இமைக்கா நொடிகள்

151 13 15
                                    

அத்தியாயம் 07

சூரஜும் விஷாலும் அந்த கொலையை பற்றி விசாரிக்க துவங்கினார்கள்.

முதலில் Liamஇன் பின்னனி பற்றி தெரிய வேண்டும்.

அடுத்து, Matthewவின் (ரெண்டாவதா கொலை செய்யப்பட்டவன்) பின்னனி பற்றி தெரிய வேண்டும்.

விஷால், Matthewவை பற்றியும், சூரஜ், Liamஐ பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தனர்.

சூரஜ், Liamஇன் பக்கத்து வீட்டில் இருப்பவரிடம் விசாரிக்க வந்தான்.

Mr.Goody தான் வந்து கதவை திறந்தார்.

சூரஜ்- நீங்க தான  Liam neighbor.. நான் சூரஜ்.. Liamஅ பத்தி விசாரிக்க வந்துருக்கேன்..

Mr.Goody- வாங்க.. என்று கூறி அவனை வரவேற்றாலும், அவரின் முகத்தில் ஏதோ பயம் இருப்பதை சூரஜ் குறித்துக் கொண்டான்.

சூரஜ்- Liamஅ பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா.. அவர் எப்படி பட்டவர்??

Mr.Goody- அவர பத்தி எனக்கு அவ்ளவா தெரியாது. வீட்ட விட்டு வெளிய கூட வர மாட்டாரு..

சூரஜ்- அவங்க வீட்டுக்கு யார் யார் வந்து போவாங்கன்னு தெரியுமா?? என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தார் Mrs.Goody.

Mrs.Goody- Tea எடுத்துக்கோங்க.. என்று கூறி குடுத்தார்.

இவனும் எடுத்துக் கொள்ள, அவர் சென்று விட்டார்.

சூரஜ்- நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்ல..

Mr.Goody- அவரோட Friends சில பேர் வந்துட்டு போவாங்க.

சூரஜ்- சரி.. அவங்க யார்னு உங்களுக்கு தெரியுமா??

Mr.Goody- தெரியாது.. என்று கூறினாலும், அவருக்கு வேர்த்து ஊற்றியது. நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது..

சூரஜ்- உங்களுக்கு ஏன் இவ்ளோ வேர்க்குது??

Mr.Goody- ஒன்னும் இல்ல.. என்று கூறிக் கொண்டே அவர் மயங்கி சரிந்தார். சூரஜ் அதிர்ந்து போய், அவரின் கன்னத்தை தட்டி எழுப்ப, அவரோ எழவே இல்லை..

இமைக்கா நொடிகள்.. (Completed)Место, где живут истории. Откройте их для себя