இமைக்கா நொடிகள்..

457 16 6
                                    

அத்தியாயம் 01

2035:-

வெளியே சாரல் வீசுவது போல் அவன் மனதில் சாரல் வீசிக் கொண்டிருந்தது. அவன் நினைத்ததை செய்துவிட்ட மகிழ்ச்சியில் கண்கள் கலங்கி போயின. கர்வமும் மகிழ்ச்சஇயும் ஒன்று சேர, balconieஇல் நின்று மழையை இரசித்துக் கொண்டு இருந்தான் Liam.

திடீரென மழை வேகம் எடுக்க, பதறிக் கொண்டு மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

உடை முழுதும் நனைந்து இருந்ததால் குளித்து விடலாம் என்று முடிவு செய்து, Bathroomக்குள் நுழைந்தான்.

வெளியே வந்து கொண்டிருந்த மழை துளிகள் சட்டென நின்று விட்டது. கருமேகங்கள் இடம் பெயர்க்க, சாலையில் இருந்த நாய்கள் அனைத்தும் குரைக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் வெட்டிய மின்னலில் நாய்கள் தங்கள் இடத்திற்கு சென்று விட, நிலவு தன்னை மேகத்துக்குள் மறைத்துக் கொண்டது.

இங்கு, குளியலறைக்கு சென்ற Liam, Bathtubஇல் தண்ணீரை திறந்து விட்டு, அதனுள் அமர்ந்து கொண்டான். மனதில் இருந்த சந்தோஷத்தின் விளைவால், சுற்றுப்புறத்தை பார்க்க தவறி விட்டான்.

அறை முழுதும் மெல்லிய ஒலியில் பாடல் கேட்டுக் கொண்டிருக்க, Bathtubஇல் இருந்தவனும் சேர்ந்து பாடினான்.

It's England is my city!, with the Disney Channel flow
5 England is my city! months, never done before
Passed England is my city! man, PewDiePie is next
Man I'm England is my city!, got a brand new Rolex
And I'm England is my city! and I'm coming with the crew

என்று அவனும் பாட, திடீரென பாட்டு நின்று விட்டது. கண்களை சுருக்கி, phone இருந்த திசையை பார்த்தான். அங்கு Phone சூடாகி உருகி போயிருந்தது. அதை பார்த்து அதிர்ந்தவன், Bathtubஇல் இருந்து இறங்கி, Phoneஐ நோக்கி சென்றான். அதையே உற்று நோக்கிக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ தவறாக பட்டது.

பின்னால் யாரோ நிற்பது போல் இருக்க, திரும்பி பார்த்தான். சட்டென கோரமான உருவம் வந்து போனது போல் இருக்க, ஒரு நிமிடம் அவன் அசையாமல் நின்று விட்டான். இதயம் லப்டப் லப்டப் என்று அடித்துக் கொண்டது. குளித்திருந்தாலும் வேர்வை அவனின் உடலில் Running race விளையாடியது.

ஒரு முறை எச்சிலை விழுங்கியவன், தலையை ஆட்டி விட்டு, மீண்டும் Bathtubஇல் சென்று அமர்ந்து கொண்டான். மூலை சூடாகும் அளவுக்கு யோசித்தான்.

Phone எப்படி உருகியது.. என்று யோசித்துக் கொண்டே அமரந்திருந்தவனுக்கு மழை பெய்யும் சத்தம் கேட்கவே இல்லை என்பதே இப்போது தான் உறைத்தது.

வேகமாக குளித்தவன், உடையை ஏனோ தானோவென்று மாட்டிக் கொண்டு வெளியே வந்து பார்த்தான். வானம் தெள்ளத்தெளிவாக இருந்தது. சற்று முன் இங்கு மழை வந்தது என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி இருந்தது வானம். மனம் யோசனையில் ஆழந்திருக்க, வயிறு பசியில் கத்திய பிறகே யோசனையை கை விட்டவன், வயிற்றை நிரப்ப ஆரம்பித்தான்.

நேரம் சீக்கிரமாக கடக்க, Liam படுக்கையில் விழுந்தான். இது வரை அமைதியாக இருந்த மனம் இப்போது மீண்டும் தனது வேலையை ஆரம்பித்து விட்டது. நேற்று தான் ஒரு படம் பார்த்து, அதன் விளைவால் இரவு முழுவதும் உறங்காமல் இருந்தான். இப்போது, Phone உருகி போனதை நினைத்து கலக்கத்துடன் படுத்திருந்தான். மாலையில் இருந்த மகிழ்ச்சி இப்போது அவனிடம் இல்லை. மனதில் இனம் தெரியாத கலக்கம் இருக்க, போர்வையை முகம் வரை அழுத்து போர்த்திக்கொண்டு படுத்துவிட்டான்.

சில நிமிடங்களில் உறங்கியும் போனான்.

நல்லிரவு ஒரு மணி இருக்கும். அந்த படுக்கையில் குப்புற படுத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தவனின் முதுகில் ஏதோ பாராங்கல்லை வைத்தது போல் கனம் இருக்க, சட்டென விழித்துக் கொண்டான். மனம் படபடத்துக் கொண்டிருந்தது.

திரும்பி படுக்க நினைத்தான். ஆனால், முடியவில்லை.

திடீரென, அவன் மேல் அமர்ந்திருந்த கருப்பு உருவம் அவனை திருப்பி போட்டது.

அதன் கண்கள் வித்தியாசமாக இருந்தது. பாதி கண் சிவப்பு நிறத்திலும், பாதி கண் பச்சை நிறத்திலும் இருக்க, அதன் நடுவில் கருப்பு பந்து உருண்டு கொண்டு இருந்தது. அதன் கண்களில் இருந்து யாரோ வெளியே எட்டி பார்ப்பது போல் இருக்க, அதன் கண்களையே உற்று பார்த்தான் இவன்.

அந்த உருவம் ஒரு படி மேலே போய், அவனின் இமைகளை பிடித்து இழுத்து, அதன் கூறிய நகங்களால் அதை அறுத்து எறிந்தது. இப்போது வெறிரும் உருண்டை வடிவம் மட்டும் இருக்க, அந்த உருண்டையை வெளியே எடுத்து, அவனின் வாய்க்குள் தினித்தது. அவனோ கத்த முடியாமல் படுத்து இருந்தான்.

அவனின் கண்கள் இரண்டையும் பிடிங்கி, அவனின் வாய்க்குள்ளையே தினித்தது அது.

.
.





இமைக்கா நொடிகள்.. (Completed)Where stories live. Discover now