுத்து பார்த்தவாறு அவளை அழைத்தான். இவன் அழைத்ததை கேட்டு பதறி போய் வந்தாள் நிஷா.

விஷாலின் கையில் இருந்த தாளில், நிஷா எழுதிய குறிப்புகள் அச்சு பிசகாமல் இருந்தது.‌ 'வேட்டை தொடரும்' என்று எழுதி, அதை solve செய்தும் வைத்திருந்தனர். இவளுக்கும் அதே எண் தான் கிடைத்திருந்தது.

விஷால்- நீ எழுதுனது இவங்களுக்கு எப்டி தெரியும்?

நிஷா- தெரியலையே.. அந்த paper என் கிட்ட மட்டும் தான இருந்துச்சு.. என்று கூறியவளுக்கு எதுவும் விளங்கவில்லை.

விஷால்- சரி.. வேற எதாவது கிடைக்குதான்னு பாப்போம்... என்றவன், மேலும் தேட ஆரம்பித்தான். ஆனால், நிஷாவினால் அது முடியவில்லை. ஏதோ சரியில்லை என்று மனம் கூறிக் கொண்டே இருந்தது.  அதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவளால் மேலும் அங்கிருக்க முடியவில்லை.. மூச்சு முட்டுவது போல் இருக்கவும், விஷாலின் தோளை தட்டினாள்.. அவன் திரும்பி பார்க்கவும், விஷாலின் தோற்றத்தை பார்த்து நிஷா அதிர்ந்தே விட்டாள். கண்கள் பச்சை மற்றும் சிகப்பு நிறத்தில் பளிச்சிட்டது.. அவனின் இதழ்கள் வெற்றி புன்னகை பூக்க, நிஷா பின்னால் நகர்ந்தாள்...

நிஷா- என்ன பண்ற விஷால்?? உன்னோட கண்ணுக்கு என்ன ஆச்சு??? என்று பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே நிஷா பின்னால் செல்ல, விஷால் மெதுவாக நிஷாவை நெருங்கி கொண்டிருந்தான். " நிஷா.. நான் தான் அவங்கள கொன்னேன்.. இப்போ அதுக்கு என்ன??" என்று தெனாவெட்டாக கேட்டான் விஷால்.

நிஷா- பொய் சொல்லாத விஷால். நீ எதுக்காக அவங்கள கொல்லனும்??

விஷால்- அதுக்கு காரணம் அவங்க தான்.. நான் சொன்னேன்.. அந்த gameல கலந்துக்காதிங்கன்னு.. ஆனா, அவங்க நான் சொல்றத கேக்கவே இல்ல.. என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவனின் கண்கள் வெளியே வர துவங்கியது.. பார்க்க மிகவும் கொடூரமானதாக அது இருக்கவும், நிஷா பயத்தில் அலறினாள்....

விஷால்- என்ன ஆச்சு நிஷா?? எதுக்கு கத்துற?? என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் வரவும், நிஷா பயத்தில் அவனை பிடித்து தள்ளி விட்டு விட்டு, வந்த வழியிலேயே கீழே இறங்கினாள். விஷாலுக்கு அவள் எதற்காக இப்படி நடந்து கொள்கிறாள் என்பது தெரியாததால், இவனும் பின்னாலையே சென்றான்.

வெளியே சென்ற பின்னர் தான் நிஷா நிதானத்துடன் இருந்தாள். அந்த அறையில் நடந்ததை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.

விஷால்- நிஷா.. என்று கத்திக் கொண்டே இறங்கவும், பயந்து போய் திரும்பினாள். முகம் வியர்த்துக் கொட்டியது.. அவளது நிறத்திற்கு ஆங்காங்கே சிவந்து போய் வேறு இருந்தது.

விஷால்- என்ன ஆச்சு நிஷா?? எதுக்கு இப்டி ஓடி வந்த?

நிஷா- உனக்கு என்ன ஆச்சு விஷால். நீ தான் Zombie மாதிரி  behave பண்ண ஆரம்பிச்சுட்ட. நீ தான் Liam, Matthewஅ கொன்னதா வேற சொன்ன.

விஷால்- என்னது?? நான் சொன்னேனா?? விளையாடாத நிஷா. நான் வேற எதாவது கிடைக்குமான்னு தேடிட்டு தான் இருந்தேன்.

நிஷா- அப்போ எனக்கு கேட்டது என்ன?? நீ எங்க கிட்ட இருந்து எதையாச்சும் மறைக்குறியா?

விஷால்- நிஷா... என்ன பாத்தா உனக்கு எப்டி தெரியுது??? பொய் சொல்றவன் மாதிரியா??

நிஷா- அப்டி இல்ல விஷால். ஆனா, நீ தான் சொன்ன. எனக்கு கேட்டுச்சே..

விஷால்- நீ பொய் சொல்லாத நிஷா.

நிஷா- நான் எதுக்கு பொய் சொல்லனும்?? உண்மையா தான் சொல்றேன். எனக்கு நீ பேசுனது கேட்டுச்சு.

விஷால்- வேண்டாம் நிஷா.. பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கு.

நிஷா- இல்ல விஷால். எனக்கு கேட்டுச்சு.. என்று அவள் பிடிவாதமாக மறுத்தாள்.

ஆனால், விஷால் இதை கேட்பதாக இல்லை. கோபத்துடன் சாலையில் நடக்க ஆரம்பித்தான்.

*


இமைக்கா நொடிகள்.. (Completed)Where stories live. Discover now