19) இமைக்கா நொடிகள்.

91 12 2
                                    

அத்தியாயம் 19

David அவள் பின்னாலையே சென்றான். முகம் இறுகி போய் இருந்தது. கடந்த பத்து வருடங்களாக அந்த அறையை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு, வெளியுலகில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

அவள் ஏதோவொரு அறைக்குள் நுழைய, அவள் பின்னாலையே யோசனையுடன் நுழைந்தான். அங்கு இவனை போலவே பலர் அமர்ந்திருந்தனர். அனைவரின் முகத்திலும் ஏதோவொரு இறுக்கம் தென்பட்டது. இவனும் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டான்.

நேரம் மட்டும் வேகமாக நகர்ந்ததே தவிற வேறு எதுவும் நடக்கவில்லை. இவன் அமைதியாக அமர்ந்திருந்தான். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, நடுத்தர வயதுடைய ஒருவர் உள்ளை நுழைந்தார்.

"எல்லாரும் எப்டி இருக்கிங்க?? நல்லா தான் இருப்பிங்கன்னு நினைக்கிறேன். இந்த பத்து வருஷம் உங்கள ரொம்ப மாத்திருக்கலாம். இப்போ, நம்ம ஒரு task நடத்த போறோம்.. அத பத்தி notice board பாத்து தெரிஞ்சூக்கோங்க.." என்றவர், வெளியேறி விட்டார்.

David மௌனமாக வெளியே வர, அங்கு notice board இருந்தது. அதன் அருகில் சென்றவன், அதை உற்று பார்க்க, அதில் "கண் இமைக்காமல் பார்க்கும் போட்டி இன்னும் சிறிது நாட்களில் நடைபெற இருக்கிறது. அதில் வெற்றி பெருபவருக்கு குறிப்பிடப்பட்ட தொகையும், வேலையும் அன்பளிப்பாக கொடுக்கப் படும்." என்று போடப்பட்டிருந்தது.

David மனதிற்குள்ளையே சிரித்துக் கொண்டு தனதறைக்கு சென்றான். இந்த வெள்ளை அறையில் இருப்பதற்கு அது எவ்வளவோ மேல் அல்லவா..


*


சூரஜுக்கும் விஷாலுக்கும் தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது. நிஷா  அவர்களை விட்டு சென்ற பிறகு, இவர்களும் ஏதேதோ யோசித்து பார்த்து விட்டனர். ஆனால், அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை. விஷாலின் மனம் யோசனையில் ஆழ்ந்திருக்க, சூரஜ் பேனாவை சுழற்றிக் கொண்டே ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தான்.

விஷால்- டேய்.. இந்த கேஸ் மூவ் ஆகவே மாட்டிங்குது டா.. என்க, அவனும் இதை பற்றியே தான் யோசித்துக்  கொண்டிருந்தான்.

இமைக்கா நொடிகள்.. (Completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang