அத்தியாயம் - 17
David தனது அறையில் சோகத்துடன் அமர்ந்து இருந்தான். அவன் சாப்பிட்டே பத்து நாட்கள் ஆகி இருந்தது. பசி வயிற்றை கிள்ளியது. இதில் அந்த இத்து போன சுவற்றை வேறு வெறிக்க வேண்டுமாம். அது அழகாக இருந்தால் பார்க்க மாட்டானா?? அந்த சுவற்றின் வண்ணம் இவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. இந்த லச்சனத்தில் அதை இவன் அந்த சுவற்றை பார்த்துக் கொண்டேஏஏ இருக்க வேண்டுமாம்...
David - ஏன் இப்டி கொடும படுத்துறாங்க.. என்று நினைத்துக் கொண்டே படுத்தருந்தான்.
James- இன்னிக்கு எவ்ளோ நேரம் பாத்த? என்று திடீரன குரல் கேட்கவும், அதிர்ந்து போய் திரும்பினான் David.
David- பத்து மணி நேரம் பாத்துட்டேன் பா.. என்றான் சிறு அச்சத்துடன்.
James- வா வெளிய போலாம்.. என்று கூறியவர், அவனின் பதிலுக்கு கூட காத்திராமல் அவனை வெளியே இழுத்து சென்றார். பல நாட்களாக வெளியுலகத்தை பார்க்காமல் இருந்தவனுக்கு இது சொர்க்கமாக இருந்தது.
மகிழ்வுடன் அவர் பின்னே சென்றான். பாவம் அந்த மகிழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில் தொலைய போவதை அவன் அறிந்திருக்கவில்லை. அவனின் தந்தை அவனை ஏதோ பாழடைந்த பெரிய கட்டிடத்துக்குள் அழைத்து செல்ல, அவர் பின்னாலையே சென்றவனுக்கு எங்கு வந்துள்ளோம் என்பதே புரியவில்லை. ஏதோவொரு கடைக்கு அழைத்து செல்வார் என்று அவன் நினைத்திருக்க, இவரின் செயல் கொஞ்சம் மாறுபட்டதாக இருந்தது.
David- அப்பா.. நம்ம இப்போ எங்க போறோம்.. என்று குரலில் பயத்தை தேக்கி கேட்ட்டான். அவன் அப்படி கேட்ட அடுத்த நொடி, அவனின் கன்னத்தில் ஒரு அறை விழுந்திருந்தது.
அந்த அறையில் தடுமாறி போனான் David. ஏற்கனவே சாப்பிடாமல் இருந்தவன், அப்படியே கீழே சரிந்தான்.
*
மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
சூரஜ்- என்ன நடந்துச்சுன்னு சொல்லவே இல்ல.. என்று கேட்டான் குழப்பமாக.
YOU ARE READING
இமைக்கா நொடிகள்.. (Completed)
Mystery / Thrillerலன்டன் மாநகரில் கொடூரமான கொலை ஒன்று நடக்கிறது. எந்த அளவிற்கு என்றால், கொலை செய்யப்பட்டவரின் இமைகள் இரண்டையும் அறுத்து எறிந்து, அவர் கண்கள் இரண்டையும் பிடிங்கி கொலை செய்திருக்கிறார்கள். அதே நேரம் அதே இடத்தில் இன்னுமொரு கொலை. அதன் பின்னர் இரண்டு வருடங...