இமைக்கா நொடிகள்

141 12 1
                                    

அத்தியாயம் 06

Lucas- என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன்.. என்றவன் அனைத்தையும் கூறி முடிக்க, நிஷா அவர்களை பார்த்து சிரித்து விட்டு, தனது துப்பாக்கியை எடுத்து அவர்களை குறி வைத்து சுட்டாள்.

அவளின் இதழ்கள் வெற்றி புன்னகை பூக்க, மகிழ்ச்சியுடன் வெளியே வந்தாள்.

அவள் சென்ற சில நிமிடங்களில் அவர்களின் phoneஐ track செய்து வந்தவன், இருவரையும் பார்த்து அதிர்ந்தான்.

Lucasஉம் Oliviaவும் இறந்து போய் இருந்தனர்.

சூரஜ் அங்கையே அமர்ந்து விட்டான். தான் வருவதற்கு முன், இங்கு வந்தவர் யார்?? என்றே யோசித்துக் கொண்டிருந்தான்.

அவனது பார்வை அங்கும் இங்கும் சுழல, அவனது பார்வையில் பட்டது ஒரு கைக்கடிகாரம். அதை ஒரு துணியை வைத்து எடுத்தவன், அதை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

அந்த கைக்கடிகாரத்தின் நடுவில், M&V என்ற எழுத்துக்கள் அழகாய் பொறிக்கப்பட்டிருந்தது. அப்படியானால், இது order செய்து design செய்யப்பட்ட ஒரு watch என்பதை அறிந்து கொண்டான். இந்த M&V யாராக இருக்கும், என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தவனின் ஃபோன் அடிக்க, இவனுக்கோ கோபம் தான் வந்தது.

அதே கோபத்துடன் அவன் எடுத்து பேச, அந்த பக்கம் கூறிய செய்தி கேட்டு அதிர்ந்து தான் போனான்.

சூரஜ்- வரேன்.. என்று மட்டும் கூறி விட்டு வைத்து விட்டான்.

*

Hospital-

சூரஜின் தாய் மயங்கி விழுந்ததாக   தகவல் வந்தது. அதனால் தான் அடித்து பிடித்து ஓடி வந்திருக்கிறான்.

சூரஜ்- Doctor.. அம்மா.. என்றவனால் மேலும் பேச முடியாமல் போக,  அமைதியாக விட்டான்...

Doctor- அவங்களுக்கு ஒன்னும் இல்ல sir. அவங்க நல்லா தான் இருக்காங்க. Stress அதிகமாகி தான் மயக்கம் போட்டுட்டாங்க. அவங்களுக்கு என்ன வேணுமோ அத பண்ணுங்க. என்று கூறி விட்டு அவர் செல்ல, சூரஜ் தன் தாய் அனுமதிக்கப்பட்டிருக்கும் wardக்கு சென்று பார்த்தால், அங்கு இவனின் தாய் இல்லை. இதை பார்த்தவனுக்கு தலையை பியித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

இமைக்கா நொடிகள்.. (Completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang